Forum

Notifications
Clear all

குடை 5

3 Posts
2 Users
3 Reactions
272 Views
rajianbu
(@rajianbu)
Admin Admin
Joined: 4 months ago
Posts: 13
Topic starter  

அத்தியாயம் 5

 

தீபக் கோணல் சிரிப்புடன் “உன் சிஸ்டர் கிட்ட இருந்து என்னைப் பிரிக்கிறதுக்காக என் கூட பைட் செய்து.. இன்னும் அவளை என் கிட்ட குளோஸா தான் ஆக்க போறே!” என்றான்.

 

அர்ஜுன் “நான் என்ன சொன்னாலும் புதைக்குழிக்குள்ள தான் விழுவேன்னு சொல்கிறவளைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனா எனக்கு பழைய கணக்கு ஒண்ணு இருக்கு தீபக்!” என்று கண்களில் கனலை கக்கினான்.

 

அதைப் பார்த்து சிரித்த தீபக் “ஓ! அதைச் சொல்றீயா! அவளை நான் லவ் செய்தேன். ஆனா நீ தள்ளிட்டு போக பார்த்தே! அதுதான் நீ அவளை அந்த மாதிரி ஃபோட்டோ எடுத்து எனக்கு அனுப்பினேன்னு.. நான் அவளை எடுத்த ஃபோட்டோவை காட்டினேன். விட்டா பாரு உனக்கு பளார்னு! இன்னும் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு..” என்றுச் சிரித்தான். 

 

தீபக் சிரிக்க சிரிக்கவே.. அர்ஜுன் காலை உயர்த்தி அவனது மார்பில் உதைக்கவும், இதை எதிர்பாராத தீபக் பின்னால் நீர் நிரப்பப்பட்டு வைக்கப்பட்டிருந்த பேரலில் இடித்து அதைப் பிடித்துக் கொண்டு விழுந்தான். அவன் பிடித்துக் கொண்டு விழுந்தததில் அந்த பேரரல் சாயவும், அதில் இருந்த நீர் அவனது மீது கொட்டியது.

 

அர்ஜுன் புன்னகையுடன் “நான்தான் வாஷ் செய்துட்டு வான்னு சொன்னேனே” என்றுவிட்டு.. ஈர உடலில் மணல் ஒட்டியிருந்தவனை பற்றி எழுப்பி விட்ட குத்தில் அவன் சற்றுத் தள்ளிப் போய் விழுந்தான்.

 

அகிலா அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க.. சுற்றியிருந்தவர்கள்.. கத்தி தங்களது ஆதரவை தெரிவித்தார்கள். அவமானத்துடன் எழுந்த தீபக் வெறிக் கொண்டவனாய்.. அர்ஜுனை நோக்கி ஓடி வந்தான். 

 

தன்னை நோக்கி.. வந்தவனின் முகத்தில் குத்த.. அர்ஜுன் தயாராக இருந்தான். ஆனால் வெறியுடன் ஓடி வந்த தீபக்.. அர்ஜுனின் கை வீச்சில் இருந்து தப்பிக்க சட்டென்று குனிந்து.. தோளால் அர்ஜுனின் வயிற்றில் முட்டவும், அதில் சீர்குலைந்து அர்ஜுன் விழுந்தான். அவனோடு விழுந்த தீபக்.. அர்ஜுனின் மேல் அமர்ந்துக் கொண்டு சராமாரியாக குத்துக்களை விட்டான்.

 

அடுத்தடுத்து விழுந்த அடிகளில் அர்ஜுனால் திருப்பி.. தீபக்கை தாக்க முடியவில்லை. அதைப் பயன்படுத்திக் கொண்ட தீபக் விடாது.. அர்ஜுனை ஆக்ரோஷமாக தாக்கினான்.

 

இதைப் பார்த்துக் கொண்டிருந்த சுற்றிலும் நின்றிருந்தவர்கள்.. ஒரு கணம் அமைதியாகி.. பின் தற்பொழுது கை உயர்ந்து நிற்கும்.. தீபக்கிற்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். யாரின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறதோ.. அவர்களின் பின்னால் செல்வதே.. மனிதனின் நியதி என்பதற்கு ஏற்ப.. அர்ஜுனை விட்டு தீபக்கிற்கு ஆதரவு கொடுத்தார்கள். 

 

அங்கு இருவரை தவிர.. மற்றவர்கள் தீபக்கிற்கு ஆதரவாக கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர். இவர்கள் இருவரோ தீபக்கின் கை ஓங்கி இருப்பதை கண்டு அதிர்ந்து நின்றார்கள்.

 

அவர்கள்.. அகிலாவும் அதிராவும்! 

 

தீபக்கிடம் நீ தோற்று போவே.. என்று அர்ஜுனிடம் சவால் விட்டாள் தான்.. அர்ஜுன் தான் தீபக்கை அடிப்பான். அதைப் பார்த்து அதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு அர்ஜுன் மீது கோபம் கொண்டு.. தனது காதலுனுக்காக சண்டையிடலாம் என்று அவள் நினைத்திருக்க.. நடந்தது வேறாக போனதைப் பார்த்து.. அதிர்ந்து நின்றுவிட்டாள்.

 

“வாட் ஹெப்பன்ட் டு அர்ஜு?” என்று அருகில் நின்றிருந்த அதிராவிடம் கேட்க அவளோ அதை விட.. அதிர்ந்து நின்றிருந்தாள். 

 

அர்ஜுன் எதிர்த்து.. சண்டையிட முடியாது தொடர்ந்து அடி வாங்கவும், தீபக் வெற்றி பெற்றதாக ஆர்ப்பரித்தார்கள். ஆனால் தீபக் நிறுத்தாமல் தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்தான். மற்றவர்கள் விரைந்து.. தீபக்கை அர்ஜுனின் மேல் இருந்து எழுப்பினர். அகிலா அவர்களை நோக்கி ஓடவும், அதிராவும் பின்னால் சென்றாள்.

 

அடிப்பட்டு கிடந்த அர்ஜுனை அங்கிருந்த சிலர் பற்றி எழுப்பி அருகில் இருந்த நாற்காலியில் அமர வைத்தார்கள். அர்ஜுனை பார்த்தவாறு விரைந்த அகிலா திடுமென பிரெக் அடித்தாற் போன்று நின்றுவிட்டாள். ஏனெனில் வெற்றி பெற்ற மதர்ப்பில்.. ஒரு கரத்தை உயர்த்தியவாறு சுற்றிலும் நின்று கைத்தட்டிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த தீபக்கை நோக்கி ஓடி வந்த பெண் ஒருத்தி.. அவனைக் கட்டியணைத்தாள். அத்தோடு நில்லாமல் சுற்றிலும் அத்தனை பேர் இருப்பதைப் பற்றி கவலையில்லாது.. அவனை முத்தமிட்டாள்.

 

வெற்றிப் பெற்றவனைக் கவர்ந்திழுக்க அந்த யுவதியின் செயல் என்றுச் சமாதானப்படுத்திக் கொள்ள.. வழியில்லாது.. அந்த பெண் அணிந்திருந்த ஆடவர் அணியும் சட்டை தீபக் உடையது. அன்று மதியம் அகிலா அவனுக்கு வாங்கி தந்தது. எனவே தெரிந்துக் கொண்ட உண்மையில்.. அகிலா ஸ்தம்பித்து நின்றாள். 

 

உடல் முழுவதும் ஆத்திரத்தில் எரிய.. கோபத்துடன் அவர்கள் அருகே வந்த அகிலா.. அந்த யுவதியை அவனிடம் இருந்து பிரித்து தள்ளியவள், தன்னைப் பார்த்து திருதிருவென விழித்துக் கொண்டு நின்றிருந்த தீபக்கின் கன்னத்தில் பளார் என்று அறைந்துவிட்டு காறி உமிழ்ந்தாள்.

 

உடனே “ஏய்” என்று ஆத்திரத்துடன் அகிலாவை அறைய கையை ஓங்கிய வேளையில் படார் என்று அகிலாவின் காலிலேயே விழுந்தான். ஏனெனில் அகிலாவை அடிப்பதற்குள் எழுந்த அர்ஜுன் அவனின் முதுகில் எட்டி உதைத்திருந்தான்.

 

பின் அர்ஜுன் “வேண்டாம் தீபக்! இத்தோட விட்டுரு! இந்த முறை நான் அடி வாங்கிட்டு இருப்பேன் என்று தப்பா கணக்கு போட்டிராதே!  ஐ வார்ன் யு!” என்று எச்சரித்தான். அர்ஜுனுக்கும் தீபக்கிற்கும் நடுவில் சிலர் வந்து.. ஆளுக்கு ஒரு பக்கம் தள்ளிக் கொண்டு சென்றனர். அர்ஜுனை நாற்காலியில் அமர வைத்தார்கள். தீபக்கை அந்த யுவதி அழைத்துக் கொண்டு சென்றாள். பின் அங்கிருந்த கூட்டமும் கலைந்தது. இது அத்தனையும் திகைப்பும் அதிர்ச்சியுமாக அதிரா பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

அர்ஜுனை பார்த்து ஓடி வந்த அகிலா, ஏன் அசையாது நின்றுவிட்டாள் என்று அதிராவிற்கு முதலில் புரியவில்லை. ஒன்று வெற்றி பெற்ற காதலனிடம் சென்றிருக்க வேண்டும்.. அல்லது தோல்வியடைந்த தனது தமையனிடம் சென்றிருக்க வேண்டும்.. இது இரண்டும் அல்லாது.. நிற்பதைக் கண்டு தீபக்கை பார்த்த அதிரா.. அவனுடன் இன்னொரு பெண் ஒட்டிக் கொண்டு நின்றிருப்பதைப் பார்த்து அதிர்ந்தாள். அகிலாவின் அதிர்ச்சிக்கு காரணம் புரிய.. அந்த காட்சியை காண சகியாது.. முகத்தை திருப்பிக் கொண்டாள். 

 

அதற்குள் இத்தனையும் நடைப்பெற்று விட.. அழுகையும் கோபமுமாக நின்றுக் கொண்டிருந்த அகிலாவை பார்த்தாள். தான் தற்பொழுது சென்று சமாதானப்படுத்த வேண்டுமோ.. என்று அவளருகே சென்றவளின் கண்ணில் மீண்டும் நாற்காலியில் அமர வைக்கப்பட்ட அர்ஜுன் பட்டான்.

 

வாயில் இருந்து இரத்தம் கொட்டிக் கொண்டிருக்க, புருவத்தில் சிறு வெட்டு விழுந்து அதில் இருந்து இரத்தம் வழிந்து.. கண்கள் சிவக்க கொடூரமாக காட்சியளித்தான். மேலும்.. முகத்தில் விழுந்த குத்துக்களால்.. ஆங்காங்கு இரத்த சிவப்புகளுடன் அன்று மதியம் தான் முதன் முறையாக அர்ஜுனை பார்த்தவளுக்கே தற்போதைய அவனது தோற்றம்.. அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.

 

மீண்டும் அகிலாவை பார்க்க.. அவளோ மெல்ல அர்ஜுனிடம் வந்து “உனக்கு இவன் டபுள் கேம் ஆடறான்னு தெரியுமா!” என்று அழுது விடுபவள் போல் கேட்டாள். 

 

அதற்கு மெல்ல நிமிர்ந்து பார்த்த அர்ஜுன் மறுப்பாக தலையசைத்து “இவன் த்ரிபுள் கேம் ஆடறது தான் தெரியும்.” என்றுவிட்டு.. அந்த நேரத்திலும் சிரித்தான். 

 

அகிலா மெல்லிய குரலில் “ஸாரி அர்ஜூ!” என்றாள்.

 

அதற்கு அர்ஜுன் அவனது கையில் திணித்த ஐஸ்கட்டியை இரத்தம் வழிந்தது கொண்டிருந்த.. காயத்திற்கு வைத்தவாறு “யாருக்கு வேணும் உன் ஸாரி! உன்னைப் பார்த்தாலே எரிச்சலா வருது. லூசு மாதிரி நடந்துக்கிறே! நீ மெஞ்சூர்டு கேர்ள்! யூ ஹெவ் டு பீ லைக் தட்! அதை விட்டுட்டு மத்தவங்களை பார்த்து அதிகப்பிரசங்கித்தனமா பிஹேவ் செய்யறே! அதனால உன்னோட இயல்பை இழக்கிறே..” என்று எரிந்து விழுந்தான்.

 

அதைக் கேட்டு.. அகிலா முறைக்கவும், சட்டென்று மூண்ட கோபத்துடன் எழுந்த.. அர்ஜுன் “இடியட்!  நான் இப்படியிருக்கிறேன்னா.. அதுக்கு நிறையா ரிஷன் இருக்கு! ஆனா நீ இப்படியிருக்கேன்னா.. அதுக்கு ரிஷனா நான் இருக்கேன்.‌ உனக்கு நார்முலா வீட்டில கொடுக்கிற செல்லத்தை வச்சு.. ஒழுங்கா இருக்க வேண்டியது தானே! அது உனக்கு பத்தலையா! எதுக்கு வீம்புக்கு அவன் மட்டும்.. ஜாலியா சுத்தரான் நானும் சுத்துவேன், அவனுக்கு மட்டும் பேன்க் கார்ட் இருக்கு.. எனக்கும் பேன்க் கார்ட் கொடுங்கன்னு.. எல்லாத்துக்கும் என்னை காட்டி சாதிச்சுட்டதா நினைக்கிறே! ஆனா அதனால நீ எப்படி கேவலமா இருக்கேன்னு தெரியுமா! ஒரு ரோக்கை போய் லவ் செய்துட்டு அதுக்கு நியாயம் வேற சொல்றே!” என்று ஆத்திரம் குறையாமல் திட்டினான்.

 

பின் அமைதியாக பெருமூச்சை இழுத்து விட்டான் முகத்தில் மீண்டும் பழைய நக்கல் சிரிப்பு தோன்றியது.

 

“நீ மட்டும் என்னவாம் என்று கேட்காதே! நான் இப்படி இருக்கிறதுக்கு பல ரிஷன்ஸ் இருக்கு.. அதுல சில ரிஷன்ஸ் உனக்கு தெரிந்திருக்கும். அதனால என்னைப்‌ பற்றிக் கவலைப்படாம உன் வாழ்க்கையை பாரு! படிச்சு உனக்குன்னு ஒரு வேலையை தேடிக்கோ.. அப்பா சேர்த்து வைத்த ப்ராப்பர்ட்டியை நம்பி வாழாதே! யூத்தை என்சாய் செய்! உன் இன்னசன்ஸை தொலைச்சுராதே! இந்த கேடு கெட்ட கெட் டு கெதர் எல்லாம் வேண்டாம். இப்பவே மூட்டையை கட்டிட்டு வீட்டிற்கு போய் சேர்! நாராயணன் அங்கிளையும் மாமியையும் நம்பு! நாளைக்கே டிக்கெட் போடு!” என்றவன், அவளுக்கு அருகில் நின்றிருந்த அதிராவை பார்த்து “போகும் போது.. நீ கூட்டிட்டு வந்த வினையையும் கூட்டிட்டு போ!” என்றான். 

 

சிறிது நேரம் அங்கு எந்த சத்தமும் இல்லை. திடுமென அகிலா முகத்தை‌ மூடிக் கொண்டு அழுதவாறு நின்ற‌ இடத்திலேயே அமர்ந்துவிட்டாள். திடுக்கிட்ட அதிரா.. அவளது அருகில் சென்று தோளில் கையை‌ வைத்தாள். அவள் தொடர்ந்து அழவும், சிறிது நேரம் அவளை அழ விடுவது நல்லது என்றுத் தோன்றியது. தற்பொழுது மெல்ல அர்ஜுனை பார்த்தாள். அவன் உதட்டின் வழியே வழிந்த இரத்தத்தை துடைத்துக் கொண்டிருந்தான். அவன் துடைக்க துடைக்க..‌ இரத்தம் நிற்காமல் வழிந்துக் கொண்டிருந்தது. ஒரு கணம் உதட்டை கடித்து கொண்டு பார்த்தவள், மறுகணம் அவனை நோக்கி சென்றாள்.

 

“பல் உடைஞ்சதாலே இரத்தம் வருதுன்னு நினைக்கிறேன். நீங்க எவ்வளவு துடைச்சாலும்.. வழிஞ்சுட்டே இருக்கும். அதனால சின்ன பஞ்சோ துணியோ வச்சு அந்த இடத்துல அழுத்தி கடிங்க அப்போ தான் இரத்தம் நிற்கும்.” என்றாள்.

 

அதுவரை இவர்களுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் நின்று பார்த்துக் கொண்டிருந்தவள், அருகில் வந்து பேசவும், ஒரு புருவத்தை உயர்த்தி பார்த்தான்.

 

அவனது பார்வைக்கு அர்த்தம் புரிய அதிரா “என்னைப் பற்றிய ஆராய்ச்சி போதும். ப்ளீஸ் நான் சொன்ன மாதிரி செய்யுங்க! பிளட் நிறையா வீணாகுது.. பார்க்கவும் கொடுமையா இருக்கு..” என்றுக் கூறினாள். 

 

அர்ஜுன் அவளிடம் சீண்டியிருந்தாலும்.. சற்றுமுன் அகிலாவிடம் அவன் கூறியதைக் கேட்டு அவன் மீது சிறிது மரியாதை தோன்றியிருந்தது.

 

அர்ஜுன் சுற்றிலும் தேடவும், புரிந்துக் கொண்டு தனது பாக்கெட்டில் இருந்து சிறு கைக்குட்டையை எடுத்து அவன் புறம் நீட்டிய அதிரா “இவ் யூ டொன்ட் மைன்ட்..” என்று இழுத்தாள்.

 

அவளது கைக்குட்டையை பார்த்து சிரித்த அர்ஜுன் “இன்னும் கர்சீப் வச்சுருக்கிற பழக்கம் எல்லாம் இருக்கா..” என்றுச் சிரித்தவாறு வாங்கியவன், வாயை திறந்து வைக்க சிரமப்படவும், அவனிடம் இருந்து கைக்குட்டையை வாங்கிய அதிரா “வாயை நல்லா திறங்க..” என்று கூறவும், அவன் வாயை திறந்தான்.

 

பல் உடைந்த இடத்தில் கைக்குட்டை அழுத்தி பிடித்தாள். பின் மெதுவாக அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் “நீங்க வேணுன்னே தானே அடி வாங்கனீங்க” என்றுக் கேட்டவள், அவனை பேச விடாது முகவாயில் கையை வைத்து வாயை மூட வைத்தாள்.

 

இரத்தப்பெருக்கு நிற்கும் வரை.. அழுத்தமாக கடித்திருந்தவன், பின் அதைத் துப்பிவிட்டு “நான் அடி வாங்கியதை பார்க்க அப்படியா இருந்துச்சு!” என்றுச் சிரித்தவன், சற்று தள்ளி அழுதுக் கொண்டிருந்த அகிலாவை பார்த்து “இவளுக்காக நான் ஏன் அடி‌ வாங்கணும். அவன் எருமை மாடு மாதிரி வந்து மோதினா.. விழாம என்ன செய்வேன். ஆனா நான் இவளுக்காக அவனை அடிக்கலைன்னாலும்.. எனக்காக அவனை அறைஞ்சா பாரு..” என்றுச் சிரித்தான்.

 

அர்ஜுன் கூறுவது பொய் என்று அதிராவிற்கு நன்றாக தெரிந்தது. முரடனா வம்புக்காரனாக இருந்தாலும்.. அவனுக்கு அகிலாவின் மேல் இருக்கும் அக்கறை கண்டு.. அவளது முகத்தில் சிறு முறுவல் மலர்ந்தது.

 

அர்ஜுன் கூறியதைக் கேட்டு விருக்கென நிமிர்ந்த அகிலா “நான் ஒன்றும் உனக்காக அவனை அறையல! அவன் என்னை ஏமாத்திட்டான்.. அதனால தான் அவனை அறைஞ்சேன்.” என்றாள்.

 

அர்ஜுன் “இப்போ ஆவது புத்தி வச்சே..” என்று அதற்கும் சிரித்தான்.

 

அண்ணனும் தங்கையும் பேசிக் கொள்ளும் விசயத்தை பார்த்து.‌. தலையில் அடித்துக் கொள்ள உயர்த்த கையை அடக்கிக் கொண்ட அதிரா.. சற்று சலித்துப் போன குரலில் அகிலாவிடம் “போகலாமா அகிலா!” என்றுக் கேட்டாள்.

 

அகிலா கண்களைத் துடைத்துக் கொண்டு “ம்ம்” என்று‌ செல்ல தொடங்கினாள்.

 

அடிப்பட்ட அர்ஜுனை விட்டு அவள் மட்டும் செல்வதைப் பார்த்த அதிரா மெல்ல அவள் புறம் சரிந்து “உன் அண்ணன் வரலையா?” என்றுக் கேட்டாள்.

 

அகிலா “ஆமாம் இல்ல! அவனுக்கு அடிப்பட்டு இருக்கு! ஆனா அவன் கூப்பிட்டா வர மாட்டானே!” என்றாள்.

 

அதிரா “ஏன் வர மாட்டார்? அடிப்பட்டிருக்கு டாக்டர் கிட்ட போகணும் தானே..” என்றுத் திகைப்புடன் கேட்டாள்.

 

அதற்கு அகிலா “இதை செய்யுனு சொன்னா அவன் செய்ய மாட்டான். இப்போ கூட உன்கிட்ட எப்படி பதில் சொன்னான்னு பார்த்தே தானே..” என்று அழுதததால் மூக்கை உறிஞ்சியவாறு கூறினாள்.

 

அதிரா “சரி தான்! ஆனா..” என்றுத் திரும்பிப் பார்த்தாள். அர்ஜுன் செல்பேசியில் மும்மரமாக இருந்தான்.

 

அப்பொழுது எங்கிருந்தோ ஒரு பெண் ஓடி வந்தவள், அர்ஜுனை கட்டியணைத்தாள். அவனோ முகச்சுளிப்புடன் அவளை விலக்கி நிறுத்தினான்.

 

அதைப் பார்த்த அகிலா “அவனோட கேர்ள் பிரண்ட் ரிஷிதா வந்துட்டா! இனி அவ பார்த்துப்பா நாம் போகலாம். எனக்கு இங்கே இருந்தா தலை வலிக்குது.” என்றாள்.

 

அகிலாவின் நிலைமை புரிய அவளும் சரி என்று தலையை ஆட்டிவிட்டு அவளுடன் நடந்தாள்.

 

சிறிது தூரம் சென்றவள், மெல்ல அவள் புறம் சரிந்து “அகிலா! நாம் இந்தியாவுக்கு போறோம் தானே!” என்றுக் கேட்டாள்.

 

அகிலா “ஆமா! இனி என்னால இங்கே இருக்க முடியாது. அவன் சொன்னதுக்காக இங்கிருந்து போக முடிவு செய்யலை. அவன் சொல்லுலைன்னாலும் நான் இங்கே இருந்து போயிருப்பேன்.” என்றாள்.

 

அதைக் கேட்டு சிரித்த அதிரா “சில விசயங்கள்ல நீயும் உன் அண்ணனும் ஒரே மாதிரி!” என்கவும், அகிலா தற்பொழுது அவளைப் பார்த்து முறைத்தாள். அதிராவிற்கு சிரிப்பு தான் வந்தது. எப்படியோ இந்த விசித்திர உலகத்தில் இருந்து விடுதலை என்ற மகிழ்ச்சியும் கொண்டாள்.

 

உண்மையிலேயே அகிலாவிற்கு தலை வெடித்து விடும் போன்று‌ விண் விண் என்று வலித்தது. அழுததோடு.. மன அழுத்தம், கடற்கரை காற்று என்று எல்லாம் சேர்ந்து கொள்ள.. கண்கள் சொருக வந்தவளை அதிரா தான் பிடித்து அழைத்து சென்றாள்.

 

அதிரா “உன்னால கார் ஓட்ட முடியுமா அகிலா!” என்று கவலையுடன் கேட்டாள்.

 

அகிலா “யா ஐ கேன் மேனேஜ்! வீட்டிற்கு போய் கண்ணை மூடிப் படுத்துட்டா போதும்..” என்றாள்.

 

இருவரும் கார் அருகே வந்ததும்.. நேரம் பார்க்க தனது செல்பேசியை எடுக்க பாக்கெட்டில் கையை விட்டு அதிரா அது காணாது அதிர்ந்தாள்.

 

காரில் அமர்ந்து விட்ட அகிலாவிடம் விசயத்தை கூறவும், அவளும் வேகமாக அதிராவின் செல்பேசி எண்ணிற்கு அழைப்பு விடுத்தாள்.

 

விரைவிலேயே அழைப்பு ஏற்கப்பட்டு அந்த பக்கம் இருந்து கேட்ட ‘ஹலோ!’ என்ற குரலில் திகைத்த அகிலா நிம்மதியுற்றவளாய் “அர்ஜு! அதிராவோட ஃபோன் உன்கிட்ட தான் இருக்கா..” என்றாள்.

 

அகிலா பேசுவதை கேட்டு பரபரப்பும் நிம்மதியும் கொண்ட அதிரா “உன் அண்ணா கிட்ட தான் இருக்கா! தேங்க் காட்!” என்றவளுக்கு அது எப்படி விழுந்திருக்கும் என்றும் புரிந்தது.

 

கைக்குட்டையை எடுக்கும் போது விழுந்திருக்கும்.. என்றுத் தெரிந்தது. 

 

அகிலா “அப்படியா! அதெப்படி? இரு அவ கிட்ட கேட்கிறேன்.” என்று அந்த பக்கம் இருந்த அர்ஜுனிடம் பேசியவள், அதிராவிடம் “அதிரா! நம்மளை வீட்டிற்கு போக சொன்னான். அவன் வீட்டிற்கு வரும் போது.. ஃபோனை தருகிறானாம்.” என்றுக் கூறினாள்.

 

அதைக் கேட்டு அதிரா திகைத்தாள்.

 

‘என்னது! என்னுடைய ஃபோன்.. இன்னொருவரின் கையிலா! அதுவும்.. அவளை சீண்டும் அர்ஜுனிடம் அவளது ஃபோனா!’ என்று மனதிற்குள் அலறியவள், அகிலாவிடம் “ம்கூம்! எனக்கு இப்பவே என் ஃபோன் வேணும்.” என்றாள்.

 

அகிலா “கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி தானே சொன்னேன். அவன் மத்தவங்க சொன்ன கேட்க மாட்டான்.” என்றாள்.

 

அதிரா “சரி நாம் போய்! வேண்டாம்.. வேண்டாம்! நீ காரிலேயே இரு.. தலை வலிக்குதுனு சொன்னே தானே! நான் போய்.. வாங்கிட்டு வரேன்.” என்றாள்.

 

அகிலா “ஆர் யு சுயர்! நீ தனியா போய் வாங்கிப்பியா?” என்றுக் கேட்டாள்.

 

அதிரா “இங்கே பேசிட்டு இருக்கிற நேரம் நான் போய் வாங்கிட்டு வரேன். உன் அண்ணனை அங்கேயே இருக்க சொல்லு..” என்று அவன் இருக்கும் இடத்தை நோக்கி வேகமாக சென்றாள்.

 

அவள் சென்ற பிறகு.. அகிலா அர்ஜுனிடம் அதை தெரிவிக்க.. அதற்கு அர்ஜுன்.. அங்கு வர வேண்டாம். தான் வேற இடத்திற்கு செல்ல போகிறேன்.. என்றுத் தெரிவித்தது கூட அதிராவிற்கு தெரியாது. அதை அதிராவிற்கு கூறி அவளை அழைத்து வர.. காரை விட்டு அகிலா இறங்கிய பொழுது.. ஒரு வேன் வேகமாக வந்து நின்று.. அதில் இருந்து போலீஸ் கூட்டம் ஒன்று இறங்கியது.

 

அதற்கு பின்னால் வந்த ஜீப்பில் இருந்து வந்திறங்கிய காவல்துறை அதிகாரி ஒருவர் ஆங்கிலத்தில் “நமக்கு கிடைத்த இன்பர்மெஷன் உண்மை தான்! இங்கே இருக்கிற ஸ்பை ஆமாம் என்றுச் சொல்லிட்டார். இங்கே போதை பொருட்கள் பயன்படுத்தறாங்க! ம்ம் சீக்கிரம் லத்திசார்ஜ் செய்து எல்லாரையும் கலைச்சுட்டு.. அந்த ஸ்பாட்டை ரவுன்ட்அப் செய்து.. அங்கே இருக்கிறவங்களை அரெஸ்ட் செய்யுங்க..” என்று கட்டளையிட்டார்.

 

ஆசிரியர் பேசுகிறேன்;

 

அச்சோ மழை பெயுதேனு.. எரிச்சலோட நினைச்சுட்டு.. அந்த மழையை முறைத்து பார்த்தபடி.. தொடர்ந்து அந்த ஐந்து நிமிஷம் உட்கார்ந்திருந்தா.. அந்த முறைப்பு இரசிப்பா மாறும் அதிசயம்.. உங்களுக்கு தெரியுமா! இந்த கதையில் இப்போ அதிராவுக்கு அந்த நிலைமை தான்!


   
Vidhushini reacted
Quote
(@vidhushini)
New Member
Joined: 4 months ago
Posts: 3
 

நீ விலக விலக, அர்ஜூன் கூடவே பயணிக்கப்போற அதிரா....

விதி(ரைட்டர்) ஏற்படுத்தப்போகும் விளையாட்டில் அடைமழையில் நனைய மனதைத் தயார் செஞ்சுக்கோ...

 

I think 13 epi வரை வாசிச்சேன்னு நினைக்கிறேன்....


   
rajianbu reacted
ReplyQuote
rajianbu
(@rajianbu)
Admin Admin
Joined: 4 months ago
Posts: 13
Topic starter  

@vidhushini `ஹா.. ஹா.. ஆமா அடுத்தது அந்த பகுதி தான்! உங்க கமெண்ட்ஸ் நினைவிருக்கு.. அங்கேயும் இப்படித்தான் அழகா புகைப்படங்களை பகிர்ந்து கொண்டிங்க.. மிக்க நன்றி..

 

18 வரை பதிவு செய்திருக்கிறேன்.


   
Vidhushini reacted
ReplyQuote
Share: