Forum

Notifications
Clear all

குடை 7

1 Posts
1 Users
1 Reactions
231 Views
rajianbu
(@rajianbu)
Admin Admin
Joined: 4 months ago
Posts: 13
Topic starter  

அத்தியாயம் 7

உறைந்த கணத்தில் இருந்து இருவராலும் சட்டென்று விடுப்பட முடியவில்லை. முதலில் சுதாரித்த அதிரா.. அவன் மேல் இருந்து எழ முயன்றாள். ஆனால் எழ விடாது இறுக பற்றிக் கொண்ட அர்ஜுன் “என்னை உனக்கு பிடித்திருப்பதை ஒத்துக்கோ.. அப்போ தான் விடுவேன்.” என்று பேரம் பேசினான்.

 

அதிரா அதிர்ந்தவளாய் “விடுங்க அர்ஜுன்!” என்றுத் திமிறினாள். ஆனால் அவளது முயற்சி தோல்வியுறவும், அவனது கையணைப்பில் இருப்பது.. அவளுக்கு சங்கடத்தை கொடுக்கவும்.. “ஆமா எனக்கு உங்களை பிடிச்சுருக்கு! ஆனா இது நெச்சுரல்.. இதுல ஒன்றுமில்லனு சொல்லியிருக்கீங்க..” என்பதையும் சேர்த்து கூறினாள்.

 

அதைக் கேட்டு அர்ஜுன் முறுவலுடன் அவளை விடுவித்தான். உடனே சட்டென்று எழுந்து தள்ளியமர்ந்தாள். எழுந்தமர்ந்த அர்ஜுனிடம் “வண்டியை வீட்டிற்கு திருப்ப சொல்லுங்க ப்ளீஸ்! உங்களைப் பிடிச்சுருக்கு.. ஆனா உங்க கூடத் தனியா இருக்க பிடிக்கலை.” என்றாள்.

 

அர்ஜுன் “பொய் சொல்லாதே!” என்றவன், தொடர்ந்து “தனியா இருக்க பயம் என்று வேண்டுமென்றால் சொல்லு! முதல்ல இல்லாத பயம் இப்போ வந்துருச்சு! முதல்ல இருந்த தைரியம் ஓடிப் போயிருச்சு!” என்றுச் சிரித்தான்.

 

அதிரா சிறுக் கோபத்துடன் “இப்போ உங்களுக்கு திருப்தியா! இதைத் தானே எதிர்பார்த்தீங்க! உங்களைப் பார்த்து நான் பயப்படணும். ஒரு பெண்ணுக்கு ஆணிடம் தோன்றும் பயத்தை வரவழைக்கணும் என்றுத் தானே நினைச்சீங்க! அதை சாதிச்சுட்டிங்க..” என்றவளின் கண்களில் குளம் கட்டியது.

 

அர்ஜுன் “ஹெ ஸ்டாப்! ஸ்டாப்! ஸ்டாப்! என்ன நீ ஜென்டர் இஷ்யு எல்லாம் கொண்டு வர! ஒகே நீ இந்த டாப்பிக்கை எடுத்ததால் நான் ஒண்ணு சொல்லவா! ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடம் வரும் ஈர்ப்பு எனக்கு கொஞ்சம் கொஞ்சம் உன் மேலே வருது. முழுசா ஈர்த்து.. நான் உன் பக்கம் முழுமையா வரதுக்குள்ள.. இங்கிருந்து ஓடிரு!” என்றுச் சிரித்தான்.

 

அவன் கூறியதைக் கேட்டு திகைத்து அமர்ந்தாள். அவளுக்கும்.. அர்ஜுன் மீது இதே எண்ணங்கள் தான்.. இது சாதாரண ஈர்ப்பு என்று அவளுக்கு தெரியும். ஆனால் இதை வளர விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள். ஆனால் அவள் மூடி மறைத்து வைத்த இரகசியத்தை.. அவன் அறியக் கூடாது என்று நினைத்திருக்க.. அவனோ வெளிப்படையாக அதைக் கூறியதைக் கேட்டு திகைத்து தான் போனாள்.

 

அவளது முகம் உள்ளத்தைக் காட்டும் கண்ணாடி போன்று இருந்ததோ.. அர்ஜுன் “என்னை மாதிரி.. வெளிப்படையா எல்லாம் சொல்லிரு! இப்போ தோன்றிய பயம் கூட போயிரும். கொஞ்ச நேரத்தில் அந்த ஈர்ப்பும் போயிரும்.” என்றுச் சிரித்தான்.

 

அதிராவிற்கு என்ன கூறுவது என்றுத் தெரியவில்லை. அவனது அதிரடியான பேச்சு, நடவடிக்கை மற்றும் உணர்வு தாக்குதலில் திணறினாள். அதனால் சுற்றிலும் வேடிக்கை பார்ப்பது போல் பாவனை செய்தாள்.

 

அர்ஜுன் “அகிலா கூடப் படிக்கறீயா?” என்றுக் கேட்டான்.

 

அதற்கு அதிரா மறுப்பாக தலையசைத்து “நான் கெலக்ஸி ஹோட்டலில் ப்யூட்டி பார்லரில் வொர்க் பண்றேன். அங்கே தான் அகிலாவோட பிரெண்ட்ஸ்ஷீப் கிடைத்தது.” என்றுக் கூறியவள், தொடர்ந்து “என்னை.. காலேஜ் போகிற இன்னொரு கோடீஸ்வரன் பொண்ணுன்னு நினைச்சீங்களா..” என்றுச் சற்று கிண்டலுடன் கேட்டாள்.

 

அர்ஜுன் திகைப்புடன் “எஸ் அப்படித்தான் நினைச்சேன். ஆனா ரொம்ப ரிசவர்ட் டைப், க்யைட் ஆனா கேர்ள் என்று நினைச்சேன். இப்பவும் சொல்றேன்.. நீங்க இரண்டு பேர் எப்படி பிரெண்ட் ஆனீங்க?” என்றுச் சிரித்தான்.

 

அதிரா முகம் சுருங்கியவளாய் “ஏன்.. அகிலா ரிச் கேர்ள் கூடத் தான் பிரெண்ட்ஸ்ஷீப் வச்சுக்கணுமா! நான் அவளுக்கு பிரெண்ட்டா இருக்க தகுதியில்லையா!” என்றுக் கேட்டாள்.

 

அதற்கு மறுப்பாக தலையசைத்த அர்ஜுன் “இல்லை! அகிலாவிற்கு இந்த மாதிரி இடத்துல இந்த மாதிரி பிரெண்ட் தான் வேணும். வேற மாதிரி பிரெண்ட் கிடைச்சுருந்தா.. அவ்வளவு தான்! அவளுக்கு இந்த மாதிரி பார்ட்டி எல்லாம் தேவையே இல்லை. என்சாய் பண்றதுன்னா.. இப்படி தான்னு தப்பா நினைச்சுட்டு இருக்கா! நீ அவ கூடச் சேர்ந்துட்டு இந்த மாதிரி.. பார்ட்டிக்கு எல்லாம் வந்திருக்க கூடாது. அட்லீஸ்ட் இங்கே நடப்பதைப் பார்த்துட்டு திரும்பி போயிருக்கணும். வேண்டாததை எல்லாம் பார்த்துருக்கீங்க! ஒருத்தரை ஒருத்தர் சப்போர்ட் செய்யறது மட்டுமில்ல.. கரெட்டான வழிக்கு கூட்டிட்டு போவதும் தான் உண்மையான பிரெண்ட்ஸ்ஷுப்!” என்றவனின் முகத்தில் வருத்தமான முறுவல் தோன்றி மறைந்தது. 

 

அதிரா கேட்டே விட்டாள்.

 

“ஏன் உங்களுக்கு சரியான பிரெண்ட்ஸ்ஷீப் கிடைக்கலையா!” 

 

அர்ஜுனின் பார்வை எங்கோ வெறித்தது. அமைதியாக சில கணங்கள் கடக்க.. நிலவொளியில் தெரிந்த நகரும் மலைமுகட்டினை பார்த்தவாறு அர்ஜுன் “நட்பு என்ற பெயரில்.. எனக்கு பெரிய புதைக்குழி தான் கிடைத்தது.” என்றவனின் முகத்தில் விரக்தியான முறுவல் தோன்றியது.

 

பின் அவளைப் பார்த்தவன் “புதைக்குழியில் விழுந்தவனை பார்த்தால் நீ என்ன செய்வே அதிரா?” என்றுத் திடுமென கேட்டான்.

 

அவன் பேசுவதின் அர்த்தம் புரியப்பட.. கூடா நட்பை பற்றிக் கூறுகிறார் என்று அவள் எண்ணமிட்டு கொண்டிருக்கையில் அர்ஜுன் அவளைப் பார்த்து கேட்கவும், எல்லாருக்கும் பதில் தெரிந்த கேள்வி தானே! என்பது போல் அவனைப் பார்த்துவிட்டு.. “விழுந்தவரை.. புதைக்குழியில் இருந்து வெளியே எடுக்க ட்ரை செய்வேன்.” என்றாள்.

 

அர்ஜுன் “அது நீ இருக்கிற சோஷைட்டியில்! நான் இருக்கிற சோஷைட்டியில் என்ன செய்தாங்க தெரியுமா! புதைக்குழியில் விழுந்தவனைப் பார்த்து சிரித்தாங்க.. பாருங்க எப்படி விழுந்திருக்கான்னு மற்றவங்க கிட்ட காட்டினாங்க.. துக்கம் விசாரித்தாங்க.. விழுந்தது எப்படியிருக்குனு ஆர்வமா விசாரிச்சாங்க.. ஏன் விழுந்தே பார்த்து போக தெரியாதனு திட்டினாங்க.. ஆனா யாருமே என்னை அங்கே இருந்து வெளியே எடுக்கணும் என்று நினைக்கலை.“ என்று வெற்றுக் குரலில் கூறினான்.

 

புதைக்குழி என்று அர்ஜுன் எதைக் குறிப்பிடுகிறான் என்று அதிராவிற்கு புரிந்தது. இம்மாதிரி பழக்க வழக்கங்களுக்கு ஆளானதை குறிப்பிடுகிறான். எனவே அதிரா மெல்லிய குரலில் “புதைக்குழியில் விழுந்து யாரும் காப்பாற்ற வரல்லைன்னா.. நாமளே முயற்சி செய்து வெளியே வரணும். இதுதான் சாக்கு என்று அந்த புதைக்குழிக்குள்ள நீச்சல் அடிக்க கூடாது.” என்றாள்.

 

அவள் கூறிய விதத்தில் பக்கென்று சிரித்த அர்ஜுன் “நீ சொல்வது சரிதான் அதிரா! ஆனால் அது மற்றவங்க உதவி செய்வாங்க என்று எதிர்பார்க்கிற பருவமாக இருந்தால்! வீண்பழி அவன் மீது விழுந்ததால்.. பாழா போன ரோஷம் வந்து வேண்டுமென்றே இருந்தால்! இந்த வகையிலாவது அவங்க கவனம் நம் விழுகிறதே என்று சந்தோஷம் வந்து‌‌.. அந்த புதைக்குழிலேயே இருக்க முடிவு செய்திருந்தால்!” என்றான். 

 

அவனது குரலிலும்.. வார்த்தையிலும் இருந்த விரக்தி கண்டு அதிராவிற்கு திக்கென்று இருந்தது. எனவே “ஏன்? என்னாச்சு?” என்றுக் கேட்டாள்.

 

அவன் நிமிர்ந்து பார்க்கவும், அதிரா அவசரமாக “இல்லை! சொல்ல விருப்பமில்லைன்னா சொல்ல வேண்டாம். இப்படிக் கேட்டதிற்கு நக்கலடிக்கவும் வேண்டாம்.” என்றாள்.

 

அர்ஜுன் மெல்ல முறுவலித்து விட்டு எங்கோ பார்த்தபடி “அப்போ எனக்கு பதினாறு‌ வயசு! எங்க வீட்டுல இந்த மாதிரி.. என் அப்பாவோட பிரெண்ட்ஸ் கலந்துட்ட பார்ட்டி நடந்துச்சு! எனக்கும் அகிலாக்கும் பணக்கார பிள்ளை மேக்கப் போட்டு.. எல்லார் கூடவும்.. நல்லா பேசணும் என்று அட்வைஸ் செய்து ரெடியா வச்சுருந்தாங்க! ஏழு மணிக்கு ஆரம்பிச்ச பார்ட்டி நல்லா தான் போச்சு! என் பெரெண்ட்ஸ் அட்வைஸ்படி.. என் கூட பேசின என் வயது பசங்க.. என்னை விட பெரிய பசங்க கூட எல்லாம் நல்லா பேசினேன். அவங்க கூட விளையாடினேன். நைட் டின்னர் முடிந்ததும்.. எங்களை மாதிரி சின்ன வயது பசங்களை அனுப்பிட்டாங்க! அகிலா கிளம்பிட்டா.. நானும் கிளம்ப போனேன். ஆனா.. என் அப்பாவோட பார்ட்னர் சன்னும்.. அவனோட பிரெண்ட்ஸும் என்னை நிறுத்தி வச்சுட்டாங்க! தனியா கூட்டிட்டு போனாங்க! அங்கே ட்ரீங்க்ஸ் பார்ட்டி நடந்துச்சு! அந்த வயசுல அவங்க ஜாலியா இருப்பதைப் பார்த்து.. ட்ரீங்க்ஸ் தான் காரணம் என்று..” என்றுவிட்டு அடுத்து சொல்ல வந்ததைச் சொல்லாமல் விட்டான். அதிராவிற்கு.. அவன் கூற வருவது புரிய.. என்ன சொல்வது என்றே தெரியவில்லை. 

 

தற்பொழுது.. அங்கு அவன் பிடிப்பட்டதும் என்ன நடந்திருக்கும்.. என்று அவன் கூறியதை வைத்து புரிந்துக் கொள்ள முடிந்தது.

 

அர்ஜுன் தொண்டையில் அடைத்ததை விழுங்கிக் கொண்டு.. “அதுக்கு பிறகு.. நான்..” என்ற பொழுது அதிரா இடையிட்டு “புரிகிறது.” என்றாள். பின் தொடர்ந்து “ஆனா.. தப்பை தெரிந்து செய்வதால்.. என்ன பிரோஜனம்! அப்படித்தான்னு நீங்க நினைச்சா.. நான் அப்படித்தான்னு செய்திருக்கீங்க.. அதைவிட நீங்க நினைச்சது தப்புனு நிரூபிக்கிறது தான் நிஜமாலுமே கெத்து!” என்றாள்.

 

அவளை மென்மையான பார்வையால் வருடியவன் “இந்த மாதிரி அப்போ எடுத்து சொல்ல யாரும் இல்லை அதிரா! மற்றவங்களை விடு.. என் மனமே.. அப்படி நினைக்கலை. நீ முதல்ல சொன்ன மாதிரி தான் நினைக்க தோணுச்சு! பிகாஸ் அந்த டைம்ல அந்த ஏஜ்ல என் மனசு எப்படி பாதிச்சுதுனு எனக்கு தான் தெரியும். இப்போ இப்படி செய்திருக்கலாமே அப்படி இருந்திருக்கலாமேனு.. சொல்றது ஈஸி அதிரா! ஆனாலும் நான் ரொம்ப கெட்டு போகலை அதிரா!” என்று புன்னகைக்கவும், அதிரா “தெரியும்..” என்று அவளும் புன்னகைத்தாள்.

 

பின் அவனது முகம் திடுமென சுருங்கியது.

 

“ஆனாலும் நான் இப்படித்தான் மோசமானவன் என்று என் மீது முத்திரை விழுந்தாச்சு. ப்ச்! பட் நான் அதைப் பற்றி கவலைப்படலை. சொல்லப் போனா எனக்கு இந்த கெட்ட பெயர் வேணும். இந்த கெட்டவன் என்ற பெயருக்கு பின்னாடி ஒளிஞ்சுட்டு நான் சில விசயங்களைச் சாதிச்சுட்டேன். இன்னும் நிறையா விசயங்களை முடிக்கணும்.” என்றவனின் கண்களில் தீவிரம் தென்பட்டது.

 

அதிரா அவளைப் புரியாது பார்க்கவும்..‌ அர்ஜுன் “பேமலி பாலிடிக்ஸ்” என்று கண்ணடித்தான்.

 

அகிலாவும் இதே வார்த்தைகளை கூறியிருந்ததால்.. அதிரா அமைதியாகி விட்டாள்.

 

அதிரா மெதுவாக “அரை மணி நேரம் இன்னும் முடியலையா..” என்று அவனது முகத்தை பார்த்தவாறு கேட்டாள்.

 

ஆனால் அவனோ இன்னும் முகத்தில் தீவிரம் குறையாது எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான். அவனே மனநிலை மாற்றிக் கொள்வான் என்று காத்திருந்தாள். ஆனால் அவன் மனநிலை மாறாது எங்கோ வெறித்தவாறு இருக்கவும், மெல்ல கரத்தை நீட்டி அவனது கரத்தின் மேல் வைத்து அழுத்தினாள்.

 

அந்த மென்மையான அழுத்தலில் அவளைத் திரும்பி பார்த்தவன், “என் லைஃப் டைம்ல இதுவரை இந்த மாதிரி மனசை திறந்து யார் கிட்டயும் பேசினது இல்லை. தேங்க்ஸ் அதிரா!” என்றவன், தனது கரத்தின் மேல் இருந்த அவளது கரத்தை பற்றி இழுத்ததும் அவள் அவன் இழுத்த இழுப்பிற்கு அவன் முன் வந்தாள். வந்தவளை மண்டியிட்டு எதிர்கொண்டவன், அவளை அப்படியே தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டு.. அவளது தோள்வளைவில் தனது முகத்தை அழுத்த பதிந்து கொண்டான்.

 

இதை எதிர்பாராத அதிரா ஸ்தம்பித்து போனாள். அவளது உடல் உறுப்புகள் மட்டுமில்லாது.. உள்ளமும் செயலற்று.. சில்லிப்பு ஏறியது. சில்லிப்பில் உறைந்து போனவளை.. அர்ஜுனின் கரங்கள் அழுத்தமும், அவனது உதடுகள் பதித்த சூடான முத்தமும்.. நடப்பிற்கு கொண்டு வந்தது.

 

விதிர்த்த போன அதிரா.. அர்ஜுனை தன்னிடம் இருந்து பிரிக்க முயன்றாள். ஆனால் அந்தோ பரிதாபம் அவளது எதிர் செய்கையை.. அவனை கிளர்ச்சியூட்ட.. அவனது கரங்கள் மேலும் அழுத்தத்தை கூட்டியது. அவனது உதடுகள் மெல்ல கழுத்தில் இருந்து ஏறி.. அவளது காதில் நின்றது.

 

“அதி…” என்று‌ அவளது பெயரை தாழ்வான குரலில் ஆனால் அழுத்தமான உச்சரித்தான். அவனது குரல் காது வழியே உள்ளே புகுந்து அவளது இரத்த நாளங்களில் பயணித்தது. அவளை இறுக அணைத்தவனுக்கு அவளது மேனியில் நிகழ்ந்த நெகிழ்வை உணரவும்.. அதை தன்னிடம் பெயர்க்க அவளது இதழ்களை நாடி அவனது உதடுகள் சென்றது. அடுத்து என்ன நடந்திருக்குமோ.. அவ்வேளையில் அந்த மினி லாரி திடுமென பிரெக் போட்டு நின்றதும்.. இருவரும் சுயநிலை அடைந்தனர். அவனது பிடி தளரவும்.. சட்டென்று அவனது பிடியில் இருந்து விலகியமர்ந்தாள். 

 

பிரெக் அடித்து நின்ற மினி லாரி.. சாலையை மறித்த விலங்கு அகன்றதும்.. மீண்டும் தனது பயணத்தை தொடங்கியது.

 

மினி லாரி நின்று பின் ஓடியது கூட.. வண்டியின் பின் அமர்ந்திருந்த இருவருக்கும் தெரியவில்லை. 

 

அதிராவிற்கு ஏனோ மலையை ஏறி இறங்கியது போல் அவளுக்கு மூச்சு வாங்கியது. அவனும் கிட்டத்தட்ட அவளது நிலையில் இருந்தான். அவள் திகைப்புடன் மூச்சு வாங்கினால் எனில் இவன் முகத்தில் சந்தோஷத்துடன் மூச்சு வாங்கினான்.

 

அர்ஜுன் முறுவலுடன் மீண்டும்  அவள் புறம் செல்ல தொடங்குகையில் அவனது பாக்கெட்டில் இருந்த செல்பேசி அலறியது. எடுத்து பார்த்தவனின் முகத்தில் சிரிப்பு தோன்றியது. இன்னொன்று‌ தோன்ற.. பாக்கெட்டில் கையை விட்டு.. அதிராவின் செல்பேசியை எடுத்துப் பார்த்தான். அவனது சிரிப்பு மேலும் பெருகியது.

 

பின் அர்ஜுன் அதிராவிடம் “நாம் எத்தனை நேரம்.. கட்டிப்பிடிச்சுட்டு இருந்திருக்கிறோம் என்றுத் தெரியுமா?” என்று அவளிடம் கேட்டவன், அவனே பதிலளித்தான்.

 

“பை மினிட்ஸ் தான்! ஆனா இந்த பை மினிட்ஸ்ல அகிலா உன் மொபைலுக்கும் என் மொபைலுக்கும் எத்தனை ஃகால் போட்டுட்டா தெரியுமா! எனக்கு ஏழு ஃகால் உனக்கு ஐந்து ஃகால்! டொட்டலா ட்வல் ஃகால்ஸ்! பட் வூட் யூ பீலிவ் திஸ்! இதுல எந்த ஃகாலும் என் காதுல விழல. உனக்கும் அப்படித்தானே..” என்றுச் சிரிக்கவும்.. அதிராவின் மனம் திடுக்கிட்டலுடன் அதை ஒத்துக் கொண்டது.

 

அவளது திகைத்த முகத்தைப் பார்த்தவனின் பார்வை மாறியது. அவளை நெருங்க நினைக்கையில் அவனது கையில் இருந்த செல்பேசி அலறியது. அகிலா தான் அழைத்திருந்தாள். அந்த அழைப்பை அர்ஜுன் ஏற்பான் என்று ஆவலுடன் அதிரா எதிர்பார்த்துக் கொண்டிருக்க.. அவனோ இரண்டு செல்பேசியையும் அருகில் போட்டு விட்டு அதிராவிடம் ஏதோ கூற முயன்றான்.

 

ஆனால் அதிராவிற்கு ஒலித்துக் கொண்டிருக்கும்.. செல்பேசி தான் கண்ணில் பட்டது. அவன் அதை தூக்கி போடவும், விரைந்து அதை கையில் எடுத்து அழைப்பை ஏற்றாள்.

 

அந்த பக்கம் அகிலா “அர்ஜு! எங்கே இருக்கே? அதிரா உன் கூடவா இருக்கா! எத்தனை ஃகால்ஸ் செய்தேன் ஏன் எடுக்கலை? சொல்லுடா அதிராவை பார்த்தியா இல்லையா! வந்த நீயூஸ் எல்லாம் பார்த்தா எனக்கு பயமா இருக்கு! அதிரா அங்கே மாட்டிக்கிட்டாளா!” என்று சராமாரியாக பேசிக் கொண்டே போனாள்.

 

சற்றுமுன் நடந்த நிகழ்வின் காரணமாக அதிரா திணறலுடன் “அ.. அகி.. அகி.. அகி..” என்று அவளது பெயரை மட்டும் கூறியவள், அதற்கு மேல் பேச முடியாமல் தடுமாறினாள்.

 

அகிலாவோ அதிராவின் குரல் கேட்டதில் மகிழ்ந்தவளாய் “அதிரா! நீயா! அப்போ நீ அர்ஜு கூடத் தான் இருக்கியா! அங்கிருந்து தப்பிச்சுட்டியா! அப்பாடா இப்போ தான் நிம்மதியா இருக்கு! எத்தனை ஃகால் செய்தேன் ஒண்ணும் எடுக்கலை என்றதும் பயந்துட்டேன். அது சரி இப்போ எங்கே இருக்கீங்க? எப்போ வருவீங்க?” என்று தொடர்ந்து பேசினாள்.

 

அதிரா “அகி! அகி! நாங்க… இங்கே.. இல்லை.. அர்ஜு!” என்று மீண்டும் திணறவும், அவளின் கரத்தில் இருந்த செல்பேசியை அவளது கரத்தோடு பற்றிய அர்ஜுன், அவளது கரத்தில் இருந்து கையை எடுக்காமலேயே அவளது கரத்தோடு செல்பேசியை தனது காதில் வைத்தான். 

 

“அகிலா! அங்கிருந்து வெளியே வந்திட்டோம். வீட்டிற்கு தான் வந்துட்டு இருக்கோம்.” என்றான்.

 

அகிலா “தேங்க் காட்! இங்கே அம்மாவும், அப்பாவும்..” என்கையில் இடைப்புகுந்த அர்ஜுன் “அதை அங்கு வந்து கேட்டுக்கிறேன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

 

அழைப்பைத் துண்டித்துவிட்டு.. அதிராவை பார்த்தான். அவளோ அவளது கரத்தை அவனிடம் இருந்து விடுவிக்க போராடிக் கொண்டிருந்தாள். இலகுவாக அவளது திமிறலை அடக்கியவன், அவளிடம் நெருங்கியமர்ந்து “நான்தான் சொன்னேனே! நமக்கு செட் ஆகுன்னு தோணுது. நான் முழுசா உன் பக்கம் வரதுக்குள்ள.. இங்கிருந்து போயிருனு! இப்போ பாரு.. நான் சொன்ன மாதிரி உன் பக்கம் வந்துட்டேன். உன் கிட்ட கொஞ்ச நேரம் பேசினா.. நமக்குள் தோன்றிய அட்ரெக்ஷன் போயிரும் என்று நினைச்சேன். அது உல்ட்டவா ஆகிருச்சு. இப்போ சொல்றேன்.. இனி என்கிட்ட இருந்து விலகி போக நினைச்சுராதே.” என்றுவிட்டு அவளை மீண்டும் கட்டியணைத்தான். 

 

அதிராவோ நடப்பதை நம்ப முடியாமல் தடுக்கவும்.. முடியாமல் திக்கித்து அமர்ந்திருந்தாள்.

 

ஆசிரியர் பேசுகிறேன்:

 

ஹா.. ஹா.. அடைமழையில் நனையாமல் இரசித்து மட்டும் விடலாம் என்று நினைச்சுட்டு இருந்தவள் நல்லா மாட்டிக்கிட்டா.. அந்த அடைமழைக்கு அவளைப் பிடித்து விட்டது.


   
Vidhushini reacted
Quote
Share: