குடை 8
அத்தியாயம் 8
அர்ஜுனின் இறுகிய அணைப்பில் உருகியவளின் நெகிழ்வை இரசித்தவன், மெல்ல விலகி அவளது முகத்தைப் பார்த்தான். இமைகளை மூடி இருந்தவளைப் பார்த்தவனின் முகம் மென்மையை தத்தெடுத்தது. அவளது கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டான். அதில் திடுக்கிட்டு படக் என்று இமைகளை திறக்கவும், அவளைப் பார்த்து சிரித்துவிட்டு.. விலகியவன், டிரைவரை இருக்கையை ஒட்டியிருக்கும் சிறு சன்னலை திறந்து.. முகவரியை கூறி.. வீட்டிற்கு போக கூறினான்.
அவன் பேசுவது புரியாது பார்த்துக் கொண்டிருந்தவளிடம் “இது இங்கிலிஷ் கலந்த மலையாளம் தான்! புதுசா கேட்கிற மாதிரி இருக்கா..” என்றுச் சிரித்தவன், எழுந்து நின்று சோம்பல் முறித்தான்.
நகர்ந்து கொண்டிருந்த வண்டியில் மனதில் உற்சாகத்துடன் நிற்பது அவனது மனதில் உற்சாகத்தை மேலும்.. அதிகப்படுத்தியது போன்று இருந்தது. ஏதோ தோன்ற குனிந்து அதிராவை பார்த்தான்.
அதிரா அவனைத் தான் கண்ணில் கேள்வியுடன் முகவாயை நிமிர்த்தி அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
அர்ஜுன் “வாட் அதிரா!” என்கவும், அதிரா “இதுக்கு என்ன அர்த்தம்?” என்றுக் கேட்டாள்.
அர்ஜுன் புரியாது “எதுக்கு?” என்றுக் கேட்டவாறு அவளது முன் மண்டியிட்டு அமர்ந்தான்.
அதிரா “இப்படி பேசறதுக்கு! இப்படி நடந்துக்கிறதுக்கு! ஜஸ்ட் இன்ஃபெக்ஷன்ல இப்படியெல்லாம் நடக்காது.” என்றவளுக்கு நா தழுதழுத்து.
அவளது தடுமாற்றத்தை முறுவலுடன் பார்த்தவன், “அப்போ இதுக்கு பேர் என்ன.. லவ்வா! இல்லை.. ஒரு பெண் கூட தனியா இருக்கிறதாலே அட்வான்டேஜ் எடுத்துக்கிறதா! லோக்கலா.. சொல்லணுன்னா.. தனியா இருக்கிற பெண் கிட்ட தப்பா நடந்துக்கிட்டேனா..” என்றுக் கேட்டு சிரித்தான்.
அவன் கூறியதைக் கேட்டு.. அதிரா திகைக்கவும், அர்ஜுன் “ஹெ எதுக்கு இப்படி ஷாக் ஆகிறே! சின்ன ஏ ஜோக்! இப்போ எதையும் யோசிக்காதே.. ஜஸ்ட் ப்ரீயா விடு.” என்றான்.
அதிரா “நான் எதுக்கு ஷாக் ஆகணும். நான் அகிலா கூட.. நாளைக்கு இந்தியாவிற்கு கிளம்பிருவேன். அதுனால நீங்க என்கிட்ட நடந்துக்கிற முறை எல்லாம் தப்பு தான்..” என்று அவனைப் பார்க்காமல் எங்கோ பார்த்தவாறு கூறினாள்.
அர்ஜுன் தலையை திருப்பி.. வண்டி வீட்டை நெருங்கிவிட்டதைப் பார்த்துவிட்டு.. தலையை திருப்பியிருந்த அதிராவின் முகவாயை பற்றி தன் புறம் திருப்பினான். பின் “நாளைக்கு உன்னைப் பற்றிய என் ஒப்பனியன் மாறியிருந்தா நீ தாராளமாக போகலாம்.. இப்போ உன்னை கிஸ் செய்ததிற்கு சேர்த்து பளார்னு என் கன்னத்தில் அறைந்து விட்டு கூட செல்லலாம். ஆனா ஒப்பனியன் மாறலைன்னா.. இந்த மாதிரி நீயே தரணும்.” என்றவன், அவன் என்ன கூறினான்.. என்று அவள் உணரும் முன் குனிந்து அவளது இதழில் அழுத்த முத்தமிட்டு நிமிர்ந்தான்.
அதிரா அவனது அதிரடியின் தாக்கத்தில் இருந்து விடுபடாது இருந்ததால் வண்டி நின்றதை அவள் உணரவில்லை. அர்ஜுன் வண்டியில் இருந்து குதித்ததையும் உணரவில்லை.
அகிலா “அதிரா அதிரா..” என்றுவிட்டு மூன்றாவது முறை “அதிரா” என்று கத்தவும் தான் சுயவுணர்விற்கு திரும்பினாள்.
அகிலா “என்ன அதிரா! திருதிருன்னு முழிச்சுட்டு உட்கார்ந்திருக்கே பயந்துட்டியா! நீ சேஃப்பா வீடு வந்தாச்சு. இறங்கி வா..” என்றாள்.
ஆனால் அதிரா தன்னை முத்தமிட்டு விட்டு.. ஒன்றும் நடவாதது போல் நின்றிருந்த அர்ஜுனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
வீட்டின் கதவில் இருந்த கண்ணாடியில் கலைந்திருந்த தனது சிகையை திருத்திக் கொண்டிருந்த அர்ஜுனின் தோளில் தட்டிய அகிலா “அவளுக்கு ஹெல்ப் செய்யேன். நீ தானே ஏத்தி விட்டே.. இறக்கியும் விட்டுரு! இறங்க தெரியாமல் விழிக்கிற பார்..” என்றான்.
உடனே அதிரா “நானே இறங்கிறேன்.” என்றுவிட்டு மெதுவாக நகர்ந்து நுனிக்கு வந்து குதித்தாள்.
குதித்து தடுமாறியவளை பிடித்து நிறுத்திய அகிலா “அதுதான்.. அர்ஜு ஃபோனை வீட்டிற்கு வந்து தரேன்னு சொன்னானே! அதுக்குள்ள.. யார் உன்னை போக சொன்னது! கொஞ்ச நேரம் என்னை பயப்பட வச்சுட்டியே!” என்ற பின்பே.. தனது செல்பேசி இன்னும் அர்ஜுனிடம் இருப்பது அதிராவிற்கு நினைவிற்கு வந்தது.
எனவே அகிலாவிடம் “அகி! இன்னும் என் ஃபோன்.. அவர் கிட்ட தான் இருக்கு..” என்றாள்.
அதற்கு அகிலா “இன்னும் நீ உன் ஃபோனை அவன் கிட்ட இருந்து வாங்கலையா! அப்போ இத்தனை நேரம் என்ன செய்துட்டு இருந்தீங்க?” என்று ஆச்சரியமாக கேட்டாள்.
என்ன செய்துட்டு இருந்தீங்க? என்ற கேள்வியில் அதிரா திகைப்புடன் அர்ஜுனை பார்க்கவும், அவன் அவளது செல்பேசியை கையில் வைத்தவாறு நின்றிருந்தான்.
அகிலா “கொடு..” என்று கையை நீட்டிக் கொண்டு போகவும், சட்டென்று மீண்டும் பாக்கெட்டில் போட்டுக் கொண்ட அர்ஜுன் “இது உன் ஃபோனா..” என்றான்.
அகிலா இருவரையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு.. “அர்ஜு! உன் விளையாட்டை அவ கிட்ட காட்டாதே! கொடு ஃபோனை..” என்றாள்.
அதற்கு அர்ஜுன் “அதை அவ சொல்லட்டும்.” என்கவும், இருவரையும் விசித்திரமாக பார்த்த அகிலா “ஹெ உங்க இரண்டு பேருக்கும் என்னாச்சு!” என்று கேட்டாள்.
அர்ஜுன் “நான் சொல்லட்டுமா..” என்று அதிராவை பார்த்து கேட்டான்.
உடனே விருக் விருக் என்று நடந்து வந்த அதிரா செல்பேசிக்காக கையை நீட்டினாள்.
அர்ஜுனோ நீட்டிய அவளது கரத்தை பற்றிக் கொண்டான். அகிலா வாயை பிளந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தாள். அதிரா “அர்ஜுன் விடுங்க..” என்பதற்குள்.. அவளது கரத்தை விட்டவன், செல்பேசியை அவளது கரத்தில் திணித்துவிட்டு.. “உன்னை டீஸ் செய்து விளையாடுவது நல்லா தான் இருக்கு!” என்றுச் சிரித்துவிட்டு உள்ளே சென்றான்.
அகிலா அதிராவிடம் “அவன் பேசியதை எல்லாம் பெருசா எடுத்துக்காதே! நீ என் பிரெண்ட் என்கிறதாலே டீஸ் செய்கிறான். அவ்வளவுத்தான்..” என்று அவளை ஆறுதல்படுத்தவதாய் எண்ணி கூறினாள். அதுவே அதிராவை மேலும் குழப்பியது.
அப்பொழுது சற்றுமுன் அவளிடம் நடந்துக் கொண்டது பேசியது எல்லாம் வெறும் விளையாட்டா.. என்று அதிராவின் உள்ளம் பதறவும் செய்தது.
தோழிகள் இருவரும் உள்ளே செல்கையில்.. அங்கு அவர்களது பெற்றோர் ஷோபாவில் அமர்ந்திருக்க.. அவர்கள் முன் அர்ஜுன் நின்றிருப்பதைப் பார்த்தார்கள்.
அகிலா மெல்ல “இப்போ தான் நான் வாங்கி கட்டிட்டேன். இப்போ இவன் கோட்டா! வா நாம சைலன்ட்டா போயிருவோம்.” என்று அவளை இழுத்துக் கொண்டு படிக்கட்டை நோக்கி சென்றாள்.
அதற்குள் அகிலாவின் அன்னை கவனித்து “அகிலா! நான் சொன்னது நினைவிருக்கு தானே..” என்கவும், அகிலா நிற்காமல் “எஸ் மாம்..” என்றவாறு சென்றாள்.
ஆனால் அவளது அன்னை விடாது “நீ கூட்டிட்டு வந்த பொண்ணை..” என்று முடிப்பதற்குள்.. அகிலா “ஒகே! ஒகே!” என்றுவிட்டு படியேறினாள்.
அவர்கள் இருக்கும் இரண்டாம் தளத்திற்கு படியேறிய நேரத்தில் கீழே பேசுவது அவர்களுக்கு தெள்ள தெளிவாக கேட்டது.
அர்ஜுனின் தந்தை கார்த்திகேயன் “இங்கே வந்து எங்க மானத்தை வாங்க முடிவு செய்திட்டியா! இந்த மாதிரி அன்அஃபிஸியல் பார்ட்டிக்கு போக கூடாது ஜாக்கிரதையா இருக்கணும் என்று உனக்கு தெரியாதா! போலீஸ் கிட்ட மாட்டியிருந்தால் என்ன ஆவது! இன்டியன் சேனல்ஸில் உன் பேர் அடிப்பட்டு எங்க மானமே போயிருக்கும். நீ கெட்டதும் பத்தாது இப்போ உன் சிஸ்டரையும் இந்த மாதிரி இடத்திற்கு கூட்டிட்டு போயிருக்கியா..” என்றுச் சாடினார்.
படியேறி கொண்டிருந்த இருவர் நின்றுவிட்டார்கள்.
அகிலாவே தான்.. அந்த கேளிக்கை விருந்திற்கு சென்றாள். அந்த பழி அர்ஜுனின் மேல் விழுவதைக் கவனித்தார்கள். முதலிலேயே இம்மாதிரி பொய் பழிகளை ஏற்றுக் கொண்டதைப் பற்றி.. அர்ஜுன் சற்றுமுன் கூறியது நினைவிற்கு வரவும், அர்ஜுன் அதை மறுப்பான் என்றுப் பார்த்தால்.. அல்லது தன்னுடன் கேட்டுக் கொண்டிருந்த அகிலாவும் மறுப்பு தெரிவித்து பேசுவாள் என்றுப் பார்த்தாள். ஆனால் அர்ஜுன் அதே அசட்டையான பார்வையுடன் நிற்பதைப் பார்த்தாள். உடனே அகிலாவை பார்க்க.. அவள் வாயில் விரலை வைத்து.. அமைதியாக இரு என்பது போல் சைகை செய்துவிட்டு அதிராவை தன்னுடன் அழைத்துக் கொண்டு சென்றாள்.
கார்த்திகேயன் தொடர்ந்து “இந்த மாதிரி.. பிஹேவ் செய்வது.. சின்ன வயதில் இருந்து உனக்கு பழக்கமாகி போச்சு இல்ல!” என்றுக் கோபத்துடன் கேட்டார்.
அப்பொழுதும் முகத்தில் எவ்வித உணர்ச்சியும் காட்டாது.. அர்ஜுன் நின்றிருந்தான். அந்த அமைதியும் மேலும் கார்த்திகேயனுக்கு கோபத்தை கிளப்பும், “அர்ஜுன்! இங்கே நம்மை மாதிரி பெரிய மனுஷங்க புள்ளைங்களோட வந்திருக்கிற கெட் டு கெதர் பார்ட்டி! நீ சென்னையில் கூத்தடிக்கும் பார்ட்டி இல்லை! எல்லாரும் வரதுக்காக தான் வெயிட் செய்துட்டு இருந்தோம். ஒவ்வொருத்தரா எல்லாரும் இன்னைக்கு வந்தாச்சு! இனி பார்ட்டி களைக் கட்டும். அதுனால இனி இரண்டு பேரும் வேற எங்கேயும் போக கூடாது. நாளையில் இருந்து நாம் கொடுக்கிற பார்ட்டியில் இருந்தே.. ஆரம்பிக்க போகிறோம். சோ பிஹேவ் லைக் எ மெச்சூர்ட் பாய் ஆஃப் திஸ் பேமலி! டொன்ட் பி லைக் எ ரோக்! அன்டர்ஸ்டென்ட்..” என்றார்.
அர்ஜுன் மாறாத அசட்டையுடன் “அதாவது அன்அஃபிஸியலா நடக்கிற பார்ட்டியில் கலந்துக்க கூடாது. ஆனா அதே வேலைகள் நடக்கிற ஆஃபிஸியல் பார்ட்டியில் கலந்துக்க சொல்றீங்க! ஒகே டன்! பட் ஒன் கண்டிஷன்.. இந்த மெர்குரி குழிக்குள்ள நான் விழுந்தது போதும்.. அகிலாவை இழுத்து விட்டராதீங்க! அவளை நாளைக்கே இந்தியாவிற்கு அனுப்புங்க! நாளைக்கு பார்ட்டிக்கு வரவங்க.. உங்களோட இன்னொரு பொண்ணு எங்கேனு கேட்டா.. வெளிநாட்டிற்கு டூர் போயிருக்கானு வேணுன்னா பந்தாவா பொய் சொல்லிக்கோங்க..” என்றான்.
அர்ஜுன் பேசியதைக் கேட்டு ஆத்திரத்துடன் எழுந்த கார்த்திகேயன் “என்ன அர்ஜுன்! விட்டா பேசிட்டே போற!” என்றார்.
மாலதியும் ஆத்திரத்துடன் “ஒவ்வொரு வீட்டில் போய் பாரு.. மகன்கள் அவங்களோட பெரெண்ட்ஸிற்கு எவ்வளவு சப்போர்ட்டா.. ஒபிடியன்ட்டா இருக்காங்கனு தெரியுமா! ஆனா நீ மட்டும் ஏன் இப்படி அர்ஜுன்? உனக்கு வேண்டியது எல்லாம் வாங்கி கொடுத்து பாசமா தானே வளர்த்தேன்.” என்றார்.
அர்ஜுன் “ஓ.. அவங்களை மாதிரி இருக்கிறதா! அப்போ கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி அப்பா சொன்னாரே.. ரோக்! அந்த மாதிரி தான் இருக்க முடியும். என்னால் அப்படியிருக்க முடியாதும்மா! நீங்க பாசமா தான் அம்மா வளர்த்தீங்க! அந்த பாசம் இருக்கிறதால் தான்.. உங்க கிட்ட இப்படி அல்லாடி சண்டை போட்டுட்டு இருக்கேன். பாசமா வளர்த்த நீங்க.. பண விசயத்தில்.. ரேஸ் குதிரை போன்று.. யார் உசத்தி என்கிற பந்தயத்தில் கலந்துக்காம இருந்திருக்கலாம். அதனால என்ன செய்துட்டு இருக்கீங்க தெரியுமா! வர்த்தக்கத்தை சுரண்டும் கும்பலோடு கைக்கோர்த்திருக்கீங்க..” என்றவனின் குரல் உச்சஸ்தாயியில் சென்றது.
கார்த்திகேயன் “போதும் நிறுத்து அர்ஜுன்!” என்று அவர் அவனுக்கு மேல் கத்தவும், அர்ஜுன் “நிறுத்த தான் அப்பா வந்திருக்கேன்.” என்று அவனும் விரைப்பாய் நின்றான்.
உடனே மாலதி இருவருக்கும் நடுவில் புகுந்து “போதும் ப்ளீஸ்! இரண்டு பேரும் அமைதியா இருங்க! ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கிற விசயம் பிடிக்கலைன்னா.. இரண்டு பேரும் பேசிக்காதீங்க! வீணா சண்டை போடாதீங்க ப்ளீஸ்” என்றவருக்கு கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அர்ஜுன் அவரை அமைதியாக பார்த்துவிட்டு… படியேறினான்.
இவற்றை எல்லாம் இரண்டாம் தளத்தில் இருந்து கண்கள் குளம் கட்ட அகிலா பார்த்துக் கொண்டிருந்தாள். அதிரா சற்று தள்ளி நின்று.. கைகளை பிசைந்தவாறு நின்றிருந்தாள்.
இது அவர்களது குடும்ப விவகாரம்.. தான் அங்கு நிற்பது சரியில்லை. அதற்கு என்று அகன்று விட்டால்.. பிரச்சினை என்றதும் ஒதுங்கிறதாக படுமோ என்று சிறுத் தவிப்புடன் நின்றிருந்தாள்.
வேகமாக படிக்கட்டுகளை ஏறி வந்த அர்ஜுன் கண்கள் கலங்க நின்றிருந்த அகிலாவை பார்த்து “நான் சொன்னது நினைவிருக்கு தானே.. நாளைக்கு நீ கிளம்பிரணும்.” என்றுவிட்டு அவளைத் தாண்டிச் சென்றவனின் கண்ணில் அதிரா பட்டாள்.
அங்கு அகிலா இருந்திருக்காவிட்டால் என்ன நடந்திருக்குமோ.. அதிராவை அழுத்தமாக பார்த்துவிட்டு.. தனது அறைக்குள் புகுந்து கொண்டான்.
தோழிகள் இருவரும் முகம் சுருங்க நின்றிருந்தனர். பின் தனது அறைக்குள் புக முயன்ற.. அகிலாவை பிடித்து நிறுத்திய அதிரா “நாளைக்கு நாம் இந்தியா போகிறோம் தானே! டிக்கெட் புக் செய்தாச்சா..” என்றுக் கேட்டாள்.
அதற்கு அகிலா “ஓ.. அர்ஜுன் சொன்னதை வச்சு கேட்கறீயா! அதுக்கு முன்னாடி நான் என் பெரெண்ட்ஸ் கிட்ட வாங்கின டொஸ் பத்தி உனக்கு தெரியாது தானே!” என்றவள் ‘வா’ என்று அவளது கரத்தை பற்றி உள்ளே அழைத்துச் சென்றவள், படுக்கையில் அமர வைத்துவிட்டு.. சொல்ல தொடங்கினாள்.
“அர்ஜுக்கு கிடைச்ச மாதிரி… அந்த மாதிரி டர்டி பார்ட்டிக்கு போய் போலீஸில் மாட்டியிருந்தா மானம் போயிருக்கும்.. ப்ளா ப்ளா.. திட்டின பிறகு.. நாளைக்கு இவங்க வைக்கிற பார்ட்டிக்கு.. நல்லபடியா கலந்துக்கணுன்னு சொல்றாங்க! அப்பறம் இவங்க கூடவே இருக்கணுமாம். நாளைக்கு மட்டுமில்ல.. இனி இங்கே நடக்க போகிற எல்லா இவென்ட்டிலும்.. அந்த பிளாக் கார்ட் தீபக் கலந்துக்குவான். அவனை பார்த்தாலே எனக்கு கோபம் பத்திட்டு வருது. இதுக்கு.. இந்த அர்ஜு அவனை அடித்திருந்தால் கூட ஒரு அற்ப சந்தோஷம் கிடைத்திருக்கும். அந்த தீபக்கை என்னால் மறுபடியும் பார்க்க முடியாது. எனக்கு அவன் தொட்டது ஞாபகம் வருது.. வாந்தி வர மாதிரி இப்போ கூட குமட்டுது.” என்று முகத்தை சுளித்தாள்.
தோழியின் நிலை புரிந்து.. அவளது முதுகில் தடவிக் கொடுத்தாள்.
பின் அவளது நினைவுகள் அர்ஜுன் அவளை அணைத்ததும்.. முத்தமிட்டதும் நினைவிற்கு வந்து.. உச்சியில் இருந்து பாதம் வரை.. சில்லென்ற மின்சாரம் பாய்ந்தது.
விதிர்த்து போன அதிரா விட்டுப் போன பேச்சை தொடர்ந்தாள்.
“அப்போ நான் போகிறேன்.” என்றாள்.
அதற்கு அகிலா “என்னை அர்ஜு இங்கே விட்டு வைப்பான் என்று நினைச்சியா.. அதெல்லாம் அப்பா அம்மா பேச்சை தட்டி என்னை பேக் செய்திருவான். அதுனால நாளைக்கோ.. அல்லது அடுத்த நாளோ.. நாம் ஒண்ணாவே போகலாம்.” என்றாள்.
போவதில் பிடிவாதமாய் அகிலாவிடம் பேசிக் கொண்டிருந்த அதிராவிற்கு.. ‘என்னை விட்டு போக நினைச்சுராதே’ என்று அர்ஜுன் கூறியது நினைவில் ஆடியது.
அதிரா எங்கோ வெறித்து பார்த்தவாறு அமர்ந்திருப்பதைப் பார்த்து.. அகிலா அவளைப் பிடித்து உலுக்கி “என்னாச்சு.. திடீர் திடீரென்னு ஃபீரீஷ் ஆகிறே!” என்றாள்.
அதிரா “உன் அண்ணன் என்கிட்ட அறை வாங்கினா.. எப்படியிருக்கும்..” என்றுவிட்டு.. எழுந்து சென்றாள். அகிலா அவள் கூறியதைக் கேட்டு புரியாது திகைத்து அமர்ந்தாள்.
அப்பொழுது அகிலாவின் அறைக்கு அவளுடைய தாயார் வந்தார்.
மாலதி எடுத்த எடுப்பில் “நாளைக்கு.. நீ கூட்டிட்டு வந்த பெண்ணை இந்தியாவிற்கு அனுப்பிரு..” என்றார்.
அதற்கு அகிலா “அது என்ன பொண்ணு.. அவ பெயர் அதிரா! அட்லீஸ்ட் என் பிரென்ட் என்றாவது சொல்லுங்க..” என்றாள்.
மாலதி “ப்ச்! இப்போ அதுவா முக்கியம்! நாளைக்கு.. கெஸ்ட்ஸ் வர இடத்தில.. அந்த பொண்ணை சரி சரி.. உன் பிரெண்ட்டை கூட்டிட்டு வந்திராதே!” என்றுவிட்டு சென்றார்.
அவரது முதுகை முறைத்துப் பார்த்த அகிலாவிற்கு.. எப்பொழுது இங்கிருந்து போவோம் என்றிருந்தது. அடுத்த நாள் தோட்டத்தில் அன்று மாலையில் நடைப்பெறும் விருந்திற்கான ஏற்பாடுகள் நடைப்பெற்றுக் கொண்டிருந்தன. தனது அன்னை கூறியதை அதிராவிடம் எப்படிக் கூறுவது என்று அகிலா திணறிக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் சொல்ல தேவையிருக்காது.. அதிரா அவளது அறையை விட்டு வெளியே வரவில்லை.
மதிய வேளை நெருங்கிய பொழுது.. அவளது அறையின் கதவு தட்டப்பட்டது. யார் என்றுப் பார்த்த பொழுது.. அந்த வீட்டில் வேலை செய்யும் பணியாள் நின்றிருந்தான். அதிரா வெளியே வந்ததும்.. அவளுடைய வேலையான அழகுப்படுத்ததுதல் செய்ய.. வருமாறு ஆங்கிலத்தில் கூறினான். அவன் கூறியதைக் கேட்டு அதிரா திருதிருவென விழித்தாள்.
யார் அவளை அழைத்தது என்று எண்ணியபடி.. அவனின் பின்னால் சென்றாள். ஒருவேளை அகிலாவின் அன்னையாக இருக்குமோ.. என்று எண்ணியவாறு சென்றவள், எந்த அறைக்குள் செல்கிறோம் என்பதை கவனியாமல் விட்டுவிட்டாள். அறைக்குள் நுழைந்த பின்.. அங்கு நாற்காலியில் அமர்ந்திருந்தவனைப் பார்த்து திகைத்தாள்.
அர்ஜுன் “வா அதிரா! எனக்கு ஹெர்கட் செய்துவிடு.. என்றுக் கூப்பிட்டா வருவாயா என்பது டவுட் தான்! அதுதான் உன் ஜாப்பை மென்சன் செய்து கூப்பிட்டு வரச் சொன்னேன். ப்ளீஸ் ஹெர்கட் அன்ட் ஷெவிங் செய்துவிடு..” என்று மூக்கை சுருக்கி அழைத்தான்.
ஆசிரியர் பேசுகிறேன்;
பெரிய மழை பெய போகிற மாதிரி.. கருமூட்டமாக கருமேகம் சூழ்ந்திருப்பதை பார்த்துருப்பீங்க.. நாம் நினைச்ச மாதிரி.. நல்ல மழை பெய்யும். ஆனா சில சமயம் அந்த கருமேகங்கள் தானா கலைவதும் உண்டு.
இங்கே காதல் அடைமழை பெய்யுமா???
- 1 Forums
- 10 Topics
- 16 Posts
- 0 Online
- 28 Members