குடை 15
அத்தியாயம் 15
அதிரா திகைப்புடன் மீண்டும் சுற்றிலும் பார்ப்பதைப் பார்த்தவனின் முகம் மென்மையுற்றது. அவளது மற்றொரு கரத்தை எடுத்து கையில் வைத்து.. “அதி! இங்கே என்கூடத் தான் இருக்கே! இங்கே யாரும் நம்மை டிஸ்டர்ப் செய்ய மாட்டாங்க! அதாவது என் பெரெண்ட்ஸை சொல்றேன்.” என்றான்.
மீண்டும் அதிரா திருதிருவென விழிக்கவும், அர்ஜுன் “உனக்கு எல்லாம் தெளிவாக சொன்ன தான் புரியும். சொல்றேன் அதி.” என்றவன், “என்னை விட்டு போக முடியாதுனு தெரியும் தானே! எதுக்கு அப்படி ஓடினே! தேங்க் காட் அந்த லாரி.. உன்னை உரசிட்டு தான் போச்சு! ஆனா அதுக்கே நீ தள்ளிப் போய் விழுந்ததைப் பார்த்த போது.. நிஜமா சொல்றேன். என் வாழ்நாள்ல அந்த மாதிரி ஒரு அதிர்ச்சியை நான் அனுபவிச்சதே இல்லை. உயிர் வலினு சொல்வாங்க தானே அதை அனுபவிச்சேன். ஆனா நல்லவேளை பெரிதாக அடி ஒண்ணும் படலை. நெற்றியில் சின்ன கல் கிழிச்ச காயம் ஏற்பட்டுச்சு. நீ விழுந்ததில் கை முழங்கை மூட்டு நகர்ந்துச்சு! அப்பறம் லாரி உரசி விழுந்ததில் தசை பிடிப்பு ஏற்பட்டுச்சு! ஆனா நீ மயக்கத்தில் இருந்ததாலே.. ரொம்ப பயந்துட்டேன். ஆனா அது ஒண்ணுமில்ல. வலிக்கு கொடுத்த மருந்தினால் வந்த தூக்கம் தான்னு சொன்ன பிறகு தான் எனக்கு நிம்மதி ஆச்சு! அப்போ தூங்கினவ.. இதோ இப்போ தான் முழிக்கிறே! ஹவ் டூ யூ ஃபீல் நவ்! ஃபீல் பெட்டர்?” என்றுக் கேட்டான்.
சுற்றிலும் மிரட்சியுடன் பார்த்தவாறு “இது ஹாஸ்பிட்டல் இல்லையே! அகிலா என்னை இப்படியேவா விட்டுட்டு போவா..” என்றவள், கண்ணில் சந்தேகத்துடன் அவனைப் பார்த்து “இத்தனை நேரம் நீங்க சொன்னது பொய் தானே! நீங்க என்னை கடத்திட்டு வந்திருக்கீங்க தானே! உங்களை விட்டுப் போக முடியாதுனு சொன்னது இப்படித்தானா! இந்த கையில அடிப்பட்டது என்றது கூடப் பொய்..” என்றபடி.. கட்டு போட்டிருந்த வலக்கரத்தை உயர்த்த முயன்றவள், அடுத்த நிமிடமே.. சுருக்கென்று தோன்றிய வலியில் கத்திவிட்டாள்.
அவள் உயர்த்த எதானிக்கையிலேயே அதைத் தடுக்க விரைந்தவன், அவள் வலியில் கத்தவும், இதமாக கையைப் பற்றி.. மெதுவாக அவளுக்கு அருகில் வைத்தான்.
பின் அர்ஜுன் “எல்லாமே உண்மை தான் அதி! ம்ம் நீ சொன்னதும் உண்மை தான்! ஒரு வகையில் பார்த்தா.. கடத்தி வந்தது மாதிரி தான்..” என்று இலகுவாக கூறினான்.
அதைக் கேட்டு மேலும் அரண்டவளாய் “அகி எங்கே? நிஜமா மூணு நாளா?” என்றுக் கேட்டாள்.
அதற்கு அர்ஜுன் “எழுந்ததும்.. நீ உன்னைப் பற்றிக் கேட்பே.. என்று உனக்கு என்னாச்சுனு சொன்னேன். ஆனா உனக்கு வேற டிடெய்ல்ஸ் வேணும் போல! அதைச் சொன்னா.. இப்பவே என்னைப் பார்த்து பயப்படற நீ.. இன்னும் பயப்படுவேயே!” என்றான்.
அதிராவின் கண்களில் கண்ட மிரட்சியை கண்டு.. இந்த பயம் தேவையில்லாதது போல் தலையசைத்து.. அவளது தலையை வருடியவன், நேராக நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
“ஒகே அதையும் சொல்றேன்.” என்று மாறாத புன்னகையுடன் கூறினான்.
மூன்று நாட்களுக்கு முன்.. அதிரா அவ்வாறு பயந்து ஓடுவாள் என்று அர்ஜுன் எதிர்பார்க்கவில்லை. ‘அதிரா’ என்று அழைத்து பார்த்தான். ஆனால் அவள் அதைக் கேட்டது போல் தெரியவில்லை. அவள் ஓடிச் செல்லும் நிலையும் சரியில்லாதது போல் தோன்றவும், அவனும் பின்னோடு ஓடினான். கேட்டை அதிரா தாண்டியதும்.. விபரீதம் புரிந்தது. அவன் சென்று அவளைத் தடுப்பதற்குள் விபத்து நிகழ்ந்துவிட்டது. அதிராவை கையில் ஏந்தி மருத்துவமனையில் சேர்த்து.. மருத்துவர் பெரிய ஆபத்து ஒன்றும் இல்லை. சாதாரண காயம், மயக்கம் என்றுக் கூறிய பின்பு தான் அர்ஜுனுக்கு சுற்றுப்புறம் உறைத்தது. அவனோடு அகிலாவும் கவலையோடு நின்றுக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அவளிடம் மருத்துவர் கூறியதைக் கூறினான்.
அதன்பின் அகிலா “அர்ஜு! இனி என்ன பண்ண போறே!” என்றுக் கேட்டாள்.
அர்ஜுன் “நீ எதைப் பற்றிக் கேட்கிறே! அதிராவை பற்றிக் கேட்பதாக இருந்தால்.. என் நிலை மாறாது. அவளை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு! சும்மா காதல்.. மனசுக்கு பிடித்தவள்னு நினைச்சுட்டேன். ஆனா உன் பிரெண்ட்.. கொஞ்சம் கொஞ்சமா ஆழமா பதிஞ்சுட்டு வருகிறா! அவளை என்னால் விட முடியாது. ஆல்ரெடி உன் கூட அனுப்புற ஐடியா இல்லை. இப்போ சுத்தமா அவளால் முடியாது. அதனால் நிச்சயம் இல்லை. நீ இந்தியாவிற்கு சொன்ன மாதிரி போயிரு!” என்றான்.
அகிலா “என்ன அர்ஜு நீ ரொம்ப அடம் பிடிக்கிறே! நீ அவளை ரொம்ப லவ் செய்கிறே! அதுக்குனு இப்படி இறுக்கிப் பிடிக்க கூடாது அர்ஜு! அவ வெறுத்து போய் பயந்திருவா! என்கிட்ட அதைத்தான் சொல்லிட்டு இருந்தா! இந்த மாதிரி உன்னை வெறுத்து ஒதுங்குகிறவள் உனக்கு வேணுமா!” என்றுக் கேட்டாள்.
அதற்கு அர்ஜுன் முறுவலுடன் தலையை மட்டும் ஆட்டினான். அதைப் பார்த்த அகிலாவிற்கு சிரிப்பு தான் வந்தது.
“சரி அர்ஜு! நீ கொஞ்சம் விட்டுத் தான் பிடியேன். அவ தான் பயந்துக்கிறாளே!” என்றாள்.
அதற்கு அர்ஜுன் “அவளை விட்டா பிடிக்க முடியாது அகிலா! பிகாஸ்.. நான் அவளை இந்தியாவிற்கு அனுப்புவதாக தான் இருந்தேன். அதுக்கு பிறகு தான் அவளோட மனம் மாறுச்சு! இனி விட்டு பிடித்து பார்ப்போம் என்று டெஸ்ட் எல்லாம் என்னால் வைக்க முடியாது. ஓப்பனா சொல்லணுன்னா.. எஸ் அவளை இழக்க எனக்கு மனமில்லை.” என்றான்.
அகிலா “சரி ஆல் த பெஸ்ட்! வேற என்ன சொல்ல சொல்றே!” என்றுச் சிரித்தவள் தொடர்ந்து “அப்போ சரி.. என்னோட டிக்கெட்ஸ் நாலு நாளைக்கு போஸ்ட்பான்ட் செய்யணும்.” என்றாள்.
அதைக் கேட்ட அர்ஜுன் “எதுக்கு?” என்று புருவத்தை நெறித்து கேட்டான்.
அகிலா திகைப்புடன் “அதிராவிற்கு உடம்பு சரியில்லை. அவளை ஹாஸ்பிட்டல் அட்மிட் செய்திருக்கு! அவளுக்கு இங்கே யாருமில்லை. நான்தானே பார்த்துக்கணும். நோ நோ என்னால் அவளை இப்படி விட்டுட்டு போக முடியாது. அவளை இந்தியாவிற்கு ஷீஃப்ட் செய்ய ஏற்பாடு செய்.. அங்கே அவளோட பேமலி அவளுக்காக பார்த்துட்டு இருப்பாங்க தானே! என்னை நம்பி தான்.. அவ அம்மா அனுப்பினாங்க! உனக்கு உன் லவ்வர் வேணுன்னா.. அங்கே வந்து.. உன் காதலை அவளுக்கு புரிய வை!” என்றாள்.
அதற்கு அர்ஜுன் “வேண்டாம். அதிரா இந்த கண்டிஷனில் ட்ராவல் செய்ய வேண்டாம். நான் ஆல்ரெடி இதற்கு பதில் சொல்லிட்டேன். மறுபடியும் சொல்றேன். அதிராவிற்கு இங்கே இருந்தால்.. என் வட்டத்திற்குள் இருப்பாள். என்னோட காதலை புரிஞ்சுப்பாள். ஆனா இந்தியாவிற்கு போன.. அவளோட வட்டம் பெருசு! பிரெண்ட்ஸ், ரிலேட்டிவ்ஸ், வில் விஷ்ஷர்ஸ், நெய்பர்ஸ்.. என்று நிறையா பேர் இருப்பாங்க! அங்கே அவ என் வட்டத்திற்குள் வருவாளானு பயமா இருக்கு! அவளும் நானும் லவ்வை சொல்லிட்ட போது.. அவள் இருந்த நிலை வேறு.. இப்போ அம்மாவும் வேறு சில மேட்டர்ஸும் அவளை குழப்பிட்ட பின்.. அவள் இருக்கிற நிலை வேறு! நான் முன்பே சொன்னா மாதிரி.. என் காதலோட அளவை டெஸ்ட் வைத்து எல்லாம் பார்த்து.. நிரூபிக்க முடியாது. நேருக்கு நேர் தான் என் பாலிஸி! இப்போ அவ இங்கே என் கூட இருக்கா! எனக்கு அதுதான் வேணும். அவளை அனுப்ப என்னால் முடியாது.” என்றவன் “இப்போ உன் விசயம்! உன்னோட பிராப்ளம் அப்படியே தான் இருக்கு! நீ முதலில் இங்கிருந்து கிளம்பு! அப்பறம் என்ன சொன்ன.. அதிராவிற்கு இங்கே யாருமில்லையா!” என்று அவளை ஒரு மாதிரி பார்க்கவும், அகிலா அவசரமாக “ஸாரி!” என்றாள்.
அர்ஜுன் “இதை வேற யாராவது சொல்லியிருந்தா.. நடப்பதே வேற! அதிராவை நான் பார்த்துக்கிறேன். ஏற்பாடு செய்தபடி நீ கிளம்பு..” என்றான்.
அர்ஜுன் தன்னைத் திட்டவும், கோபம் கொண்ட அகிலா “என் பிராப்ளம் பற்றிப் பேசறீயே! நீ ஆல்ரெடி பெரிய பிராப்ளத்திற்கு தயாரா இருக்கிறே! இப்போ இன்னொரு மிக பெரிய பிராப்ளத்தை வேற கிரியேட் செய்து வைத்திருக்கியே! அப்பா ஒத்துப்பார் என்று நினைக்கறீயா! நீ என்ன செய்ய போறே!” என்றுக் கேட்டாள்.
அகிலா கூற வருவது அர்ஜுனுக்கு புரிந்தது.
அகிலா தொடர்ந்து “நீ உன் பிராப்ளத்தை பார்ப்பியா.. இல்லை அதிராவை பார்ப்பியா!” என்றுக் கேட்டாள்.
அர்ஜுன் “எல்லாத்தையும் பார்த்து தானே ஆகணும்.” என்றுச் சிரித்தான்.
அகிலா “எப்படி அர்ஜுன் சமாளிப்பே! அப்பா இந்த முறை உன் மேலே பயங்கரமான கோபத்தில் இருக்கிறாங்க! பார்ட்டி ஸ்பாயில் ஆனது ஒரு விசயம் என்றால்.. நீ ஒரு பெண் பின்னாடி ஓடியதைப் பார்த்து.. எல்லாரும் பேசிக்கிட்டது இன்னொரு விசயம்! ஆனா அப்பா எதையோ சொல்லி சமாளிச்சுட்டாருனு கேள்விப்பட்டேன். ஆனா உன் மேலே இருக்கிற கோபம் அப்படியே தான் இருக்கு! சோ ப்ளீஸ்!” எச்சரித்தாள்.
அதற்கும் அர்ஜுன் சரி என்பது போல் முறுவலுடன் தலையை ஆட்டினான்.
அகிலாவின் பெருமூச்சை தான் இழுத்துவிட முடிந்தது.
அர்ஜுன் “இன்னைக்கு நைட்.. அதி கூட இங்கே இரு! நான் வீட்டிற்கு போய்.. பார்த்துட்டு வரேன்.” என்றுவிட்டு கிளம்பினான்.
வீட்டினுள் நுழைந்ததும் “அர்ஜுன்!” என்ற கார்த்திகேயனின் அழுத்தமான அழைப்பில் நின்றான்.
அழுத்தமான நடையுடன் அர்ஜுனை நோக்கி வந்தவர் “வாட் யு தின்க் ஆஃப் யுவர்செல்ஃப்!” என்றுக் கேட்டார்.
அர்ஜுன் அவரை விடவும் அழுத்தமான குரலில் “ஐயம் இன் லவ்!” என்றான்.
அதற்கு கார்த்திகேயன் “பிளடி லவ்! உன் லவ் மேட்டர் ஸாரி மேட்டர்ஸ் என்றுச் சொல்லணுமோ.. அதைப் பற்றி எனக்கு தெரியாதா! அதை எங்கே வேண்டுமென்றாலும் வச்சுக்கோ! ஆனா நான் அரேன்ஜ் செய்திருக்கிற பார்ட்டியை ஏன் டர்டி செய்யறே! நீ வேண்டுமென்றே தானே.. இப்படி நடந்துக்கிட்டே! என் மானத்தை வாங்க தானே இப்படி நடந்துக்கிட்டே! இனி உன்னோட டர்ட்டி மேட்டர்ஸை என் பிஸினஸிற்குள் நுழைக்காதே! அன்டர்ஸ்டேன்ட்! இட்ஸ் மை லாஸ்ட் வார்னிங்!” என்றார்.
அவர் பேசி முடிக்கும் வரை.. அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த அர்ஜுன் “இது உங்க லாஸ்ட் வார்னிங்கா இருக்கலாம் அப்பா! ஆனா இதுதான் என்னோட பீகினீங்! உங்க கௌரவத்தை நீங்க தான் கெடுத்துட்டு இருக்கீங்க.. புதுசா நான் வந்து என்ன செய்யப் போறேன்.” என்று நக்கலுடன் பதிலளித்தான்.
கார்த்திகேயன் புருவத்தை நெறித்தவாறு “என்ன சொல்றே?” என்றுக் கேட்டார்.
அதற்கு அர்ஜுன் “உங்களோட புது ஒப்பந்தத்தை பற்றி தான் சொல்றேன் அப்பா!” என்றான்.
கார்த்திகேயன் புரியாதவாறு “வாட்! அதனால என் கௌரவம் எப்படிப் போகும்..” என்று இளக்காரத்துடன் முடித்தார்.
அர்ஜுன் அவரது இளக்காரத்தை கவனியாத பாவனையுடன் “அதனால உங்க கௌரவத்திற்கு பாதிப்பு வராது தான்! ஆனா.. நான் அதுல குளறுபடி செய்தால்.. கௌரவத்திற்கு பாதிப்பு வரும் தானே..” என்றான்.
கார்த்திகேயன் “அர்ஜுன்!” என்று அதட்டினார்.
அர்ஜுன் “நீங்க கெஸ் செய்தது கொஞ்சம் சரிதான்! நான் உங்க மானத்தை வாங்க தான் போறேன். ஆனா அது எப்படின்னு நீங்க யோசிச்சது தான் தப்பு! அதிரா இஸ் மை லவ்.” என்றான்.
கார்த்திகேயன் “டொன்ட் டேர் டு டச் மை பிஸினஸ் ட்ரீக்ஸ் அர்ஜு! உனக்கு என்ன பெரிய கம்யுனீடிட்ஸ் என்று நினைப்பா! அவங்களால்.. தெருவில் இறங்கி போராட தான் முடியும். இல்லை.. எதாவது ஆப்போஸா செய்வீங்களா! அவங்களை நக்ஸ்லைட்ஸ் என்று முத்திரை குத்தி ஜெயிலில் தான் போடுவாங்க! இது இரண்டும் உனக்கு செட் ஆகாது. நீ சின்ன பையன்! இப்போ லவ்வர் பாயா வேற இருக்கே போல! அதனால் உன்னோட காதலிகளோடு டூயட் பாடுவதோடு நிறுத்திக்கோ! அவங்களை என்னோட சோஷைட்டிக்குள்ள கொண்டு வராதே! இப்போ பேசின மாதிரி.. பேசிட்டு சுத்திட்டு இருக்காதே! அந்த பொண்ணை அகிலா கூடவே எதுவும் தெரியாதது போல அனுப்பிரு! உன் மேலே எந்த கேஸும் வராமல் நான் பார்த்துக்கிறேன்.” என்றார்.
அவர் பேசியதைக் கேட்டு.. அர்ஜுன் பலமாக சிரித்தான்.
பின் “இப்போ பேசினதில் நீங்க ஒன்றை மட்டும் நன்றாக சொன்னீங்க! உங்க வாய் வழியாக கேட்கிறதுக்கு நல்லா இருக்கு! ஆமா நான் லவ்வர் பாய் மூட்ல இருக்கேன். அப்பறம் நீங்க சொன்னது சரிதான்! கம்னீயுஸ்ட்டாவும் இருந்து பயனில்லை. நக்ஸ்லைட்டாகவும் இருந்து பயனில்லை. ஆனா உங்க பையனா இருந்து.. இவங்க செய்ய முடியாததை செய்யலாம். அதுக்கு காத்திருங்க அப்பா!” என்றான்.
பின் தொடர்ந்து “அப்பறம் அதிராவை நான் எங்கேயும் அனுப்பறதா ஐடியா இல்லை. அவ என் கூட தான் இருக்க போகிறா!” என்றுவிட்டு தனது அறைக்கு செல்ல படியேறினான்.
அர்ஜுன் படியேறி செல்வதை.. கார்த்திகேயன் ஆத்திரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். மாலதி மெதுவாக “நான் அர்ஜுனுடன் பேசிப் பார்க்கிறேன்ங்க!” என்றார்.
அதற்கு கார்த்திகேயன் “அவன் என்ன சொன்னாலும் கேட்க மாட்டான். அப்படியே என் அப்பன் மாதிரி பாதி.. என்னை மாதிரி மீதினு பிறந்து தொலைச்சுருக்கான். அவனை எப்படி டீல் செய்வது என்றுத் தெரியும்.” என்றவரின் உதடுகள் இளக்காரத்துடன் வளைந்தன.
இரவு தனது படுக்கையில் விழுந்த அர்ஜுனுக்கு இன்று நடந்த பல்வேறு சம்பவங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வர.. முடிவில் அவனது எண்ணங்கள் அதிராவில் வந்து நின்றது. அவளுக்கு நடந்த விபத்தை கண்முன் கண்டதை நினைத்தவனின் உள்ளம் அப்பொழுது போல் தற்பொழுதும் நடுங்கியது.
பின் இன்றைய நாளில் பல முறை தன்னையே கேட்டுக் கொண்டது போல்.. அதிராவிடம் எப்படி இப்படி வீழ்ந்தேன்.. என்று அவனது மனம் ஆச்சரியப்பட்டது. அகிலாவை செல்பேசியில் அழைத்து அதிராவின் உடல்நிலையை பற்றி விசாரித்துவிட்டு உறங்க ஆயுத்தமானான். நடந்த சில விசயங்களால் அகிலாவின் பேச்சு மற்றும் செயல்களில் பக்குவம் தெரிந்தது அவனுக்கு மகிழ்ச்சியை அளித்தது. இவ்வாறு நல்ல நினைவுகளுடன் அர்ஜுன் உறங்கி போனான்.
நாளைய பொழுது அவன் பல விசயங்களையும், தடங்கல்களையும், போராட்டங்களையும் சந்திக்க வேண்டியது வரும் என்று அவனது அறிவிற்கு தோன்றியது. நன்றாக உறங்கி ஓய்வெடுத்தான்.
அடுத்த நாள் காலையில் அகிலாவுடன் அர்ஜுனுக்கும் இந்தியா செல்ல பயணச்சீட்டு தயாராக இருந்தது. அதிரா மயக்க நிலையிலேயே இந்தியாவிற்கு அழைத்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆசிரியர் பேசுகிறேன்:
என்னடா இது! அவன் லவ் செய்யறேன் செய்யறேன்னு சொல்றான்.. இவ இல்ல இல்லனு சொல்றா.. ஆனாலும் இவர்களுக்குள் காதல் கதையா!
ஹா.. ஹா.. இந்த கதை வாசிக்கிறவங்களுக்கு இப்படி தோணலாம்.
அர்ஜுனோட காதல் மழை மாதிரிங்க.. முதல்ல துளியாய் விழுந்து சீண்டினான். இந்த அதிரா முதல்ல முகத்தை திருப்பிட்டு போனா தானே.. அப்படியே போயிருக்க வேண்டியது தானே! அதென்ன குடைக்குள்ள நின்னுட்டு இரகசியமா கையை நீட்டி இரசிக்கிற பழக்கம்! அந்த இரகசியத்தை தான் அர்ஜுன் இரசித்தானோ!
இல்லை இல்லைன்னு சொல்லிட்டு.. அவ அவனை காதலிச்சது.. மொத்தமா அவள் புறம் தலைக்குப்பற விழ வச்சுருச்சோ!
இப்படி மொத்தமா அவனை அவள் பக்கம் இழுத்துட்டு.. போ என்றால் போயிருவானா!
இதுவரை அவனோட பிடிவாதமான காதலையும் அதோட வேகத்தையும் தான் பார்த்திருக்கிறாள். அவனோட காதல்.. அதீதமாக மாறும் நிலையை இனி பார்ப்பாள்! நீங்களும் பார்ப்பீங்க!
அதிராவிடம் கிளிப்பிள்ளைக்கு சொல்லுற மாதிரி சொல்லிட்டு வந்துருக்கான். ஆனாலும், அர்ஜூனைச் சொந்த வாழ்க்கையிலும், தொழில் வட்டாரத்திலும் ரொம்ப போராடவைக்கிறாங்கப்பா...
- 1 Forums
- 19 Topics
- 39 Posts
- 0 Online
- 28 Members