[Sticky] குடை 6
அத்தியாயம் 6
காவல்துறையினரின் அதிரடி வருகை கண்டு திகைத்த அகிலா மீண்டும் காரினுள் அமர்ந்து கொண்டாள். தனது கைப்பேசியை எடுத்தவள், முதலில் அர்ஜுனை அழைத்தாள்.
“அர்ஜு! போலீஸ் ரைடு வந்திருக்கு!”
“வாட்! நீ எங்கே இருக்கே?”
“கார் பார்க்கிங்ல”
“பைன்! உடனே கிளம்பிரு! நானும் கிளம்பிறேன். அனேகமா ட்ரக்ஸ் யூசர்ஸை பிடிக்க வந்திருப்பாங்க! அன்ட் எஸ்.. இன்பார்ம் செய்ததிற்கு தேங்க்ஸ்!” என்றுவிட்டு அழைப்பை துண்டிக்க போனான்.
அகிலா அவசரமாக “அர்ஜு! அதிரா உன்னைப் பார்க்க வந்தா.. அங்கே வந்துட்டாளா?” என்றுக் கேட்டாள்.
உடனே அர்ஜுன் “ஹெ! அவளை வர வேண்டாம்.. நான் வேற ஸ்பாட்டிற்கு போறேன்னு சொன்னேன் தானே!” என்றுக் கோபத்துடன் கூறினான்.
அதற்கு அகிலா “அதைச் சொல்றதுக்குள்ள.. அவ போயிட்டா! அப்போ அவ உன் கூட இல்லையா! போலீஸ் கிட்ட மாட்டிட்டா என்ன செய்ய? அவளை கான்டெக்ட் செய்ய அவ கிட்ட ஃபோன் கூட இல்லையே!” என்றுப் புலம்பினாள்.
அர்ஜுன் “ஷிட்! ஒகே நான் போய் பார்க்கிறேன்.” என்றுக் கூறிக் கொண்டிருக்கையிலேயே அந்த பக்கம் அகிலா அலறினாள். அர்ஜுன் பதறியவனாய் “என்னாச்சு அகி!” என்றான்.
அகிலா “அர்ஜு! போலீஸ் இங்கே இருக்கிறவங்களை துரத்தறாங்க..” என்று பதட்டத்துடன் கூறினாள்.
அர்ஜுன் “அப்போ உடனே கிளம்பு..”
“அச்சோ! அதிராவை விட்டுட்டா..”
“நான்தான் போய் பார்க்கிறேன்னு சொன்னேனே! நான் அவளைக் கூப்பிட்டு வரேன். நீ வீட்டிற்கு போ..” என்றான்.
அகிலா “அச்சோ அர்ஜு! என் கார் கிட்ட வராங்க..” என்று அலறினாள்.
அர்ஜுன் “இடியட்! நீ காரை எடுத்துட்டு போ! நான் அதிராவோட தான் வீட்டிற்கு வருவேன்.. போதுமா!” என்றான்.
அகிலா காரை எடுத்துட்டு போனதை ஊர்ஜீதம் செய்த பின்பே அர்ஜுன் அழைப்பைத் துண்டித்தான். தன் மீது சாய்ந்தவாறு அமர்ந்திருந்த ரிஷிதாவை நேராக அமர வைத்த அர்ஜுன் “ரிஷிதா! போலீஸ் ரைடு வந்திருக்கு! உன் பிரெண்ட்ஸ் கூட இப்போ தானே வந்தே! உன் காரை எங்கே நிறுத்தியிருக்கே! சீக்கிரம் அவங்க கூட போ..” என்று விரைவுப்படுத்தினான்.
சற்று தொலைவில் கேட்ட சலசலப்பு அர்ஜுன் சொன்னதை உறுதி செய்யவும், ரிஷிதா “அர்ஜு நீ எங்க காரில் வறீயா?” என்றுக் கேட்டாள்.
அர்ஜுன் “இல்லை! நீங்க போங்க! க்விக்..” என்று அவளை அவசரப்படுத்தவும், அதற்கு மேல் அங்கு நிற்காமல்.. தனது தோழிகளுடன் அவள் விரைந்தாள். அர்ஜுன் முதலில் சண்டை நடந்த இடத்தை நோக்கி ஓடினான்.
போலீஸ் லத்தி சார்ஜ் நடத்திக் கொண்டிருந்ததால்.. அனைவரும் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இந்த இடத்தில் இருந்து வெளியேற ஓடி வந்துக் கொண்டிருக்க.. அர்ஜுன்.. அவர்களுக்கு எதிர்திசையில் ஓடிக் கொண்டிருந்தான்.
அவனது மனதில் அதிராவும்.. இது மாதிரி எங்காவது ஓடிக் கொண்டிருப்பாளோ.. அவ்வாறு ஓடினால்.. இந்த இடத்தைப் பற்றி அவ்வளவாக சரியாக தெரியாது.. எங்கு செல்வாள்! அகிலா கூறியது போல்.. கையில் செல்பேசி இல்லாது.. அவளை எவ்வாறு கண்டிப்பிடிப்பது.. என்று பல்வேறு எண்ணங்களுடன் ஓடிக் கொண்டிருந்தான்.
நெருங்கும் போதே.. காவல்துறையின் ஒரு பகுதியினர்.. அங்கிருந்தவர்களை துரத்திக் கொண்டிருக்க.. இன்னொரு பகுதியினர் முன்னேறி.. ஒரு இடத்தை நோக்கி செல்வதை அர்ஜுனால் கணிக்க முடிந்தது. அவர்கள் எந்த இடத்தை நோக்கி செல்கிறார்கள்.. என்றுப் பார்த்தவன், அதிர்ந்தான்.
அவன் சற்றுமுன் சண்டையிட்ட இடத்தை நோக்கி தான் காவல்துறையினர் சென்றுக் கொண்டிருந்தார்கள். அவன் பயந்தது போல்.. அந்த இடத்தை காவல்துறையினர் சுற்றி வளைத்தனர்.
அப்பொழுதே.. அங்கு வரிசையாக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் என்ன வேலை நடந்துக் கொண்டிருந்திருக்கும் என்று கணிக்க முடிந்தது. அங்கு அதிரா இருப்பாளா.. அல்லது காவலர்கள் துரத்தியதில் எங்கு செல்வது என்றுத் தெரியாமல் ஓடியிருப்பாளா.. என்றுப் பதட்டத்துடன் ஓடினான்.
அர்ஜுன் ஓடி வருவதைப் பார்த்து.. ஒரு காவலர் லத்தியை ஓங்கிக் கொண்டு வரவும், அதில் இருந்து இலாகுவாக குனிந்து தப்பித்தவன், காவல்துறையினர் சுற்றி வளைத்த பகுதியை நோக்கி விரைந்தான். அங்கு காவலர்கள் கையில் லத்தியுடன் போதை பொருளின் மயக்கத்தில் இருந்த இளைஞர் கூட்டத்தை ஒரு பக்கமாக சேர்க்க முயன்றனர்.
அர்ஜுனுக்கு புரிந்துவிட்டது.. அவனும் தீபக்கும் சண்டை இட்ட பின்.. அவன் அங்கிருந்து நகர்ந்ததும்.. இந்த வேலை இங்கு நடந்திருக்கிறது. அங்கு பெரும்பாலும் வெளிநாட்டு இளைஞர்கள் இளைஞிகள் என்ன செய்வது என்றுக் கூடத் தெரியாது நின்றிருந்தனர். அவர்களில் அதிராவை தேடியவன்.. அவள் இல்லாதிருப்பதைக் கண்டு நிம்மதியுற்றான். அவனது நிம்மதியின் ஆயுள்.. ஒரு நிமிடம் கூட நீடிக்கவில்லை.
அந்த இளைஞர் கூட்டத்தினுள்.. இரண்டு பேருக்கு பின்னால் சுற்றிலும் நின்ற காவலர்களை மிரட்சியுடன் பார்த்தவாறு அதிரா நின்றிருந்தாள்.
நடுவில் புகுந்து அதிராவை அழைத்து வருவது கடினம்.. என்றுத் தெரிந்த அர்ஜுன்.. என்ன செய்வது என்று பதட்டத்துடன் பார்த்தான். அப்பொழுது அவனது கண்ணில் குளிருக்காக வைக்கப்பட்ட தீக்கணப்பு பட்டது. இன்னும் அதில் நெருப்பு எரிந்துக் கொண்டிருந்தது. சட்டென்று யோசனை ஒன்று தோன்றவும், சிறிதும் தாமதிக்காது அதை எடுத்தவன், காவலர்கள் சுற்றி வளைத்த கூடாரங்களில் ஒன்றின் மீது வீசினான். உடனே அனைவரின் கவனம் அங்கு செல்லவும், அந்த வேளையை பயன்படுத்திக் கொண்ட அர்ஜுன், தனது கழுத்தை சுற்றி போடப்பட்டிருந்த மஃப்லரை மூக்கின் மேல் முகத்தை மறைத்தாற் போன்று கட்டியவன், தனது சட்டையை கழற்றியவாறு வேகமாக காவலர்களை தாண்டி உள்ளே நுழைந்தான். உடனே பிடித்து வைத்திருந்த இளைஞர் கூட்டமும் தீயை கண்டு கலைய முயன்றது. அவர்களை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வர காவலர் திணறினர்.
அர்ஜுனை தடுக்க கூட ஒரு காவலர் அவனது பின்னால் வந்து பிடிக்க முயன்றனர், ஆனால் அவர்களது கையில் சிக்காமல் அதிராவிடம் வந்தவன், அவளது தோளைப் பற்றி தனது முகத்தை பார்க்க வைத்தான்.
தனது தோளை யாரோ பற்றவும், பயந்து போனவளை அவனது முகத்தைப் பார்க்க வைத்தவன், “லிசன் அதிரா! நான்தான் அர்ஜுன்!” என்று மஃப்லரை இறக்கி முகத்தைக் காட்டினான். அவனைக் கண்டதும்.. அவளது முகத்தை நிம்மதி பரவியது. ஏதோ கூற முயன்றாள். ஆனால் அச்சத்தினால் வாய் வார்த்தை வரவில்லை.
அதைப் பற்றிக் கவலைப்படாத அர்ஜுன் “வி ஹெவ் டு ரன்! ஒகே!” என்றவாறு.. தனது சட்டையை அவளது தலையில் முக்காடு போல் போட்டுவிட்டு.. கலைந்திருந்த கூட்டத்திற்குள் நுழைந்தான்.
இளைஞர் கூட்டம் கார் பார்க்கிங் இடத்தை நோக்கி ஓட காவலர்கள் அவர்களை துரத்திக் கொண்டிருந்தார்கள். அதனால் அர்ஜுன் அதிராவை அழைத்துக் கொண்டு அந்த சவுக்கு தோப்பிற்குள் ஓடினான். நிலைமையின் விபரீதம் புரியவும், அவளும்.. அர்ஜுனின் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முயன்றாள். தங்களை யாரும் பின் தொடர மாட்டார்கள் என்று நினைத்த அர்ஜுனின் நினைப்பு பொய்த்து போனது. அவர்களை இரு காவலர்கள் துரத்திக் கொண்டு வந்தார்கள்.
அதிரா ஓடியவாறு மூச்சு வாங்க.. “நாம்தான் தப்பு செய்யலையே! அவங்க கிட்ட சொல்லலாமா..” என்றுக் கேட்டாள்.
அதற்கு அர்ஜுன் “அதை விசாரிக்கிறதுக்கு முன்னாடி.. அவங்க அரெஸ்ட் செய்வாங்க! உன் வீட்டினரிடம் விசாரிப்பாங்க.. அது உனக்கு ஒகேவா..” என்றுக் கேட்டான்.
அதிரா அதற்கு மேல் அவனிடம் எதுவும் கேட்காமல் அவனுடன் ஓடினாள்.
தொலைவில் சாலை வழி தென்படுவதைப் பார்த்தான். அங்கு சில வாகனங்கள் செல்வதைப் பார்த்தவன், அதில் எதிலாவது ஏறிக் கொள்ளலாம் என்ற எண்ணம் கொண்டான். பின்னால் திரும்பிப் பார்த்தான். இன்னும் அந்த இரு காவலர்கள்.. விடாது அவர்களைத் துரத்திக் கொண்டு தான் வந்தார்கள்.
சாலையை அடைந்ததும் மூச்சு வாங்க நின்றார்கள். அவ்வழியே வந்த கார்.. தொலைவில் காவலர்கள் வருவதைப் பார்த்து.. நிற்காமல் சென்றது. “டேமிட்..” என்று அவர்களைக் கடந்து சென்ற காரை பார்த்து அர்ஜுன் ஆத்திரத்தில் கத்தினான். இவ்வாறு இரு கார்கள் அவர்களைக் கடந்து சென்றிருந்தன. அந்த இரு காவலர்களும்.. அதற்குள் வந்துவிட்டால்.. அவர்களை அடித்துவிட்டு தப்பிப்பதை தவிர வேறு வழியில்லை என்று அர்ஜுன் தயாராக நின்ற பொழுது.. சிறு லாரி ஒன்று வேகமாக வந்தது.
உடனே அர்ஜுன் சாலையின் குறுக்கே நின்று.. கையை ஆட்டி அந்த சிறு லாரியை நிறுத்தியவன், ஒட்டுநரிடம் சென்று.. வாலெட்டில் வைத்திருந்த மொத்த பணத்தையும் எடுத்தி.. கையில் அழுத்திவிட்டு.. தங்களை ஏற்றிக் கொண்டு அவர்களது வீடு இருக்கும் முகவரியை கூறி.. அங்கு இறங்கி விடுமாறு கூறினான். கைக்கொள்ள பணத்தை பார்த்த ஒட்டுநர்.. முன்னால் முதலிலேயே இரு ஆட்கள் அமர்ந்திருந்ததால்.. பின்னால் ஏறிக் கொள்ள அனுமதியளித்தான்.
அப்பொழுது அதிரா “அர்ஜுன்” என்றுக் கத்தவும், என்னவோ என்று அர்ஜுன் விரைந்து அதிராவிடம் சென்றான். அங்கு காவலர்கள் பத்தடி தொலைவில் வந்துக் கொண்டிருக்க.. அவர்களைப் பார்த்து தான் அவள் கத்தியிருக்கிறாள். அர்ஜுன் உடனே வண்டியை எடுக்க சொல்லிக் கத்தியவாறு அதிராவை பற்றி தூக்கி மினி லாரியின் பின்னால் போடுவதற்கும்.. லாரி கிளம்புவதற்கும் சரியாக இருந்தது. இன்னும் அர்ஜுன் ஏறாததைக் கண்டு அதிரா அதிர்ந்து தனது கையை நீட்டினாள். காவலர்களும் அவனை நெருங்கியிருந்தார்கள்.
அர்ஜுன் லாரியினை பற்றியவாறு அதனோடு ஓடி வந்தவன், சட்டென்று கால்களை உயர்த்தி.. லாரியில் இலாவகமாக ஏறினான். காவலர்கள் விடாது சிறிது நேரம் துரத்தி பார்த்துவிட்டு.. ஓய்ந்து போய் நின்றுவிட்டார்கள். அவர்கள் நிற்கும் வரை.. பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுன் அவர்கள் நின்றதும்.. நெற்றியில் கையை வைத்து சிறு சல்யுட் வைத்துவிட்டு.. அப்படியே பின்னால் சாய்ந்து படுத்துக் கொண்டு மூச்சு வாங்கினான்.
உள்ளே என்ன வைக்கப்பட்டிருக்கோ.. மேலே வைக்கோலால் பரப்பி வைக்கப்பட்டிருப்பதால்.. மெத்தென்று இருக்கவும், அதிராவும் ஓய்ந்து போய் அமர்ந்தாள்.
இன்னும் அவளால் நம்ப முடியவில்லை.
தனது செல்பேசியை வாங்க.. விரைந்து சென்ற பொழுது.. அங்கு வேறு கூடாரங்களைத் தவிர வேறு யாருமில்லை. இதில் எந்த கூடாரத்தில் அர்ஜுன் இருப்பான். எப்படி ஒவ்வொரு கூடாரமாக போய் பார்ப்பது என்று விழித்தவாறு நின்ற பொழுதே.. பெரும் பரபரப்பு காணப்பட்டதைக் கண்டாள். ஏன் சிலர் ஓடி வருகிறார்கள்.. என்று அவள் உணரும் முன்… காவலர்களால் அவள் சுற்றி வளைக்கப்பட்டாள்.
உடனே அவளது மனதில் பல எண்ணங்கள் ஓடி விட்டது. தன்னை போலீஸ் அழைத்துக் கொண்டு செல்லுமா.. அடிப்பாங்களா! வீட்டில் கூறுவார்களா! சிறையில் அடைப்பார்களா! பீதியுடன் நின்ற பொழுது.. யாரோ வந்து பற்றவும்.. இன்னும் பயந்து தான் போனாள். திமிறி விடுபடும் முன்.. அது அர்ஜுன் என்றுத் தெரிந்த பின்.. ஏனோ இனி எந்த துன்பமும் இல்லை என்பது போல்.. மனதில் நிம்மதி பரவியது. இதோ அவள் நிம்மதி கொண்டது சரியே என்பது போல்.. அவளை அவர்களிடம் இருந்து தப்பித்துக் கூட்டிக் கொண்டு வந்துவிட்டான்.
வைக்கோலில் மல்லாந்து படுத்து தங்களுடன் பயணிக்கும் வானத்தை பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுனை பார்த்தாள். அதிரா அவனையே பார்த்துக் கொண்டிருக்க.. சட்டென்று எழுந்து அவளைப் பார்த்தவாறு அமர்ந்தான். இதை எதிர்பாராத அதிரா திணறலுடன் வேறு திசையை பார்த்தாள்.
அர்ஜுன் சிரிக்கவும், அவன் புறம் திரும்பியவள்.. “இரண்டு முறை என்னை பெரிய ஆபத்தில் இருந்து காப்பாத்தியிருக்கீங்க.. ஆனா என்னால நன்றி சொல்ல முடியலை. அதுதான் பார்த்துக் கொண்டிருந்தேன்.” என்றாள்.
அர்ஜுன் புருவத்தை உயர்த்தவும், அதிரா “நீங்க என் ஃபோனை என்கிட்ட கொடுத்திருந்தா.. நான் திரும்பி வந்திருக்கவே தேவையில்லை.” என்றவள், தொடர்ந்து “நாங்க அங்கே இருக்கும் போதே.. என் ஃபோனை எடுத்திட்டிங்கன்னு நினைக்கிறேன். நானும் சரியாக கவனிக்கலை. உங்க ஃபோனை தான் பார்த்துட்டு இருக்கீங்கனு நினைச்சுட்டேன். அப்பவே என் ஃபோனை கொடுக்காததால் தான் இத்தனை கஷ்டம்! இப்போ சொல்லுங்க.. நான் எப்படி தேங்க்ஸ் சொல்றது?” என்றுக் கேட்டாள்.
ஆனால் அர்ஜுன் “ஓ அப்படியா! உன் ஃபோனை எடுத்தும்.. அப்பவே உன்கிட்ட கொடுக்காதது தான் காரணமா! சோ அதுனால தான்.. இந்த மிட்நைட்ல.. மலைகளுக்கு நடுவே போகிற ரோட்ல சிலுசிலுனு காத்தை அனுபவிச்சபடி உன் கூட தனியாக இந்த ரைட்ம் கிடைச்சுருக்கு.. இல்ல! சோ உன் தேங்க்ஸ் தேவையில்லை. அந்த எக்ஸ்பீரியன்ஸ் போதும்..” என்றுக் கண்ணடித்தான்.
அதிராவிற்கு ஏனோ சிரிப்பு தான் வந்தது. அதை அவனிடம் காட்டாதிருக்க முகத்தை திருப்பிக் கொண்டாள். ஆனால் அதைக் கவனித்துவிட்ட அர்ஜுன் “ஹெ சிரிச்சியா! என் கூடத் தனியா இருக்கியே! உனக்கு பயமில்லையா! எந்த தைரியத்தில் சிரிக்கிறே! நான் கிட்ட வந்தா.. கடிக்கிறதுக்கு முப்பதிரெண்டு பற்கள் இருக்கிற தைரியமா.. இல்லை.. என்னை கீறி விட பத்துவிரல்கள்ல நகம் இருக்கிற தைரியமா! என்னை எட்டி உதைக்க இரண்டு கால்கள் இருக்கிற தைரியமா! இல்லை.. என்னை இந்த வண்டியில் இருந்து தள்ளிவிட இரண்டு கைகள் இருக்கிற தைரியமா! இதெல்லாத்தை விட.. என்னால என்ன செய்திட முடியும்.. என்று அசால்ட்டா நினைக்கிறே.. உன் மனசா! இதுல எந்த தைரியத்தில்.. இப்படி பயமில்லாம என் கூட இருக்கிறே!” என்றுக் கேட்கவும், அவன் கேட்ட விதத்தில் அதிராவிற்கு மீண்டும் சிரிப்பு தான் வந்தது.
பின் அதிரா “நீங்க வில்லன் தான்! ஆனா கொஞ்சம் நல்லவன் தான்! அந்த நம்பிக்கை கொடுக்கிறே தைரியம் தான்!” என்றாள்.
அவளை நிதானமாக பார்த்த அர்ஜுன் “உனக்கு என்னைப் பிடிச்சுருக்கா?” என்று திடுமென கேட்டான்.
அதைக் கேட்டு அதிரா அதிர்ந்தாள்.
பின் “கடைசில நீங்களும் எல்லா ஆண்கள் மாதிரி தான்னு ப்ரூவ் செய்துட்டிங்க! ஒரு பெண் கொஞ்சம் இணக்கமா பேசிட்டா.. அந்த பொண்ணுக்கு உங்களை பிடிச்சுருக்கு என்று நினைக்கிறே கேட்டகெரி!” என்றுவிட்டு ஏமாற்றத்துடன் முகத்தை திருப்பிக் கொண்டு வேடிக்கை பார்க்கலானாள்.
அர்ஜுன் “அட அதுக்குள்ள.. எனக்கு நல்லவன்னு குத்தின முத்திரையை வாபஸ் வாங்கிட்டியா! சோ சேட்! என்னைத் திட்டிட்டு நீயே எனக்கு வக்காலத்து வாங்கினா வேற எப்படி நினைக்கிறது!” என்றுச் சிரித்தான்.
அதிரா பதிலேதும் பேசாமல் அமைதியாக இருக்கவும், அர்ஜுன் “ஹெ! இதுல என்ன இருக்குன்னு நீ இப்படி முகத்தை திருப்பிட்டு உட்கார்ந்திருக்கே! உனக்கு என்னைப் பிடிச்சுருக்கு என்பது நேச்சுரல் தின்க்! உனக்கு என்னைப் பிடிச்சுருக்கு என்கிறதாலே.. நீ என்னை லவ் செய்தாகணும், கட்டிப் பிடிக்கணும், முத்தம் கொடுக்கணும்னு எல்லாம் கேட்க மாட்டேன்.” என்றுச் சிரிப்புடன் கூறினான்.
அவனது பேச்சில் சங்கடமுற்ற அதிரா அவனது பக்கம் திரும்ப கூட இல்லாது “இதைத் தான் சொன்னேன். உங்க கூட பேசினா.. இப்படித்தான் விவகாரமாக பேசறீங்க! நீங்க சொன்னது சரிதான் நான் இந்த இடத்துக்கு மட்டுமில்ல.. உங்க கூட பேச கூட சரியானவ இல்ல!” என்றுவிட்டு அடுத்து என்ன பேசுவது என்றுத் தெரியாமல் தனது கைவிரல் நகத்தை ஆராய்ந்தாள்.
அர்ஜுன் “எனக்கு செட் ஆக மாட்டேன்னு ஸ்டெட்மென்ட் மாதிரி சொல்றீயா! இல்லை வருத்தமா சொல்றீயா!” என்றவன், அவள் பதில் கூறும் முன் முந்திக் கொண்டு “எனக்கு வருத்தமா சொல்ற மாதிரி இருக்கு..” என்று தாழ்வான குரலில் கூறினான்.
உடனே அதிரா “உங்களுக்கு அப்படித் தோணுச்சுன்னா.. அதுக்கு நான் ஒண்ணும் செய்ய முடியாது.” என்றதும்.. அர்ஜுன் கடகடவென சிரித்தான்.
நன்றாக சிரித்துவிட்டு “நான் என்ன ஃபீல் செய்கிறேனோ.. அதை சும்மா மேம்போக்கா சொல்ல மாட்டேன். அதில் ஸ்ட்ரான்ங் இருக்கும். உன் குரல்ல வருத்தம் தெரிந்தது உண்மை! அதை நான் கண்டுப்பிடிச்சுட்டேன்னு.. என்னை மாதிரி விட்டேறியா பேச ட்ரை செய்யறே! ஆனா அதிரா.. இதுதான் உனக்கு செட் ஆகலை.” என்றவனின் பார்வை மாறியது.
அதில் அதிரா உள்ளம் சிலிர்க்க.. மீண்டும் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அர்ஜுன் அவள் மீதிருந்த பார்வையை எடுக்காது.. “ஆனா அதிரா.. உனக்கும் எனக்கும் செட் ஆகுன்னு நினைக்கிறேன்.” என்றான்.
அதிரா திடுக்கிட்டு பார்க்கவும், அர்ஜுன் “உன் கூடப் பேசறது நல்லா தான் இருக்கு! உன் பாஷையில் சொல்லப் போனா.. உன்னை சீண்டி விளையாடுவது நல்லா இருக்கு! நீயும் வாயில்லா பூச்சி இல்லை. சரிக்கு சரி நல்லா பேசறே!” என்றுச் சிரித்தவன், தொடர்ந்து “நாம் இன்னும் கொஞ்ச நேரம் பேசலாமா..” என்றுவிட்டு.. ஓட்டுநரின் இருக்கையின் கதவை தட்டினான். அவன் திறக்கவும், அவனது கையில் மேலும் சில கத்தை நோட்டுகளை திணித்தவன், சிறிது நேரம் கழித்து அவர்களது வீட்டிற்கு போனால் போதும் என்றும்.. அதுவரை.. அந்த மலைச்சாலையில் வண்டி பயணித்துக் கொண்டு இருக்கட்டும் என்றுக் கூறினான்.
அதிரா விக்கித்து அமர்ந்திருந்தாள்.
அந்த மினி லாரி.. அதுவரை சென்றுக் கொண்டிருந்த பாதையில் இருந்து மற்றொரு பாதையில் திரும்பி.. அவன் கூறியதை உண்மை என்று நிரூபித்தது.
அதிரா அச்சத்துடன் எழுந்து நின்று “அர்ஜுன்! ப்ளீஸ் வேண்டாம்! வீட்டிற்கு வண்டியை திருப்ப சொல்லுங்க! எனக்கு உங்க கூட இருப்பது அன்ஈஸியா இருக்கு..” என்றாள்.
அர்ஜுன் “அதைச் சரிச் செய்திரலாம் உட்காரு..” என்றான்.
அதிரா “ப்ளீஸ் வண்டியை திருப்ப சொல்லுங்க..” என்று நடக்க முயலவும், அர்ஜுன் “அதிரா விழுந்திருவே! உட்காரு..” என்று எச்சரித்தான். ஆனால் அவள் கேளாது.. ஒட்டுநரை அழைக்க செல்லுகையில் ஒரு வளைவுப்பாதையில்.. வண்டி திரும்பியது. அதனால் அதிரா தடுமாறி.. பக்கவாட்டில் விழப் போனாள். அதற்குள் அர்ஜுன் கையை நீட்டி அவளைப் பற்றியவன், தன் பக்கம் இழுத்தான். அதிராவும் தடுமாறி அவன் மீது விழுந்தான். தன்மேல் விழுந்தவளை.. இரு கரத்தால் வளைத்து இறுக பிடித்துக் கொண்டான்.
இரு மேனிகள் அழுத்தமாக ஒன்றை ஒன்று உணர்ந்த பொழுது.. இரு உள்ளங்களிலும்.. சிறு சிலிர்ப்பு தோன்றின. அந்த சிலிர்ப்பு இருவரையும் ஒரு நிமிடம் உறைய செய்தது.
ஆசிரியர் பேசுகிறேன்
இரசிச்சு பார்த்துட்டு இருக்கிற அடைமழையின் காரணமா வீசுகிற வாடைக் காற்று.. உங்க நாடி நரம்பு இரத்தத்தில் புகுந்து எப்படி உறைய வைக்கும் என்றுத் தெரியுமா! அப்படி உறைந்த நேரத்தில் அந்த அடைமழையில் நனைய நேர்ந்தால்.. அந்த அனுபவம் எப்படியிருக்கும் என்றுத் தெரியுமா! ஒருவேளை.. தற்பொழுது அதிரா உணர்ந்த மாதிரி இருக்குமோ!
- 1 Forums
- 10 Topics
- 16 Posts
- 1 Online
- 28 Members