குடை 16
அத்தியாயம் 16
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அர்ஜுன் அவனது செல்பேசியின் அழைப்பு சத்தத்தில் தான் எழுந்தான். சரியாக இமையை கூடத் திறக்க முடியாமல் செல்பேசியை எடுத்து யார் அழைத்தது என்றுப் பார்த்தான். அவனது தந்தை
தான் அழைத்திருந்தார்.
‘கீழே இருந்து கொண்டு எதற்கு அழைக்கிறார்?’ என்று எண்ணமிட்டவாறு அழைப்பை ஏற்பதற்குள்.. அழைப்பு நின்றது. அவன் முயற்சிக்கலாம் என்று நினைக்கையில் செல்பேசி மீண்டும் ஒலித்தது மட்டுமில்லாது கதவும் தட்டப்பட்டது.
செல்பேசியை அப்படிப் போட்டுவிட்டு போர்வையை விலக்கி விட்டு எழுந்து வந்து கதவை திறந்ததும் அங்கு மாலதி நின்றிருந்தார்.
அர்ஜுனை பார்த்ததும் மாலதி “அர்ஜு! கீழே உன்னைத் தேடி போலீஸ் வந்திருக்கு! உன் அப்பா உன்னைக் கீழே கூப்பிடுகிறார். சீக்கிரம் வா” என்று பதட்டத்துடன் கூறினார்.
“வாட்! ஓ அன்னைக்கு நடந்த பார்ட்டில கலந்துக்கிட்டதுக்கா! அதுல கலந்துட்ட.. எல்லாரையும் க்யூ கட்டி நிற்க வச்சா.. நான் அந்த க்யூவில் முதல் ஆளா வந்து நிற்கிறேன்.” என்று வெறுப்புடன் கூறிவிட்டு கதவை மூடப் போனான்.
ஏனெனில் அன்று கைது செய்தவர்கள் அடுத்த நாள்.. சத்தமே இல்லாமல் விடுதலை செய்யப்பட்டார்கள். அதுக்கு கைமாறாக நிச்சயம் பணம் மாறியிருக்கும். அதனால் அவ்வாறு வெறுப்புடன் கூறினான்.
கதவை சாத்தும் முன்.. கை வைத்து தடுத்த மாலதி “இது அதில்லை அர்ஜு! ஹிட் அன்ட் ரன் கேஸ்! இங்கே வருவதற்கு முந்தைய நாள் சென்னையில் ஒரு பெண் மேலே இடிச்சிட்டு வந்திட்டியாம். அந்த பொண்ணு இப்போ ஹாஸ்பெட்டல இருக்கு! அது உன் வண்டி தான்னு நேத்து கண்டுப்பிடிச்சு இன்னைக்கு இங்கேயே உன்னைத் தேடி வந்துட்டாங்க! மாலத்தீவு போலீஸ் உன்னைக் கூட்டிட்டு போக வந்திருக்காங்க! உன் அப்பா தான் நிறுத்தி வைத்திருக்கிறார்.” என்று பீதியுடன் கூறினார்.
அர்ஜுன் “வாட் ரப்பீஷ்! ஆக்சுவலி அப்படி போனவனை பிடிச்சு கொடுத்ததே நானு!” என்றவன், “வெயிட் எ மினிட் ப்ளீஸ்!” என்றுவிட்டு விரைந்து தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு தலை வழியாக டீசர்ட்டை போட்டவாறு படியிறங்கி வந்தான்.
ஷோபாவில் எதிர் எதிராக அமர்ந்துக் கொண்டு இருவரிடம் கார்த்திக்கேயன் பேசிக் கொண்டிருந்தார். அர்ஜுன் வருவதைப் பார்த்து.. அந்த இரு போலீஸாரும் எழுந்தனர். அவர்கள் முன் சென்று நின்ற அர்ஜுன் “ப்ளீஸ்! எக்ஸ்பிளைன் டு மீ!” என்றான்.
(இனி அவர்களின் உரையாடல் ஆங்கிலத்தில்)
அவர்களும் அவனது அன்னை கூறியதைத் தான் கூறினார்கள். அவர்கள் கூடுதலாக விபத்து நடந்த இடத்தை கூறினார்கள். ஆனால் அந்த பெண்ணை பற்றிய விபரங்களைக் கூற மறுத்துவிட்டார்கள். அந்த பெண்ணின் பாதுகாப்பு கருதி தெரிவிக்க மாட்டோம் என்றுக் கூறினர்.
அவர்கள் கூறியதை முழுவதும் கேட்ட அர்ஜுன் “ஸாரி நீங்க தவறா வந்திட்டிங்க! நீங்க போகலாம். பிகாஸ் என் கை என்ன செய்யும் என்று எனக்கு தெரியும் அதே மாதிரி தான்.. நான் கார் ஓடிட்டனா.. எந்த டிகிரியில்.. ஓடும் என்று எனக்கு தெரியும். எனக்கு தெரியாமல் ஆக்ஸிடென்ட்டா! அந்த பொண்ணு பொய் சொல்லியிருக்கு! நான் இப்போ என் மேலே பொய்யா குற்றம் சாட்டியதிற்கு அந்த பொண்ணு மேலே கேஸ் போடலானு இருக்கேன்.” என்றான்.
அதற்கு அவர்களில் ஒரு காவலர் “நாங்க தகுந்த ஆதாரத்துடன் தான் வந்திருக்கிறோம் மிஸ்டர் அர்ஜுன்! சென்னை போலீஸார் அனுப்பிய தகவல்களை ஒருமுறைக்கு இருமுறை செக் செய்த பின்பு தான் வந்திருக்கிறோம். நாங்க உங்களை கைது செய்ய வரலை. சென்னை போலீஸிடம் உங்களை ஒப்படைக்க போகிறோம். நீங்க சென்னைக்கு போய்.. அவங்க விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் போதும். உங்க பக்க உண்மையை விளக்கி.. நீங்க குற்றமற்றவர் என்று நிரூபிங்க! ஆனா இன்னைக்கு பதினொரு மணிக்கு இந்தியாவிற்கு கிளம்பிற பிளைட்டில் நீங்க சென்று தான் ஆகணும். நாங்க உங்களை விமான அதிகாரிகள் கிட்ட ஒப்படைப்போம். அவங்க உங்களை சென்னை போலீஸிடம் ஒப்படைப்பாங்க! மறுபடியும் சொல்கிறோம். இது அரெஸ்ட் மாதிரி இல்லை. உங்க மேலே குற்றம் சுமத்தியிருக்கிறாங்க.. அதை நீங்க நேரில் போய் கிளியர் செய்து தான் ஆகணும். இப்போ நீங்க எங்க கூட வந்து தான் ஆகணும். இது எங்களுக்கு வந்த ஆர்டர்!” என்று அர்ஜுனுக்கு விளக்கமளித்தார்.
அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த கார்த்திகேயன் “விசயம் பெருசா ஆவதற்குள்.. உன் பெயரை கிளியர் செய்துட்டு வா! அவங்க அன்யூனிபார்மில் தான் உன்னை கூட்டிட்டு போக ஏற்பாடு செய்திருக்கேன். அப்பறம் ஹாஸ்பெட்டல இருக்கிற அந்த பொண்ணுக்கு ட்ரீட்மென்ட் நடந்துட்டு தான் இருக்கும்.” என்று தமிழில் கூறினார்.
அவரைப் பார்த்த அர்ஜுன் கண்களில் சிரிப்புடன் “இந்த ஆப்பர்சூனிட்டியை நான் யூஸ் செய்துக்கவா அப்பா!” என்று கண்ணடித்தான்.
அவர் புரியாமல் பார்க்கவும், அர்ஜுன் “அதுதான் உங்க மானத்தை வாங்குகிற மேட்டர்! இந்தியாவிற்கு போய்.. ஆமாம் நான்தான் இடிச்சேன் என்று ஒத்துக்குவா..” என்கவும், கார்த்திகேயன் திகைப்பும் ஆத்திரமுமாக இருக்கையில் இருந்து எழுந்து “என்ன பிளாக் மெயிலா!” என்றுக் கர்ஜீத்தார்.
அதற்கு அர்ஜுன் “நான் இங்கிருந்து சென்ற பிறகு.. அந்த பெண்ணிற்கு எதாவது நடந்தால் அதுதான் நடக்கும் என்று நான் பிளாக் மெயில் செய்யப் போவதை சரியாக கெஸ் செய்திட்டிங்க அப்பா! நீங்க பயங்கரமான ஆளு தான்!” என்றுச் சிரித்தான்.
கார்த்திகேயன் ஆத்திரத்துடன் அவனை நோக்கி முன்னே எட்டு எடுத்து வைக்கவும், மாலதி “ஏன்ங்க!” என்று அவரது தோளைப் பற்றி அழுத்தினார்.
அதைப் பார்த்து சத்தமாக சிரித்த அர்ஜுன் “டொன்ட் வெர்ரி அப்பா! இந்த மாதிரி சான்ஸ்ஸஸ் நானாக உருவாக்கியதாக இருக்கணும். மற்றவங்களால் இருக்க கூடாது. இதுல முக்கியமா என் பெயரை கிளியர் வேண்டி இருக்கிறது. அதுனால நான் கிளம்பறேன்.” என்று படியேறி சென்றான்.
இரண்டாம் தளத்தில் அவனுக்காக அகிலா காத்திருந்தாள். கீழே நடந்ததை பார்த்துக் கொண்டு தான் இருந்திருக்கிறாள்.. என்று அவளது முகத்தை வைத்தே அவனால் யூகிக்க முடிந்தது.
எனவே அவளைப் பார்த்ததும்.. அர்ஜுன் “நான் வரும் வரை அதிரா கூட இருக்க வேண்டியது தானே! ஆக்சுவலா இப்போ அங்கே வர முடியுமானு தான் யோசிச்சுட்டு வந்தேன். நாம் இரண்டு பேரும் இங்கிருந்து போக போகிறோம். அதனால அதிரா தனியா இங்கே இருக்க வேண்டாம் அவளையும் இந்தியாவிற்கு ஷீஃப்ட் செய்ய நினைத்தேன்.” என்றான்.
அதற்கு அகிலா “அப்பா கூப்பிட்டார் அதுதான் வந்துட்டு உன்னை அனுப்பலானு இருந்தேன். ஆனா உனக்கு இப்படி ஆப்பு இந்தியாவுல ரெடியா இருக்கிறது எனக்கு தெரியாதே! இப்போ நீ சொன்னது சரிதான்! நாம் இல்லாமல் அதிரா இங்கே தனியாக இருக்க வேண்டாம்.” என்றாள்.
அர்ஜுன் “நான் அதிராவிற்கு டிக்கெட் புக் செய்கிறேன். அவளோட பாஸ்புக் கொடு..” என்றான்.
அதற்கு அகிலா “ஹாஸ்பெட்டல கேட்டாங்கனு கொடுத்தேனே! அதனால அங்கே ஹாஸ்பெட்டல தான் அவ தின்க்ஸ் கூட இருக்கு!” என்றாள்.
அர்ஜுன் “அப்போ இப்பவே போய் டிக்கெட் புக் செய்து அவளுடனே நேராக ஏர்போர்ட்க்கு வா! அது எவ்வளவு லேட் ஆனாலும் பரவாலை. அவ கூடத் தான் வரணும். என்னையும் வேற எங்கேயும் அனுப்ப மாட்டாங்க! நான் குறிப்பிட்ட நேரத்தில் கிளம்பி ஆகணும். ஆனா நாம் ஒன்றாகவே இந்தியாவில் மீட் செய்யலாம்.” என்றான்.
சரி என்று தலையை ஆட்டிய அகிலா அவனைப் பார்த்து நமட்டுச் சிரிப்புடன் அங்கேயே நின்றாள். அவள் எதற்காக சிரிக்கிறாள் என்றுப் புரிந்த அர்ஜுன் புன்னகையுடன் “நான் நினைச்சது வேற நடக்கிறது வேற.. உன்னை போனு சொல்லிட்டு.. அதிராவை போக வேண்டானு சொல்லிட்டு.. கடைசியில் நானும் உங்க கூட இந்தியா கிளம்பிறதை நினைச்சு தானே சிரிக்கிறே! பட் ஹு நோஸ் அகி! இது கூட மாறலாம்” என்றுத் தோள்களைக் குலுக்கிவிட்டு.. சென்றான்.
அதன்பின் அகிலா வேகமாக தயாராகி.. தனது அன்னை மற்றும் தந்தையிடம் விடைப்பெற்றுக் கொண்டாள். மாலதி அகிலாவின் கையில் பதிவு செய்த பயணச்சீட்டை கொடுத்தார். நேரம் ஒன்பது தான் ஆகியிருக்கே.. இவ்வளவு சீக்கிரம் கிளம்பியதிற்கு மாலதி காரணம் கேட்கவும், அகிலா அதிராவை கூட்டிக் கொண்டு போக வேண்டும் என்றுக் கூறினாள். அதற்கு மாலதி “அந்த பெண் சங்காத்தம் வேண்டாம். உன் அண்ணன்..” என்று ஏதோ கூறப் போகவும், கார்த்திகேயன் “விடு மாலதி! இனி அந்த பொண்ணும் இவங்க பக்கம் திரும்பியும் கூடப் பார்க்க மாட்டா! அண்ணனும் தங்கச்சியும் தான் அந்த பொண்ணு மேலே உருகி வழியறாங்க..” என்று தனது ஐபேட்டில் இருந்து கண்ணை எடுக்காமல் கூறினார்.
தந்தை இதுவரை அனுமதி கொடுத்ததே பெரிய விசயம் என்று அகிலா மருத்துவமனையை நோக்கி விரைந்தாள். அங்கு அதிரா இன்னும் மயக்கநிலையில் இருப்பதைப் பார்த்துவிட்டு.. அவளுக்கும் மருத்துவமனையில் கூறி.. இந்தியாவிற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்ய சொல்லி அதற்கான செலவை ஏற்றுக் கொண்டாள். பின் அதிராவிற்கு பயணச்சீட்டை பதிவு செய்ய நினைத்த பொழுது.. மருத்துவமனை ஏற்பாட்டில் அதுவும் ஒன்று.. என்று அவர்களே பதிவு செய்து வைத்திருந்தார்கள். சிறிது நேரத்திலேயே அவளது செல்பேசிக்கு.. அதன் நகல் வந்தது. ஒரு மணி நேரத்தில் அனைத்து ஏற்பாடுகளும் மருத்துவமனை செய்தது. அகிலாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. சாதாரணமாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவது என்றால்.. அனைத்து மருந்து மற்றும் சிகிச்சை கணக்குகளும் சரிப்பார்க்கப்பட்டு.. அரை நாளாவது ஆகும். எனவே சற்று பதட்டத்துடன் தான் ஏற்பாடு செய்ய கூறினாள். ஆனால் உடனே செய்யப்பட்டதைக் கண்டு மகிழ்ந்தாள். உடனே அதை அர்ஜுனிடம் தெரிவித்தாள். அவனும் ஆச்சரியப்பட்டான். பின் இதுவும் நல்லதாகி விட்டது. அனைவரும் ஒன்றாக பயணிக்கலாம். விமானநிலையத்தில் சந்திக்கலாம் என்றுக் கூறியவன், அதிராவின் முகத்தை இந்தியாவில் தான் பார்க்க முடியும் என்று நினைத்திருந்ததாகவும்.. இது அவனுக்கு சந்தோஷமான செய்தி என்று சிரித்தவனை.. வெட்கமா என்று அகிலா கிண்டல் செய்தாள்.
பின் பத்து மணியளவில் மருத்துவமனையில் இருந்து.. ஆம்புலன்ஸ் ஒன்றில் அதிராவுடன் அகிலா கிளம்பினாள். அவர்கள் கிளம்பிய நேரத்தை கணக்கிட்டு அர்ஜுனும் வீட்டில் இருந்து கிளம்பினான்.
விமான நிலையத்திற்கு சென்றதும்.. தன்னுடன் வந்த காவலர்களிடம்.. தனது தங்கையை சந்திக்க வேண்டும் என்றுக் கூறி.. மயக்கநிலையில் இருக்கும் அதிராவை விமானத்திற்குள் அழைத்து செல்ல என்று பிரத்தியேக இடத்திற்கு அனுமதி பெற்று காவலர்களுடனே சென்றான். அங்கு சென்றதும்.. ஸ்டெக்சரில் படுக்க வைக்கப்பட்டிருந்த அதிராவிடம் தான் நேராக சென்றான். மயக்க நிலையில் இருந்து உறக்க நிலையில் இருக்கும் அதிராவின் நிர்மலமான முகத்தை ஆசையுடன் வருடினான்.
பின் அகிலாவிடம் “உன் அண்ணியை பத்திரமாக கூட்டிட்டு வந்ததிற்கு தேங்க்ஸ்!” என்றான்.
அதைக் கேட்டு அவனது தோளில் பட் என்று அடித்த அகிலா “அவ என் பிரெண்ட்! ஆச்சுவலா உன்னை இன்னும் பலமா அடிக்க கட்டை கிடைச்சா பரவலா! அவளோட இந்த நிலைமைக்கு நீதானே காரணம்..” என்றாள்.
அதைக் கேட்டவனின் முகத்தில் திரை விழுந்தது.
அதிராவை பார்த்தவாறு “நிச்சயம்.. என் கூட அதிரா சந்தோஷமா இருக்க போவதை நீ பார்ப்பே அகிலா! இட்ஸ் மை பிராமிஸ்.. என்பதை விட.. என்னோட லைஃப் என்று வேண்டுமென்றாலும் சொல்லலாம்.” என்றான்.
ஆனாலும் அகிலா கோபம் குறையாது “ப்ச் வசனம் பேசாதே!” என்றாள்.
அதற்கு அர்ஜுன் சிரித்தவாறு “நான் எவ்வளவோ தடவை அவ கிட்ட வார்ன் செய்தேன். நீ கொஞ்சம் கொஞ்சமா என்னை அட்ரெக்ட் செய்துட்டே இருக்கே.. மொத்தமா என்னை இழுக்கிறதுக்குள்ள.. என்னை அவாய்ட் செய்ய சொன்னேன். அவ கேட்கலை. என்னோட ரவுடிஷத்தையும் விரும்பினா.. என்னோட சீண்டலையும் விரும்பினா.. என்னை அவ பக்கம் இழுத்துட்டா! இப்போ பேக் அடிச்சா விடுவேனா..” என்றுக் கேட்டான்.
அகிலா “போ அர்ஜு! நீ என்ன சொன்னாலும் எனக்கு சரியா தான் தெரியுது. அதுக்கு தான் முதல்ல கோபம் வரும். அதென்ன நான் என்ன செய்தாலும் அது தப்புனு சொல்லிட்டு நீ சரியானதை சொல்றேன்னு..” என்று முறைத்தவளைப் பார்த்து அர்ஜுனுக்கு சிரிப்பு தான் வந்தது.
அகிலா தொடர்ந்து “எப்படியோ! அதிரா உன் கூட சந்தோஷமா இருப்பானு சொன்னே தானே! அதை மட்டும் நடத்திக் காட்டு எனக்கு அது போதும்.” என்றாள்.
அவளது தலையை செல்லமாக தட்டியவன், அவளது இருக்கை எண் என்ன என்றுக் கேட்டான். எதுவாக இருந்தாலும்.. அதிராவுடன் இருக்க அதிகாரியுடன் பேச வேண்டும் என்றான். அதற்கு சரி என்று தலையை ஆட்டியவாறு அவளது பயணச்சீட்டை காட்டினாள். அதை வாங்கிப் பார்த்துவிட்டு திருப்பிக் கொடுக்க போன அர்ஜுன், மீண்டும் அதைப் பார்த்துவிட்டு.. தன்னுடையதை செல்பேசியில் எடுத்துப் பார்த்தான். பின் அகிலாவிடம் அதிராவின் பயணச்சீட்டிற்கான எண்ணை கேட்டான். அவளும் எடுத்துக் காட்டினாள். அதைப் பார்த்த அர்ஜுன் அகிலாவிடம் “அதிராவிற்கு நீதான் டிக்கெட் புக் செய்தியா?” என்றுக் கேட்டான்.
அகிலா “ஆமா! எல்லா வேலையும் க்விக்கா முடிச்சுட்டேன் தெரியுமா..” என்றுப் பெருமையுடன் கூறினாள்.
ஆனால் அர்ஜுன் முகத்தில் பலத்த யோசனை படர்ந்தது.
பின் தனது செல்பேசியை எடுத்து யாரையோ அழைத்தான்.
“நாராயணன் அங்கிள்! அங்கே என்னைத் தேடி போலீஸ் வந்துச்சா?” என்றுக் கேட்டான்.
அதற்கு அவர்களது மேனேஜர் நாராயணன் “பணக்கார பிள்ளைன்னா ஆயிரம் வம்பு வருன்னு சொல்லியிருக்கேனோ இல்லையோ! அதன்படி தான்.. இரண்டு நாளைக்கு முன்னாடி ஒரு கேஸை எடுத்துண்டு வந்தா! நான் அது உன் வரை எட்டபிடாதுனு! அது பொய்யுனு நிரூபிச்சுட்டேன்டா அம்பி! அது உன் வரை எட்டியிருச்சோ! நீ கவலைப்படாதே! நான் பார்த்துக்கிறேன். நீ எக்காரணம் கொண்டும் இங்கே வந்திராதே!” என்று தன்னை மரியாதையுடன் நடத்தும் தனது முதலாளியின் மகனிடம் உரிமையாக பேசினார்.
அர்ஜுனின் முகம் இறுகியது.
பின் “ஒகே அங்கிள்! எப்பவும் சொல்ற வார்த்தை தான்! நீங்க மட்டும் இல்லைன்னா! நான் என்னவாகிருப்பேன் என்றே தெரியாது.” என்றான்.
அதற்கு நாராயணன் “நான் இருந்தாலும் இல்லைன்னாலும் நீ தங்க கம்பி தான்!” என்று அவனை விட்டுத் தராமல் பேசினார். பின் மெதுவாக “அந்த அடம் பிடிக்கிறதை மட்டும் கொஞ்சம் குறைச்சுட்டா! உன்னை நோக்கி யாரும் விரல் நீட்ட மாட்டா!” என்றார்.
அர்ஜுன் முறுவலித்துவிட்டு.. அகிலா வருவாள் அவளைப் பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
அர்ஜுன் பேசுவதை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த அகிலா “அர்ஜு என்னாச்சு!” என்றுக் கேட்டாள்.
அதற்கு அர்ஜுன் “நம்ம மூணு பேருக்கும் டிக்கெட் புக் செய்தது அப்பா தான்! அதை அவர் நேற்றே செய்துட்டார். மூன்றிலும் பார்.. டிக்கெட் நம்பர், டைம், டேட் பார்! இதைக் கூட நீ செக் செய்யலையா! நீ டிக்கெட் புக் செய்த போது.. சும்மா போக்கு காட்டியிருக்காங்க! அதே மாதிரி.. என்னை இங்கிருந்து அனுப்ப.. சென்னையில் நடந்த ஒரு இன்ஸிடன்ஸை யுஸ் செய்ய நினைத்திருக்கிறார். அதை மறுபடியும் பெருசு பண்ணி என்னை சென்னையை விட்டு நகர விடாமல் செய்ய பார்க்கிறார். எல்லாம் அப்பாவோட ஏற்பாடு..” என்று இறுகிய குரலில் கூறினான்.
அகிலா கேட்டதை நம்ப முடியாமல் நிற்கவும், அர்ஜுன் தொடர்ந்து “அவரோட பிஸினஸ் டாக் இருக்கும் போது.. நான் இங்கே இருக்க கூடாது என்றுப் பார்க்கிறார். அதே மாதிரி அதிராவையும் என்கிட்ட இருந்து விலக்க பார்க்கிறார். அதனால் போட்ட பிளன் தான் இதெல்லாம்..” என்று என்றவனின் மூளையில் பல யோசனைகள் ஓடிக் கொண்டிருந்தன.
அகிலா “இப்போ என்ன பண்ண போறே அர்ஜு!” என்றுச் சிறுப் பதட்டத்துடன் கேட்டாள். ஆனால் அர்ஜுனின் கவனம் இங்கு இல்லை. சுற்றிலும் பார்த்தான். அதிராவை பார்த்தான். சற்று தள்ளி நின்று தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்த இரு காவலர்களைப் பார்த்தான். அவனது மூளை வேகமாக கணக்கு போட்டுக் கொண்டிருந்தது.
சில கணங்கள் பின் அகிலாவிடம் திரும்பிய அர்ஜுன் “லிசன் அகிலா! எனக்கு உன்னோட சின்ன ஹெல்ப் வேண்டும். நான் இங்கே இருந்து அதிராவோடு தப்பிக்க போகிறேன். இந்தியாவிற்கு வரலை.” என்றான்.
அதைக் கேட்டு அகிலா திகைத்துப் போய் பார்த்தாள்.
அர்ஜுன் தனது செல்பேசி கொண்டு யாரையோ அழைத்தான். அந்த பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டதும் “கவின் எனக்கு ஒரு ஹெல்ப் செய்யணும்.”
“.....”
“எஸ்! எஸ்! மாலத்தீவில் தான் இருக்கேன்.”
“....”
“இங்கே நான் மறைவா இருக்கிறதுக்கு.. ஒரு இடம் வேண்டும். அப்பறம் இப்போ ஏர்போர்ட்டில் இருக்கிறேன். இங்கிருந்து போக எனக்கு ஒரு சின்ன ஆம்புலன்ஸ் வேணும்! அப்பறம் யாருக்கும் தெரியாம சில பொருட்கள் தேவை! ஏன் என்ற டிடெய்ல்ஸ் சேஃப் ஆனதும் சொல்றேன்.” என்றான்.
“...”
“தேங்க்ஸ் கவின்! ஆம்புலன்ஸ் இன்னும் ஃபிப்டின் மினிட்ஸில்.. கேட் நம்பர் ஃபோரில் வந்து நிற்கணும். வந்ததும் எனக்கு மேசேஜ் செய்! டிரைவரை ஆம்புலன்ஸ் சாவியோட வண்டியை நிறுத்திட்டே போக சொல்லு! என் பெயர், என் முகம் கூட அவருக்கு தெரிய கூடாது. ஆம்புலன்ஸை எடுத்ததும் உனக்கு ஃபோன் போடரேன்.” என்றான்.
“...”
“தேங்க்ஸ் அகைன்! சொல்வது என் கடமை” என்றுச் சிரித்துவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
பின் அர்ஜுன்.. மேலும் திகைப்புடன் நின்றிருந்த அகிலாவிடம் திரும்பி “நான் சொல்லும் போது.. சின்ன ரகளை செய்து அந்த போலீஸ்காரங்களை உன் பக்கம் திருப்பு! அந்த நேரத்தை யூஸ் செய்துட்டு நான் ட்ரீப்ஸ், ஸ்டெக்சரோட அதிராவை தள்ளிட்டு போய் வெளியே நிறுத்தி வச்சுருக்கிற ஆம்புலன்ஸில் ஏறி இங்கிருந்து தப்பிச்சு போயிருவேன். நீ எதுவும் தெரியாதது போல.. இந்தியாவிற்கு போயிரு..” என்றான்.
அகிலா “அர்ஜு! என்ன அர்ஜு! எதோ ஆக்ஷன் மூவில வர சீன்ஸ் மாதிரி சொல்றே! இவ்வளவு பெரிய ஏர்போர்ட்டில் நீ நினைக்கிற மாதிரி நடக்குமா! காலையில் சொன்னியே.. இதுவும் மாறலானு! நீ போட்ட பிளனும் மாறிட்டா என்ன செய்வே!” என்று கண்ணில் பீதியுடன் கேட்டாள்.
அதற்கு பதிலாக தனது வழக்கமான முறுவலையே பதிலாக தந்தான்.
ஆசிரியர் பேசுகிறேன்:
செந்தில் ஒரு படத்துல கவுண்டமணிக்கு கிட்ட கேட்பாரு! “இந்த தண்ணி எங்கிருந்து வருதுண்ணே..” கவுண்டமணியும் கேட்கிறதுக்கு ஒவ்வொரு பதிலாக சொல்வாரு.. கடைசில செந்தில் கேட்ட கேள்வியில் “அகத்தியர் முனிவர் தீர்த்தம் கொடுக்கிற மாதிரி கேட்டுட்டு கேள்வியா கேட்கிறே” என்று சொல்லிட்டு எட்டி உதைப்பார்.
ஹா.. ஹா..
என்னடா இவ.. கதை சீரியஸா போயிட்டு இருக்கு இவ ஜோக் அடிக்கிறானு இருக்கா..
மழை.. நீர்நிலையில் இருக்கும் நீர் ஆவியாகி வருகிறது. என்று படிச்சுருப்போம். என்ன தான் நிலத்தடி நீருற்று மூலம் நீர்நிலைகள் உருவாகிறது என்றாலும்.. மழை நீர் நிரப்பாமல்.. நீர்நிலை ஆறாக மாறி கடலை சென்றடைவதற்குள் வற்றி தான் போகும்.
அப்போ நீர்நிலை பெருசா.. மழை பெருசா..
அப்பன் பெருசா.. மகன் பெருசா..
பார்த்திரலாமா!
அதிராவுடன் இப்படி ஜாலியாக பிராயணம் போகலாம்னு நினைச்ச அர்ஜூனை, கடத்தல்காரன் ரேன்ஜுக்கு ஆக்கிட்டாங்களே!
@vidhushini ஹா.. ஹா.. கண்டிப்பா இந்த மாதிரி போவங்க..
- 1 Forums
- 19 Topics
- 39 Posts
- 0 Online
- 28 Members