குடை 9
அத்தியாயம் 9
தன்னை வரவழைப்பதற்காக வேலையின் நிமித்தம் கூறி அழைத்தவனைப் பார்த்தவள், “ரொம்ப நல்லதுங்க! நான் யார்.. நான் எதற்கு இங்கே வந்திருக்கிறேன்.. என்று உங்களுக்கு தெரிஞ்சுருச்சு! இனி என்னை மற்றபடி பேசி.. டிஸ்டர்ப் செய்ய மாட்டிங்க! ஒகே ஹெர்கட் வித் ஷேவிங்கிற்கு.. டு தௌசன்ட் சார்ஜ் செய்வோம். அது மட்டுமில்லாம நான் வீட்டிற்கே வந்தே செய்றேன். அதுனால இன்னும் சார்ஜ் அதிகமாகும் பரவாலைங்களா..” என்றுக் கேட்டாள்.
அவள் பேசுவதை சுழல் நாற்காலியில் அமர்ந்து அசைந்தவாறு இரசித்துக் கொண்டிருந்த அர்ஜுன் “ம்ம்! இந்தியாவில் இருந்து ஹெர்கட் செய்ய மாலத்தீவிற்கு வந்திருக்கே! அதற்கும் எக்ஸ்ட்ரா சார்ஜ் வேண்டாமா..” என்றுச் சிரித்தான்.
அதிரா “ஆமாம் வேண்டும்!” என்றுவிட்டு சுற்றிலும் பார்த்தவாறு “எனக்கு வேண்டியது..” என்று இழுக்கவும், அவன் குளியலறையை கைக்காட்டினான். அங்கு சிகைத்திருத்தம் மற்றும் முகசவரம் செய்வற்கு வேண்டியது இருக்கவும், அத்தோடு பெரிய டவலையும் எடுத்து வந்தாள்.
துண்டை உதறி அவனது உடலை சுற்றி போடும் போது.. அர்ஜுன் “நான் சொன்னதை மறக்கலை தானே! என்னோட ஒப்பினியன் மாறலைன்னா.. நான் கொடுத்ததை நீ எனக்கு தரணும்.” என்றுக் குறுஞ்சிரிப்புடன் கூறினான்.
அவன் எதைக் குறிப்பிடுக்கிறான் என்று அதிராவிற்கு புரிந்தது. எனவே ஹெர்வாட்டர் ஸ்பிரே எடுத்து தலையில் அடித்தவாறு “ம்ம்! ஞாபகம் இருக்கு! இங்கிருந்து போகும் போது.. நீங்க என்கிட்ட நடந்துட்ட முறைக்கு பளார்னு அறை கொடுத்துட்டு போக சொன்னீங்க! நீங்க கண்டிப்பா அகிலாவை இங்கிருந்து அனுப்புவீங்க! அவ கூட நானும் போகப் போறேன். நான் என்ன சொல்ல வருகிறேன் என்றுப் புரிகிறதா..” என்று நயமாக கேட்டாள்.
அர்ஜுன் கண்ணாடியில் தெரிந்த அவளது பிம்பத்தை பார்த்தவாறு “அதாவது என்னோட ஒப்பினியனை மாத்த சொல்றே! இப்போ வரைக்கும் மாறலையே! என்ன செய்ய போறே! கிஸ் ஆர் ஸ்லேப்!” என்றுச் சிரித்தான்.
அதிரா அதற்கு பதிலளிக்காமல் கத்திரியையும் சீப்பையும் கையில் எடுத்துக் கொண்டாள். பின் சீப்பின் மூலம் இலாவகமாக சிறிது சிறிதாக முடியை எடுத்து.. வெட்டியவாறு பேசினாள்.
“நீங்க என்கிட்ட அட்வான்டெஜ் எடுத்து பேசி.. பழகினதுக்கு கொஞ்சம் நான்தான் காரணம்! உங்க மேலே எனக்கு சின்ன அட்ரெக்ஷன் இருந்ததை நீங்க கண்டுப்பிடிச்சுட்டிங்க! நாம் அந்த விசயங்களை அப்படியே விட்டுட்டு மூவ் ஆவது நல்லதுனு நினைக்கிறேன். உங்களுக்கு எப்படினு தெரியலை. முக்கியமா எனக்கு அதுதான் நல்லது. வெளிச்சத்தை பார்த்து ஆசைப்பட்டு.. வந்து மாட்டிட்டு சாகிற ஈசலா இருக்க விரும்பலை. அதனால் இனி அந்த மாதிரி எல்லாம் என்கிட்ட பேசாதீங்க!” என்றாள்.
பின் தொடர்ந்து “நீங்க அகிலா மேலே வச்சுருக்கிற அக்கறையில்.. அவ இந்த மாதிரி இடத்தில் இருக்க கூடாதுனு நினைக்கறீங்க! அந்த அக்கறையில் இருபது பர்ஷென்டெஜ் அக்கறையாவது என் மேலே இருக்குனு நினைக்கிறேன். அப்போ இந்த மாதிரி இடத்தில் நான் இருப்பதும் சரியில்லை. எனக்கும் இந்த மாதிரி பார்ட்டிஸ் ட்ரீ்ங்ஸ் அடிச்சுட்டு எல்லாரும் கூத்தடிக்கிறது பார்க்க பிடிக்கலை. அதுனால என்னையும் அகிலா கூட அனுப்பிருவீங்கனு எனக்கு தெரியும். அதனால ப்ளீஸ் இந்த மாதிரி டீஸ் செய்து பேசுவதை விட்டுருங்க.. எல்லா சமயமும் உங்க விளையாட்டை நான் பொறுத்துட்டு இருக்க மாட்டேன். என்னை அறைஞ்சுட்டு போகலானு விளையாட்டா சொன்னதை சீரியஸா எடுத்துட்டு அடிச்சுர போறேன்.” என்றுவிட்டு மெதுவாக கண்ணாடியில் தெரிந்த அவனது முகத்தை பார்த்தாள். அவன் முறுவலுடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அதைப் பார்த்து எரிச்சலுற்ற அதிரா “அதுதானே.. நான் எதுக்கு உங்க கிட்ட இதை எல்லாம் சொல்லிட்டு இருக்கேன். என் வாழ்க்கை என் இஷ்டம்! நான் என்ன டிசைட் செய்கிறோனோ.. அதைத் தான் செய்வேன். மற்றவங்க கையில் என் டிஷிஸனை கொடுக்க மாட்டேன்.” என்றவாறு அவளது வேலையில் மும்மரமாக இருந்தாள்.
அர்ஜுன் “இதுக்கு நான் பதில் சொல்லட்டுமா!” என்றான்.
பதில் பேசக் கூடாது என்று நினைத்தவாறு கண்ணாடியில் அவனது முகத்தைப் பார்த்தாள். குறும்பு கொப்பளிக்கும் அவனது கண்களை பார்த்ததும் “சொல்றேன் என்றுவிட்டு சொல்லாமல் இருந்தால் எப்படி!” என்று அவளது வாய் தானே பேசியது.
அர்ஜுன் “என்னை விரும்பிறதை நிறுத்துடா முட்டாள்! நீ இப்படி என்னை விரும்ப ஆரம்பிச்சா.. என்னால் போக முடியாது. அப்படித்தானே!” என்றுவிட்டு முறுவலித்தான்.
அதைக் கேட்டு ஸ்தம்பித்தவளாய்.. கண்ணாடியில் அவனைப் பார்த்தவாறு சிலையென நின்றாள்.
அவளுக்கே தெரியாத இரகசியம் அல்லவா அது!
கை அந்தரத்தில் நிற்க நின்றவளைப் பார்த்து சிரித்த அர்ஜுன், சுழற்நாற்காலியில் திரும்பி அவள் பக்கம் திரும்பி “வாட் அதி! என்னோட ஒப்பனியன் மாறவே மாறாது போல! நீ உன் பக்கம் என்னை இழுக்கிறது மட்டுமில்ல. பசக்குன்னு என் நெஞ்சில் ஒட்டிட்டேன்னு நினைக்கிறேன். என்னால் உன்னை விரும்பறதை நிறுத்த முடியாது. யூ ஆர் சோ க்யூட்! என் விருப்பத்தை தாண்டி உன்னால் போக முடியுமா!” என்று புருவத்தை உயர்த்தி கேட்டான்.
அதிரா சுயவுணர்வு பெற்றவளாய்.. அவனது நாற்காலியை பற்றி மீண்டும் கண்ணாடி புறம் திருப்பிவிட்டு தனது வேலையை தொடங்கினாள். அர்ஜுனிற்கு சிரிப்பு தான் வந்தது.
சிகைத்திருத்தம் செய்த பின்.. முகச்சவரம் செய்ய நுரையை அவனது முகவாயில் தடவியவள் “அப்போ உங்க சிஸ்டர் மேலே மட்டும் தான் அக்கறை போல! நான் யாரோ பொண்ணு தானே! என்னை இந்த புதைக்குழிக்குள் நீங்களே தள்ளி விடறீங்களே!” என்று.. அவன் கூறியதை வைத்தே.. மடக்க முயன்றாள்.
அது புரிந்து சிரித்த அர்ஜுன் “அகிலா என்னோட சிஸ்டர்.. அவ மேலே இருக்கிற அக்கறையில் தான்.. அவளை இங்கே இருந்து போக சொன்னேன். நீ நான் விரும்பற பெண்.. உன் மேலே இருக்கிற விருப்பத்தால்.. உன்னை என் கிட்டவே வச்சுக்க ஆசைப்படறேன்.” என்றுச் சிரித்தான்.
அவனுக்கு முகச்சவரம் செய்ய கத்தியை எடுத்திருந்த அதிரா “என்ன சொன்னீங்க..” என்றவாறு அவனது கழுத்தில் கத்தியை வைத்தாள். அவளது செய்கைக்கு மாறாக சிரிப்பை அடக்க அவளது உதடுகள் பெரும்பாடு பட்டது. அர்ஜுனின் பார்வை அவளது இதழ்களில் தான் இருந்தது.
“டு இட்!” என்றான்.
அதிரா “என்ன வெட்டிரவா!” என்றுக் கேட்டாள்.
அதற்கு அர்ஜுன் “வெட்டினாலும் ஒகே! சிரிச்சாலும் ஒகே!” என்றான்.
அதைக் கேட்டு இதழ்களை மடித்துக் கொண்டு சிரிப்பை அடக்கிய அதிராவிற்கு அவளை நினைத்தே கோபமாக இருந்தது. அவளால் ஏன் அவனிடம் கோபத்தையும் வெறுப்பையும் முழுமையாக காட்ட முடியவில்லை என்றுத் தெரியவில்லை.
முகச்சவரம் செய்கையில்.. அவளது முகம் அவனது முகத்தருகே குனிந்திருக்க.. அவளது பார்வை சவரம் செய்வதில் கவனமாக இருந்தது. ஆனால் நெருங்கியிருந்த அவளது முகத்தை மென்மையாக அவன் பார்த்த பார்வை.. அவளைத் தொல்லை செய்தது. எச்சில் இடறு விழுங்கியவாறு தனது வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தாள். அவனது பார்வையோ.. எச்சில் விழுங்கிய பொழுது ஏற்படும் தொண்டை குழி அசைவை கூட விட்டு வைக்கவில்லை.
சவரம் செய்த பின்.. துண்டு கொண்டு அவனது முகவாயை அழுத்த துடைத்தவளுக்கு.. அவனது எடுப்பான முகவாய் சிறு பித்தம் கொள்ள வைத்தது. ஆஃப்டர் லோஷனை எடுத்து அவனது கன்னத்தில் இருந்து முகவாய் வரை தடவியவளின் விரல்கள் சிறு நடுக்கம் கொண்டது. வேண்டுமென்றே தன்னை வரவழைத்து இந்நிலையில் நிறுத்தியிருக்கிறான் என்று அவளுக்கு புரிந்தது.
அதிராவின் கண்களில் காணப்பட்ட பித்தமும்.. விரல்களில் ஓடிய நடுக்கத்தையும் அர்ஜுன் உணர்ந்து தான் இருந்தான். அது அவனின் இரத்தவோட்டத்தை அதிகம் செய்து மூச்சு வாங்கியது.
தனது வேலையை முடித்துவிட்டு சிறு பெருமூச்சுடன் அதிரா நிமிரவும், தனது மேலிருந்த துண்டை வீசி எறிந்துவிட்டு எழுந்த அர்ஜுன் “யு ட்ரைவ் மீ க்ரேஸி அதி! எஸ்.. எல்லாத்துக்கும் நீதான் காரணம்! இப்போ இதுக்கு கூட நீதான் காரணம்.” என்றுவிட்டு அவளது பின்னந்தலையில் கையை வைத்து.. இழுத்து அவளது இதழ்களில் அழுத்த தனது வலிய உதடுகளை கலக்க விட்டான்.
நேற்று ஒரு கணம் அழுத்த பதித்து எடுத்த முத்திரை முத்தத்திற்கே விதிர்த்து போன அதிரா.. தற்பொழுது உயிருடன் கலந்து விட்டாற் போன்ற முத்தத்தினால் அவளது மேனியிற்குள் நரம்புகள் பின்ன.. மின்சாரம் பாய்வதை உணர்ந்தாள். அவனது அதிரடி உணர்வு தாக்குதலை தாங்கிக் கொள்ள முடியாது. அவனைத் தன்னிடம் இருந்து பிரிக்க எதானித்தவளின் கரம்.. தாக்குலைத் தாங்க பிடிப்பாக அவனது தோள்களையே பற்றிக் கொண்டது.
நீண்ட யுகம் போன்று கடந்த சில நிமிடங்களின் பின் மெல்ல தனது உதடுகளை அவளது இதழ்களில் இருந்து பிரித்தான் என்பதை விட.. அவனது உயிரினுள் இருந்து பிரித்தான் என்றுக் கூறலாம்.
மூச்சு வாங்க நிமிர்ந்தவனின் முகத்தில் இருந்த முறுவலை விழியகல பார்த்தவளுக்கு வேறு ஒன்றும் தோன்றவும், சுற்றிலும் பார்த்தவள்.. விதிர்த்தவளாய் எழுந்து அமர்ந்தாள். ஆம்.. அவள் அவனது படுக்கையில் கிடக்க அவன் அவளை நோக்கி குனிந்தவாறு அவளருகே படுத்திருந்தான்.
அதிரா எழுந்து அமர்ந்த வேகத்தைப் பார்த்து.. அர்ஜுன் சத்தமாக சிரித்தான்.
அவனும் எழுந்து அமர்ந்து “எப்படி பெட்டிற்கு வந்தோமினு தெரியலை.. இல்ல! எனக்கும் தெரியலை. எனக்கு நீ மட்டும் தான் தெரிந்தே!” என்றான்.
அதைக் கேட்டவளுக்கு.. உள்ளம் அச்சத்தில் நடுங்கியது. அவன் நிமிர்ந்திராவிடில்.. என்ன நடந்திருக்கும். அது கூடத் தெரியாமல் அவர்கள் இருந்திருக்கிறார்களா!
அவளுக்கு பின்னால் அமர்ந்திருந்த அர்ஜுன் “இனி என்னை விட்டுப் போவேன்னு சொல்வியா..” என்றுக் கட்டியணைத்தான்.
அவன் ஏற்படுத்திய அச்சம்.. அவன் கட்டியணைத்ததிலேயே கலைந்தது.
அர்ஜுன் “சொல்லு! எதுக்கு இத்தனை பயம்! உனக்கு என்னைப் பிடிச்சிருக்கு.. எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு! நானும்.. இது பாஸிங் க்ளவுட் மாதிரினு நினைச்சேன். ஆனா போக போக அப்படியில்லைனு தெரிஞ்சுருச்சு! உனக்கும் அப்படித்தான்னு எனக்கு தெரியும். இனி தடையில்லை தானே!” என்றுக் கேட்டான்.
அவளிடம் இருந்து பதில் இல்லாது போகவும், “இன்னும் என்ன..” என்றவாறு அவளது முகத்தை தலையை சரித்து பார்த்தான். அவளது முகத்தில் இருந்த சிறுப் பரிதவிப்பை பார்த்தவனுக்கு ஏதோ புரிய.. சிறு முறுவலுடன் அவள் எதிரே மண்டியிட்டு அமர்ந்தான். பின் அவளது இரு கரங்களையும்.. தனது இரு கரங்களால் சேர்த்து பிடித்துக் கொண்டான்.
“ஒகே! என்ன தான்.. இருந்தாலும்.. அந்த மூணு வார்த்தைக்கு பவரும் ரைட்ஸீம் அதிகம் தான் ஒத்துக்கிறேன். உனக்கு அந்த வார்த்தை தான் திருப்தி அளிக்கும் என்றால்.. சொல்கிறேன்.” என்றுவிட்டு சேர்த்து பிடித்து வைத்திருந்த அவளது கரங்களில் முத்தமிட்டு “ஐ லவ் யு அதிரா! இரண்டு நாளுக்கு முன் பார்த்த பெண்ணிடம் இதைச் சொல்வேன் என்று நான் சத்தியமா எதிர்பார்க்கலை.” என்று புன்னகைத்தான்.
அதிராவின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்து.. பின் சுருங்கியது.
அதைக் கண்டு கொண்ட அர்ஜுன் “எஸ் நான் டீஸ் செய்து உன்கிட்ட விளையாடினேன் தான்! இப்போ நான் கொடுத்த கிஸ்ஸும், சொன்ன வேர்ட்ஸும் அப்படியா தெரியுது!” என்றுப் புருவத்தைக் கேட்ட மறுகணமே மறுப்பாக தலையசைத்தாள். அவளது கண்களில் காதலும்.. மகிழ்ச்சியும் போட்டிப் போட்டுக் கொண்டு மின்னின.
அவளது நிறைந்த முகத்தைப் பார்த்தவன், “புதுசா காதலில் விழுந்த எக்ஸ்பீரியன்ஸ்… அப்பறம் கொஞ்சம் டீஸ் செய்ய நினைத்தேன். அதுனால தான்.. உன்னை அகிலா கூடப் போக வேண்டாம் என்று நினைச்சேன். ஆனா இப்போ..” என்றுவிட்டு மூக்கை சுருக்கியவன், “நீ அகிலா கூடவே இந்தியாவிற்கு போ அதி! அங்கே எனக்காக வெயிட் செய்! பத்து நாளில் வந்துருவேன். இப்போ அவசரம் அவசரமாக லவ் செய்ய நினைக்கிறே நாம்.. அங்கே நிதானமா லவ் செய்யலாம்.” என்றான்.
அதிரா தான் கேட்டதை நம்ப முடியாமல் பார்த்தாள்.
அவளது பிரதிபலிப்பை பார்த்து அர்ஜுன் சிரித்தவாறு “லவ் சொல்லாமல் மேட்டரை முடிக்கிற ஆள் என்று முடிவே கட்டிட்டியா!” என்றான்.
அதிரா “அச்சோ அப்படியில்லை.. உங்களோட அதிரடியான பேச்சும், வேகமான முடிவும், நம்ப முடியாத செய்கையும், உங்களுக்கும் எனக்கும் இருக்கிற அந்தஸ்து வேறுபாடும்.. அதனால் உங்க கிட்ட இருக்கிற குணாதிசயங்களும் என்னை பயமுறுத்துது.. உங்களுக்கு ஈடு கொடுக்க முடியுமானு தெரியல. நம்ம காதல் சாத்தியமாகுமானு புரியலை.” என்று மெல்லிய குரலில் கூறி முடித்தாள்.
அர்ஜுன் “ஓ காட்! ஏன் இப்படி!” என்றுச் சிரித்தவன், “ம்ம்! நீ டெய்லி பார்க்கிற சோஷைட்டி யங்ஸ்டர்ஸ் அப்படி.. டெய்லியும் நீ வேடிக்கை பார்த்தே பழகிட்டே! அதில் இருந்து ஒரு பையன் வந்து உன்கிட்ட பழகினா.. பயந்துக்கிறே! அந்த மாதிரி ஜஸ்ட் லைக் தட்டாக பழகுவேன்னோன்னு பயமா! நான் அப்படியில்லை அதி! நான் ஒரு விசயத்தில் ஆத்மார்த்தமா இருந்துட்டா! அதில் இருந்து எப்பொழுதும் மாற மாட்டேன். எனக்கான பெண்.. அதுவும்.. நான் இன்னும் செட்டில் ஆகாத டைமில் கிடைப்பாள் என்று நினைச்சு பார்க்கலை. எனக்கும் முதல் எக்ஸ்பீரியன்ஸ் தானே! இட்ஸ் ரியலி ஒன்டர்புல்! நான் ரொம்ப அமைஸ்டா இருக்கேன். அதனால என்னோட ஆக்ட்டிவிட்டிஸ் உனக்கு ரொம்ப ஸ்பீடா தெரியலாம். எனக்கு ஸ்லோவா இருந்து பழக்கம் இல்லை. ஆனா வேற வழியே இல்லை அதி! நான் இப்படித்தான்.. என்னை லவ் செய்தால்.. அதனால வருவதை நீ தாங்கி தான் ஆகணும்.” என்றுச் சிரித்தான்.
பின் தொடர்ந்து “ஆனாலும் நீ பயந்துக்கிற.. கொஞ்சம் நம்பிக்கை இல்லாம இருக்கே! வேண்டாம் அதி! இது நம்ம ரிலேஷனுக்கு டேன்ஞ்ரான ஒன்று!” என்றுச் சிரித்தான்.
அர்ஜுன் விளையாட்டாய் கூறியது உண்மையாகி போகும் என்று அவன் நினைக்கவில்லை.
அர்ஜுன் தொடர்ந்து புதிதான காதல் உணர்வில் திளைத்தவனாய் அதிராவின் பயத்தை போக்கவும், நம்பிக்கையை வளர்க்கவும், பேசினான். காதலிப்பவனின் கடமை.. காதலியின் பயத்தை போக்கி நம்பிக்கையை வளர வைப்பது தானே!
“நீ இந்தியாவிற்கு போய் எனக்காக வெயிட் செய்! இந்த பயம் போய் நம்பிக்கை வருதானு பாரு! லவ் செய்கிறவங்க.. ஒருத்தரின் அருகாமை இல்லைன்னா.. ரொம்பவே மிஸ் செய்வாங்கனு கேள்விப்பட்டிருக்கேன். அந்த மேஜீக் எனக்கு நடக்குதானு நான் பார்க்கணும். அப்போ இன்னும் நாம் உண்மையாக தான் காதலிக்கிறோமினு கான்பிடன்ட் வரும் தானே! அதையும் பார்த்திரலாம். இன்னைக்கு நைட் பார்ட்டில அகிலா கண்டிப்பா இருக்கணும்னு சொல்லிட்டாங்க! அதனால்.. அவ நாளைக்கு தான் போவாள். அவ கூட நாளைக்கு போயிரு!” என்றான்.
தனக்காக பேசுபவனை காதல் பொங்க பார்த்தாள்.
பின் எதையோ நினைத்து சிரித்த அர்ஜுன் “அதி! கடைசியில் நீ நினைச்சது நடக்கலை. என் சங்காத்தமே வேண்டான்னு ஓட பார்த்தே.. ஆனா கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி சம்பவமே நடந்துச்சு! நான் நினைச்சதும் நடக்கலை. உன்னை என் கூடவே வச்சுக்கணும்னு நினைச்சேன். ஆனா நடந்ததே வேற..” என்கவும்.. அதிராவும் உடன் சிரித்தாள்.
பின் அர்ஜுன் “மை னீ இஸ் ஹர்டிங்! எழட்டுமா” என்று அவளது கரங்களுக்கு மீண்டும் முத்தமிட்டு விடுவித்தவன் எழ முயற்சி செய்தான். ஆனால் அவனது தோளில் கரத்தை வைத்து அழுத்தி.. எழ விடாமல் தடுத்தவள், அவளது முகம் நோக்கி.. தயக்கமும் வெட்கமுமாக மெதுவாக குனிந்தாள்.
அர்ஜுன் முறுவலுடன் அவளது இதழ்களின் வருகைக்காக காத்திருந்தான். மெல்ல அவனது உதட்டில் தனது இதழ்களை பொருத்திவிட்டு நிமிர முயன்றவளின் இதழோடு அவனும் நிமிர்ந்தவன், பற்றிய அவளது இதழ்களை விடாது அவளோடு மீண்டும் படுக்கையில் சரிந்தான்.
இம்முறை அவனை விலக்கி தள்ளிவிட்டு கிளுகிளுத்து சிரித்தவாறு அந்த அறையை விட்டு ஓடினாள். அர்ஜுனின் சிரிப்பு சத்தம் அவளைத் துரத்தியது.
ஆசிரியர் பேசுகிறேன்:
சுள்ளென்று வெயில் அடிக்கிறதை பார்த்துட்டு.. நாம் வெளியில் வரும்போது.. நாம் வெளியே வருவதற்காக காத்திருந்த மழை நம்மை பார்த்ததும் படபடவென பெய்வதில் நனைஞ்சுருக்கீங்களா!
அப்போ நமக்கு மீண்டும் வீட்டிற்குள் ஓட தோணாது. நாம் போகிற இடத்திற்கும் விரைந்து போக தோணாது. நமக்காக பெய்த அந்த மழையை நின்று இரசிக்க தோணும். அந்த மழைக்கு இராணி என்கிற உணர்வு தரும்.
அதிரா தற்போது அந்த மாதிரி சூழ்நிலையில் தான் இருக்கிறாள். துளித்துளியாய் பெயும் இம்மழை அடைமழையாக மாறும் போதும் நிற்பாளா!
- 1 Forums
- 10 Topics
- 16 Posts
- 0 Online
- 28 Members