Forum

Notifications
Clear all

குடை 4

3 Posts
2 Users
3 Reactions
287 Views
rajianbu
(@rajianbu)
Admin Admin
Joined: 4 months ago
Posts: 13
Topic starter  

அத்தியாயம் 4

மலைச்சரிவின் ஓரத்தில் வளைந்து செல்லும் சாலை அமைந்திருக்க.. சாலையின் மறுபுறம் கடற்கரை அமர்ந்திருந்தது. அச்சாலையில் அகிலாவின் கார் மட்டுமின்றி.. வேறு சில கார்களும் பயணித்துக் கொண்டிருந்தன.

 

அகிலா இலாவகமாக கார் ஓட்டுவதை அதிரா வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த இடமும் சூழ்நிலையில் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. மலைகளில் அமைந்துள்ள மரங்களின் காரணமாக ஏற்பட்ட சில்லிப்பும், கடலலையின் சத்தத்துடன் கூடிய.. உப்பு காற்றும்.. என்று அந்த பயணத்தை இரசித்து அனுபவித்தாள்.

 

அப்பொழுது அவர்களுக்கு பின்னால் வந்துக் கொண்டிருந்த காரில் இருந்து பலமான ஹாரன் சத்தம் ஒலித்தது. 

 

அதிரா “அகி! சைட் கொடுத்து அவங்களை முன்னால் போகச் சொல்லு! ஏதோ அவசரம் போல..” என்றாள்.

 

அதைக் கேட்டு அகிலா சத்தமாக சிரித்தாள். “அச்சோ அதிரா! இதுக்கு இது அர்த்தமில்லை. இரு.‌.” என்றுவிட்டு.. காரில் இருந்த ஹாரனை பலமாக அழுத்தினாள். அவள் அழுத்தவும், ஹாரன் ஒலிப்பதை நிறுத்தியிருந்த பின்னால் வந்துக் கொண்டிருந்த காரில் வந்தவர்கள்.. அவள் அழுத்தி முடித்ததும்.. மீண்டும் ஹாரனை பலமாக ஒலிக்க செய்தார்கள். அவர்கள் நிறுத்தியதும் மீண்டும் அகிலா ஹாரன் சத்தம் எழுப்பினாள். தற்பொழுது அவர்களது காருக்கு முன்னால் சென்றுக் கொண்டிருந்த காரில் இருந்து ஹாரன் ஒலி கேட்டது. தற்பொழுது குஷியான அகிலா மீண்டும்.. ஹாரன் அடித்தாள். உடனே பின்னால் வந்துக் கொண்டிருந்த காரில் இருந்து ஹாரன் சத்தம் கேட்டது. இவ்வாறு மூன்று காரில் இருந்து மாறி மாறி ஹாரன் அடித்தவாறு அந்த சாலையில் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.

 

முதலில் திகைப்பும் வியப்புமாக தலையை திருப்பி.. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அதிராவிற்கு.. முடிவில் தலை வலி தான் ஏற்பட்டது. இரம்யமாக இருந்த சூழ்நிலையை இவர்கள் கெடுத்து விட்டது போன்று இருந்தது. அதிரா காதை இறுக மூடிக் கொண்டு அமர்ந்து விட.. அதைப் பார்த்து அகிலாவிற்கு சிரிப்பு தான் வந்தது. ஆனால் அவள் ஹாரன் அடித்ததை நிறுத்தவில்லை. 

 

சிறிது நேரத்தில்.. கடலலையின் சத்தத்தை அடக்கியபடி.. இசையின் சத்தமும்.. அந்த இருளில் மங்கிய வெளிச்சத்தை தரும் விளக்குகளாலும்.. அலங்கரிப்பட்ட ஒரு இடத்தை அடைந்தார்கள். 

 

அகிலாவும்.. அதிராவும் காரில் இருந்து இறங்கினார்கள். அவர்களுடன் காரில் வந்தவர்கள், “கம்..” என்று அணைக்க வருவது போல.. கரங்களை விரித்துக் கொண்டு வரவும், அதிராவும், அகிலாவும்.. அவர்களை கவனியாத பாவனையுடன் ‘வாவ்’ என்றவாறு மணற்பரப்பிற்குள் இறங்கினார்கள். சிறிது நடந்த பின்.. இருவருக்கும் சிரிப்பு பீறிட்டு வந்தது. 

 

அகிலா “அவ்வளவுத்தான்! ஜஸ்ட் இக்னோர் தெம்!” என்றாள்.

 

அதற்கு அதிரா “எஸ் அகி! நாம கோபமாவோ, வெறுப்பவோ பார்த்தா.. தான் அவங்களோட அட்டேன்ஷனை நம் பக்கம் திருப்பிற மாதிரி இருக்கும். எப்பவும் கவனமா தான் இருப்பேன். ஆனா உன் அண்ணன் கிட்ட தான் எப்படி ஏமாந்தேன்னு தெரியலை. ரியாக்ஷனை என் முகத்தில் காட்டின நானே.. டீஸ் செய்ய இடம் கொடுத்துட்டேன்.” என்றாள்.

 

அகிலாவிடம் இருந்து பதில் வராது போகவும், திரும்பிப் பார்த்தாள். அகிலா அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அதிரா என்ன என்பது போல் பார்க்கவும், அகிலா “நீ என் அர்ஜுனை பார்த்ததில் ரொம்ப டிஸ்டர்ப் ஆகிட்டியோ!” என்றுக் கேட்டாள்.

 

அதிரா உடனே மறுப்பு தெரிவித்தாள்.

 

“ச்சே! ச்சே! எனக்கு உன் அண்ணனை பிடிக்கலை.” என்றாள்.

 

அகிலா “உனக்கு அர்ஜுனை பிடிச்சுருக்குனு சொல்லுலை. அவனால் டிஸ்டர்ப் ஆகிட்டேனு தான் சொல்றேன்.” என்றுச் சிரித்தாள்.

 

அதிராவிற்கு என்ன பதில் கூறுவது என்றுத் தெரியவில்லை. அவள் எடுத்துக் கொள்ளும் விதம் வேறாக இருக்கும். எனவே அந்த பேச்சை தவிர்க்க.. சற்று தொலைவில் இளைஞர்கள் திருவிழா போன்று.. நடைப்பெற்றுக் கொண்டிருந்த விருந்தை பார்த்தவாறு “இதுல உன் அப்பாவோட கிளப் பிரெண்ட்ஸோட பிள்ளைகள் மட்டும் தான் கலந்துக்குவாங்களா?” என்றுக் கேட்டாள்.

 

அதற்கு அகிலா “நோ! நோ! இங்கே இந்த மாதிரி யங்ஸ்டர்ஸ் பார்ட்டி நடக்கிறது கேள்விப்பட்டு.. எல்லாரும் கலந்துக்கலானு.. இன்வைட் பண்ணிருந்தாங்க! தீபக் ஃபோனுக்கு என்னோட ஃபோனுக்கு.. லோக்கேஷனோட மேசேஜ் வந்துச்சு!” என்றாள்.

 

அதிரா “சோ! இப்போ மாலத்தீவுல இருக்கிற யங்ஸ்டர்ஸ் கூட்டம் புல்லா இங்கே தான் இருப்பாங்க?” என்கவும், அகிலா “எஸ் செம இல்ல..” என்று.. அதிராவின் தோளில் கையைப் போட்டாள். அதிராவும் குதிகலித்தவளாய் “கண்டிப்பா..” என்று அவளது தோளில் கையைப் போட்டுக் கொண்டு.. அந்த கடல் மணல் பரப்பில் ஓடினார்கள்.

 

அதிராவின் கேள்வியே தேவையில்லை என்பது போல் அங்கு சில வெளிநாட்டு முகங்களும் காணப்பட்டன.

 

விருந்து என்பதற்காக கண்ணை கூசும் பல வண்ண விளக்குகளை தொங்க விட்டு.. பளீச்சென்று வெளிச்சத்தை பரப்பாமல்.. அந்த பரந்த திறந்த வெளி கடற்பரப்பில்.. சீரியல் விளக்குகளை தோரணம் போன்று கட்டப்பட்டு.. ஆங்காங்கு.. கம்பம் நட்டிருந்தார்கள். அதில் சிறிது ஒளியை பரப்பும்.. நீலம் மற்றும் பச்சை வண்ண விளக்குகளை கட்டி வைத்திருந்தார்கள். அதனால் பெரும்பாலும் அரை இருட்டாக தான் இருந்தது. பின் உணவுப் பொருட்கள் விற்கப்படும் ஸ்டால் மற்றும் மதுவகைள் விற்கப்படும் ஸ்டால்களும் இருந்தன. அது போக.. கேளிக்கை விளையாட்டுக்கு என்று ஸ்டால்களும் இருந்தன.

 

சிறு வயதில் பொருட்காட்சியை அதிரா பார்த்திருக்கிறாள். மால்கள் பெருகிய பின்.. பொருட்காட்சியின் மீது இருந்த மவுசு குறைந்துவிட்டது. இந்த இடம் அவளுக்கு அதை நினைவுப்படுத்தியது. ஆனால் இளைஞர்களின் கேளிக்கை திடல்! இதை எண்ணி முடிப்பதற்குள்.. இளைஞர் மற்றும் இளம் பெண்களின் சிரிப்பு சத்தமும்.. ஆராவாரமும்.. மதுவின் வாசனையும்.. சிறுவர்கள் பொருட்காட்சியுடன் ஒப்பிடுவது பெரும் தவறு என்றுப் புரிந்தது. 

 

தலையை உலுக்கி சுயவுணர்வு மீண்டவளுக்கு.. அகிலா அமைதியாக வருவதைப் பார்த்து “என்ன அகி சைலன்ட் ஆகிட்டே..” என்கவும், அவளோ சுற்றிலும் தேடியவாறு “தீப்பை தேடிட்டு இருக்கேன்.” என்றாள்.

 

அதற்கு அதிரா “என்ன சர்பரைஸோ! ஃபோன் போட்டு சொல்லியிருக்க வேண்டியது தானே..” என்றாள்.

 

அகிலா “அரை மணி நேரம் தேடிப் பார்ப்பேன். கிடைக்கலைன்னா.. சர்பரைஸ் ஆவது ஒண்ணாவது ஃபோன் போட்டுருவேன்.” என்றாள்.

 

வலிமையின் அளவை காட்டும்.. பாக்ஸிங் பேக்! ஸ்நோ பவுலிங் என்பது மாதிரியான விளையாட்டுகளை ஆர்வத்துடன் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து.. அதிரா அகிலாவை விளையாட அழைத்தாள். ஆனால் அவள் மறுத்துவிடவும்.. அவர்கள் தொடர்ந்து நடந்தனர். 

 

இங்கே இருப்பதை விட.. சற்றுத் தள்ளி ஆண்கள் மற்றும் பெண்களின் ஆராவாரம் அதிகமாக இருக்கவும், அங்கு சென்றுப் பார்த்தார்கள். அங்கு பீச் கைப்பந்து போட்டி படுஉற்சாகமாக நடந்துக் கொண்டிருக்க.. அவர்களைச் சுற்றி நின்றுக் கொண்டு.. பலர் ஆராவரித்துக் கொண்டிருந்தார்கள். கடற்கரை மணலில் கைப்பந்து விளையாடுவது.. அவ்வளவு எளிதான விசயம் இல்லை. எனவே அடிக்கடி விழுந்து எழுந்து விளையாடுவதைப் பார்க்க உண்மையிலுமே வேடிக்கையாக தான் இருந்தது. 

 

அதிரா சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருக்க.. அவளது கரத்தை பற்றி அங்கிருந்து இழுத்து சென்ற அகிலா “வா அதிரா! இங்கே தீப்ஸ் இல்லை. அங்கே போய் பார்க்கலாம்.” என்கவும், அதிரா தலையில் அடித்துக் கொண்டு சிரித்தவாறு அவளுடன் சென்றாள். அங்கு கடற்பரப்பில் கிரிக்கெட் நடந்துக் கொண்டிருந்தது. அங்கேயும் அகிலாவின் காதலன் கண்ணில் சிக்கவில்லை. ஆனாலும் அகிலா தனது தேடலை நிறுத்தவில்லை. அந்த கடற்பரப்பிற்கு சற்று தள்ளி மரங்கள் நிறைந்த பகுதி இருந்தது. அங்கு சிறு விளக்கு எரிய.. அங்கும் இளைஞர் இளைஞிகள் கூட்டம் காணப்பட்டது. 

 

அகிலா “அங்கே தான் கடைசி.. அங்கேயும் தீபக் கிடைக்கலைன்னா.. கண்டிப்பா ஃபோன் போட்டறேன். அப்பறம் ஜாலியா இந்த இடத்தை சுற்றிப் பார்த்து.. எல்லா விளையாட்டும் விளையாடலாம்.” என்றாள்.

 

பின் இருவரும் அந்த இடத்தை நோக்கி செல்ல செல்லவே.. அங்கிருந்தவர்களின் கோஷம் கேட்டது. அதைக் கேட்டு.. அங்கு என்ன நடக்கிறது என்றுத் தெரிந்துக் கொள்ள ஆர்வத்துடன் சென்றார்கள். கூட்டமாக நெருக்கமாக நின்றிருந்தவர்களைத் தாண்டி எப்படிப் பார்ப்பது என்று இருவரும்.. ஒரு கணம் தயங்கியவர்கள்.. அடுத்த நிமிடம் அங்கிருந்த பெண்கள் கூட்டத்தில் அவர்களைத் தள்ளிக் கொண்டு உள்ளே‌ புகுந்தார்கள். 

 

உயரம் குறைவான அகிலாவால் சட்டென்று உள்ளே நுழைய முடியவில்லை. நடுவில் மாட்டிக் கொண்டாள். ஆனால் இலாவகமாக இடித்துக் கொண்டு நுழைந்த அதிரா.. அங்கு கண்ட காட்சி கண்டு திகைத்தாள்.

 

ஏனெனில் அங்கு இருவர் சண்டையிட்டு கொண்டிருந்தார்கள். அகிலா ரேஸ்லீங்கும் நடைப்பெறும் என்றுக் கூறியிருந்தாள். அதிரா மல்யுத்தம் போன்று.. விதிமுறைகளுடன் சண்டையிடுவார்கள் என்று நினைத்திருந்தாள். ஆனால் அங்கு மணல் தரையில் ஒருவன் கிடக்க அவன் மீது ஏறி‌ அமர்ந்துக் கொண்டு படுத்திருந்தவன் முகத்தில் சரமாரியாக குத்திக் கொண்டிருந்தான். சுற்றி நின்றிருந்தார்களோ.. அவனது குத்துகளை ‘ஒன் டூ த்ரீ’ என்று எண்ணி கொண்டிருந்தார்கள்.

 

‘இதென்ன கொடூரம்’ என்றுத் திகைத்து நின்றாள்.

 

பத்து குத்துக்களை இட்ட வரை எண்ணியவர்கள் முடிவில்.. ஹே என்று கோஷம் எழுப்பவும், அதுவரை குத்துக்களை விட்டுக் கொண்டிருந்தவன், எழுந்து நின்றான். பின் கரத்தை உயர்த்தியாவறு சுற்றிலும் நின்றிருந்த இளைஞர் கூட்டத்தை பார்த்தான். 

 

வெளிச்சத்தில் அப்பொழுது அவனது முகம் நன்கு தெரிந்தது. அவனைப் பார்த்த அதிரா அதிர்ந்து நின்றாள். 

 

வெற்றி பெற்றவனிடம் வந்த.. ஒருவன் “நீதான் ஜெயிச்சே.. இப்போ உன் டர்ன்! யாரை போட்டிக்கு அழைக்க போறே?” என்றுக் கேட்டான்.

 

அதற்கு அவன் அவனருகே குனிந்து ஏதோ கூறவும், மற்றவன் “அவனா! பாவம்டா அவன்! அவன் பாட்டிற்கு ஜாலியா என்சாய் செய்ய இங்கே வந்தான். அதை விட.. இங்கே இருக்கிறவங்க..” என்கையில்.. வெற்றி பெற்றவன்.. முறைக்கவும், “ஒகே! ஒகே! ரூல்ஸ் இஸ் த ரூல்! நீ அவனைத் தான் செலக்ட் செய்திருக்க.. அவனையே கூட்டிட்டு வரச் சொல்றேன். ஆனா அவனைச் சாதாரணமா எடை போட்டிராதே!” என்றுவிட்டு திரும்பி “டேய்! அவன் அந்த டென்ட்குள்ள இப்போ தான் போனான். அவனைப் பிடிச்சு இழுத்துட்டு வா! பாதியில கூப்பிட்ட வெறியில் ஆவது.. இந்த திமிர் பிடிச்சவனை அடிச்சு துவம்சம் செய்யட்டும்.” என்றுச் சிரித்தான். அவனும்.. சிரித்தவாறு சற்றுத் தள்ளியிருந்த கூடாரத்தை நோக்கி சென்றான். அடிப்பட்டவனை.. மற்ற சிலர் அங்கிருந்து அழைத்துக் கொண்டு செல்ல.. இவனோ அடுத்து வருபவனுக்காக வெறி கொண்டவன் போல் காத்திருந்தான்.

 

வெற்றி பெற்றவனைப் பார்த்து திகைத்து நின்றிருந்த அதிரா.. அகிலாவிடம் கூற திரும்பியவள், அவளை அங்கு காணாது திகைத்தாள். அவளால் இன்னும்.. கூட்டத்தினரை தாண்டி வர முடியவில்லை. அதற்குள்.. அதிராவிற்கு பின்னால் நின்றிருந்த பெண்கள் ஹே என்ற கோஷத்துடன் வென்றவனை நோக்கி.. ஓடத் தொடங்கவும், அதில் இடிப்பட்ட அதிரா தடுமாறி கீழே விழுந்தாள். அவளது காலையும் யாரோ மிதித்தார்கள். கூட்டத்தினரிடம் மிதிப்பட்டு.. கட்டுடன் தான் இந்தியா செல்ல போகிறோமோ என்றுப் பயந்த அதிரா அலறினாள். 

 

அப்பொழுது.. யாரோ அவளைப் பற்றி எழுப்பி நிறுத்தினர், தன்னை எழுப்பியவனைப் பார்த்து திகைத்து நின்றாள் என்றால்.. அவனும் அவளைப் பார்த்து.. தனது விருப்பமின்மையை வெளிப்படையாக காட்டினான். அதற்குள்.. அங்கு வந்திருந்த அகிலா “டேய் அர்ஜு! நீ இங்கே தான் இருக்கியா!” என்றாள்.

 

ஆம் சற்றுமுன்.. ஒருவனை சராமாரியாக அடித்து துவம்சம் செய்து வெற்றி பெற்றவன் அர்ஜுன் தான்!

 

அதிரா நேராக நின்றதும்.. அவளை லேசாக அகிலாவின் புறம் தள்ளியவன், “நீ வந்ததே தப்பு! இதுல இவளை வேற இங்கு கூட்டிட்டு வந்திருக்கியா!” என்றுக் கோபத்துடன் கத்தினான்.

 

உடனே அகிலா அவனுக்கு மேல் குரலை உயர்த்தி “என் விசயத்தில் தலையிடாதேனு உனக்கு எத்தனை தரம் சொல்லியிருக்கேன். நான் அப்படித்தான் என் இஷ்டத்திற்கு எங்கே வேணுன்னாலும் போவேன்.” என்று மூச்சிரைக்க கத்தினாள்.

 

அதைக் கேட்ட அர்ஜுனின் முகம் மாறியது. ஒரு வித கோணல் சிரிப்புடன் “சரி உன் இஷ்டம்! பாவம் இதெல்லாம் உனக்கு தெரியாமலேயே விசயத்தை முடிச்சரலானு நினைச்சேன். நீ பார்த்து அனுபவி!” என்றுவிட்டு அகன்றான். 

 

அவனின் பின்னால் பெரும் இரசிகர் கூட்டமே சென்றது. யாரைப் பற்றியும் கவலைப்படாமல்.. முதலில் கரத்தில் கட்டியிருந்த துணியை அகற்றி.. கை விரல்களை விரித்து சுருக்கி பயிற்சி கொடுத்தான். பின் மீண்டும் கட்டியவாறு நிமிர்ந்தவனின் தன்னை மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த அதிரா பட்டாள். அவனும் அவளின் மீது பார்வை எடுக்காது.. நீண்ட துணியை இரு கரத்தின் உள்ளங்கையை சுற்றிக் கட்டினான்.

 

அவனது அழுத்தமான பார்வையினால் மேனியில் சிலிர்ப்பை உணர்ந்த அதிரா.. மெல்ல அகிலாவிடம் “அகிலா! நாம் இங்கே இருந்து போயிரலாமா?” என்றுக் கேட்டாள்.

 

அதற்கு அகிலா சுற்றிலும் இருந்த கூட்டத்தில் தீபக்கை தேடியவாறு “இரு அதிரா! தீபக்கை இன்னும் நான் பார்க்கலையே! அவன் எப்படியும் இங்கே தான் இருப்பான். அவனுக்கு இந்த மாதிரி அடிதடி எல்லாம் ரொம்ப பிடிக்கும்.” என்றாள்.

 

அதிரா “உன் அண்ணன் சொல்லியதை கேட்டே தானே! ஏதோ சரியில்லைனு தோணுது. வா நாம் போயிரலாம்.” என்றாள்.

 

அகிலா “ஐய்யே! அவனோட மிரட்டலுக்கா இப்படி பயப்படறே! அவனுக்கு மிரட்ட மட்டும் தான் தெரியும். அவன் முன்னாடியே தீபக் கூட ஜோடியா நின்னு வெறுப்பேத்த போறேன் பாரு..” என்றவாறு எங்கோ பார்க்கவும், அதிரா “அகிலா!” என்று அழுத்தமாக அழைத்து அவளின் கவனத்தை தன் பக்கம் திருப்பினாள்.

 

அகிலா அவளைப் பார்க்கவும், அதிரா “உன் அண்ணனுக்கு நீ தீபக் கூட சுத்தறது பிடிக்கலைனு நினைக்கிறேன். அவன் கூட சுத்த தான்.. இங்கே வந்ததும்.. என்னைக் கூட்டிட்டு வந்ததும்.. அவனுக்கு பிடிக்கலை. அதனால தான் பிளன் போட்டு உன் வீட்டுக்கு வரவழைச்சு.. உன்னை இங்கே வர விடாமல் செய்தான்னு நினைக்கிறேன். இதெல்லாம் எதற்கோ என்று இருக்கு..” என்றாள்.

 

அகிலா “எல்லாம் எதுக்கு? தீபக்கை என்கிட்ட இருந்து பிரிக்க தான்.. அது அவனால் முடியாது.” என்றுவிட்டு.. செல்பேசியை எடுத்து.. சர்பரைஸ் ஆட்டம் காட்டியது போதும்.. என்று அவனை அழைத்தாள். நீண்ட ஆகியும் செல்பேசி எடுக்காது இருக்கவும், மீண்டும் முயற்சி செய்தாள். இம்முறையில் அழைப்பு ஏற்காது இருக்கவும்.. அகிலா “என்ன பண்றான்? ஒருவேளை மீயுசீக் ஹால்ல இருக்கானோ..” என்று முணுமுணுத்தவாறு மீண்டும் முயற்சிக்க போனவளை.. அதிரா தடுத்தாள்.

 

அதிரா “நீ எத்தனைத் தரம் ஃபோன் போட்டாலும்.. இப்போதைக்கு தீபக் எடுக்க மாட்டான்.” என்றாள்.

 

அகிலா “ஏன்” என்று அவளைப் பார்க்கவும், அதிரா கண்களால் சுட்டிக் காட்டினாள். வேகமாக திரும்பிப் பார்த்த அகிலா திடுக்கிட்டாள்.

 

ஏனெனில் சண்டையிடும் பகுதியில்.. அர்ஜுன் நின்றிருக்க.. அங்கு திருதிருவென விழித்தவாறு வெறும் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்துக் கொண்டு தீபக் நின்றிருந்தான்.

 

தீபக் “வாட் இஸ் திஸ் அர்ஜுன்! என்னை எதுக்கு கூப்பிட்டே?” என்று ஆத்திரத்துடன் கேட்டான்.

 

ஆனால் அர்ஜுன் “ஜஸ்ட் கோ! வாஷ் யுவர் பாடி அன்ட் கம்! ஐ டொன்ட் வான்ட் டு டச் யுவர் டர்டி பாடி!” என்றான்.

 

அதைக் கேட்ட தீபக் “ஹெ என்ன!” என்று வெறியுடன் வந்த பொழுது “தீபக்..” என்று அகிலா அழைக்கவும், தீபக் திடுக்கிட்டு பார்த்தான். அகிலா அவர்களை நோக்கி ஓடி வந்துக் கொண்டிருந்தாள்.

 

தீபக்கின் அதிர்ந்த முகத்தைப் பார்த்து சிரித்த அர்ஜுன் “எதுக்கு இப்படி ஷாக் ஆகிற தீபக்! நாலு பேரை ஒரே நேரத்தில் கேர்ள் பிரெண்டா வைத்திருந்தா.. இந்த மாதிரி சங்கடம் எல்லாம் வரும் என்றுத் தெரிந்திருக்கணும்.” என்றவன், சட்டென்று இறுகிய குரலில் “ஆனா அகிலாவிற்கு நீ எதையும் தெரிய வைக்க கூடாது. அவ கூட பிரெக்அப் பண்ணிட்டு என் முன்னாடி நீல்டவுன் செய்! நான் உன்னை மன்னிச்சறேன்.” என்றான்.

 

அதற்குள் அவர்களுக்கு நடுவே வந்துவிட்ட அகிலா “அர்ஜு நீ பண்ணறது ரொம்ப தப்பு! நான் தீபக்கை லவ் செய்வதில் உனக்கு என்ன பிரச்சினை? இவர் ரோக் என்று.. அதிரா கிட்ட சொன்னியாம்.. ஹவ் டேர் டு ஷே திஸ்! ஆமா.. இதுக்கு முன்னாடி.. இவர் வேற பொண்ணு கூட பழக்கம் வச்சுருந்தார். இப்போ அவங்க பிரெக்அப் செய்துட்டாங்க! நீயும் தான் கேர்ள் பிரண்ட் மாத்துவே! அப்போ நீதான் அல்டிமேட் ரோக்..” என்றாள்.

 

ஆனால் அர்ஜுன்‌ “அப்போ‌ யார் பெரிய ரோக்! யார் சின்ன ரோக் என்று சண்டை போட்டு யார் ஜெயிக்கிறாங்க என்பதை வச்சு முடிவு செய்துக்கிறோம்.” என்றுச் சிரித்தவாறு கூறினான்.

 

உடனே அகிலா “தீபக் கூட ஃபைட் செய்தா.. நீதான் தோத்து போவே!” என்று சவாலிட்டாள்.

 

அர்ஜுன் “இஸிட்! அதையும் பார்க்கலாம். மூவ்” என்று அசட்டையாக கூறினான்.

 

அகிலா தீபக் புறம் திரும்பி.. “பீட் ஹீம்..” என்றுவிட்டு அர்ஜுனை முறைத்தவாறு அதிராவிடம் சென்று நின்றுக் கொண்டாள்..

 

இருவரும் வேங்கை கொண்ட புலி போல் ஒருத்தரை ஒருத்தர் முறைத்தவாறு நின்று சண்டைக்கு தயாரானார்கள்.

ஆசிரியர் பேசுகிறேன் 

 

சரசரன்னு பெயற மழை சில சமயம்.. மூச்சு முட்டும் தெரியுங்களா! ஒதுங்க இடம் தேடுவோம். இப்போதைக்கு நம்ம கதாநாயகியின் நிலைமை அதுதான்.. அர்ஜுன் கிட்ட இருந்து ஒதுங்கணும்.


   
Vidhushini reacted
Quote
(@vidhushini)
New Member
Joined: 4 months ago
Posts: 3
 

சாரலுக்கே பயந்து ஓட முயற்சி செய்வாளே... 🤣🤣🤣 அதிராவாவது அடைமழையில் சிரிச்சுக்கிட்டே நனையுறதாவது?


   
rajianbu reacted
ReplyQuote
rajianbu
(@rajianbu)
Admin Admin
Joined: 4 months ago
Posts: 13
Topic starter  

@vidhushini ஹா.. ஹா.. ஆமாம் முடியாது ரொம்ப கஷ்டம் தான்! நைஸ் பிக்சர்! நன்றி..


   
Vidhushini reacted
ReplyQuote
Share: