Forum

Notifications
Clear all

குடை 14

3 Posts
2 Users
4 Reactions
302 Views
rajianbu
(@rajianbu)
Admin Admin
Joined: 5 months ago
Posts: 28
Topic starter  

அத்தியாயம் 14

 

தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த கார்த்திகேயன், அர்ஜுன்.. அகிலா தனது தோழி‌ என்று‌ அழைத்து கொண்டு வந்த பெண்ணுடன் கைக் கோர்த்தவாறு வந்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்தார். உடனே‌ தனது மனைவியை தேடினார்.

 

மாலதி அர்ஜுனின் பின் கையை பிசைந்தவாறு வந்துக் கொண்டிருப்பதை பார்த்ததும்.. மாலதி எடுத்து சொல்லி.. அவரைத் தாண்டி தான் அர்ஜுன் இந்த பெண்ணுடன் இப்படி உரிமையுடன் வந்திருப்பது புரிந்தது. 

 

தனது நண்பர்கள் பலர் குழுமி இருக்கும் இந்த இடத்திற்கு.. அர்ஜுன் யார் என்றுத் தெரியாத, மத்திய தரப்பு பெண்ணுடன் வந்தால்.. அனைவரும்.. யார் அந்த பெண் என்று விசாரிப்பார்கள். தனது கௌரவம்‌ பாதிக்கப்படும் என்றுத் தெரிந்தும்.. அர்ஜுன் அவளை அழைத்துக் கொண்டு‌ வருவது, அவருக்கு ஆத்திரத்தை கிளப்பி‌விட்டது. ஒருவேளை தன்னைப் பழிவாங்க தான்.. இம்மாதிரி ஒரு பெண்ணுடன் வருகிறானோ என்று சந்தேகம் தோன்றி.. அவரது கோபத்தை அதிகரித்தது.

 

அவர் அர்ஜுனுக்கு அப்பன் ஆயிற்றே! அதிராவின் முகத்தைப் பார்த்ததுமே அவளது விருப்பமின்றி தான்.. அவன் அவளை அழைத்து வந்திருப்பதை அறிந்துக் கொண்டார். அர்ஜுன் அந்த பெண்ணுடன் இந்த வளாகத்திற்குள் வருவதற்குள்.. அவனை எவ்வாறு தடுப்பது என்று அவரது மூளை வேகமாக கணக்கிட்டது. ஒரு வழி தென்படவும், சற்று தள்ளி சிலருடன் பேசிக் கொண்டிருந்த அகிலாவை அழைத்தவர், அர்ஜுனுடன் வருகிற பெண்.. உன் தோழியா என்று மட்டும் கேட்டார். அவருக்கு அகிலாவை பற்றி நன்கு தெரியும்.. அவர் எதிர்பார்த்தது போல்.. அகிலா இருவரும் இணைந்து வருவதை வாயைப் பிளந்து பார்த்துவிட்டு.. அவரிடம் கூடச் சொல்லாமல் அவர்களை நோக்கி விரைந்தாள். கார்த்திகேயன் அவர்களைச் சற்றுப் பதட்டத்துடன் அங்கிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

 

அகிலா “அதிரா!” என்று ஆர்வத்துடன் அழைத்தவாறு அவர்களை நெருங்கினாள். அங்கு அதிராவிற்கு தெரிந்த ஒரே ஜீவன் அகிலா என்பதால்.. அவளைப் பார்த்ததும்.. அத்தனை நேரம் அவள் கொண்ட மனவுளைச்சலின் காரணமாக.. தனது கரத்தைப் பற்றியிருந்த அர்ஜுனின் கரத்தை உதறினாள். இம்முறை அவனே விடுவித்தான். உடனே ஓடிச் சென்று அகிலாவை கட்டிக் கொண்டாள்.

 

அகிலா திகைப்புடன் தன்னைக் கட்டிக் கொண்ட அதிராவை பிடித்தபடி நின்றுவிட்டாள். மாறாத திகைப்புடன் அர்ஜுனை பார்த்தாள். அவன் சிறு முறுவலுடன் நின்றுவிட்டான். தனது தோளில் ஈரத்தை உணர்ந்த அகிலா திடுக்கிட்டாள்.

 

அதிரா அழுகிறளா! 

 

எதற்கு?

 

இருவருக்கும் பின்னால் வந்துக் கொண்டிருந்த அன்னை திட்டியிருப்பார்களோ!

 

அடுத்து இருந்த விருந்து நடைப்பெறும் இடத்தில் இருந்து பார்த்தால்.. இரு தோழிகள் கட்டிக் கொண்டிருப்பது போன்று தான் தெரியும். ஆனால் இத்தனைப் பேர் பார்க்க.. அதிரா அழுவது தெரிந்தால்.. என்றுச் சங்கடத்துடன் அர்ஜுனை பார்த்தாள்.

 

அவர்கள் அருகே வந்த அர்ஜுன் “நானே வருவதற்குள்.. எதுக்கு எங்களைப் பார்த்து வந்தே?” என்று மட்டும் கேட்டான்.

 

அதிரா அழுவதற்கு தான் காரணம் என்பது போல் அர்ஜுன் பேசவும், அகிலா விடுக்கென்று “என் பிரெண்ட் என் உரிமை..” என்கவும், அர்ஜுன் சிரித்துவிட்டான்.

 

எனவே அகிலாவிடம் “சரி.. அவளை மற்றவங்களுக்கு முகம் காட்டாது.. பேசி சிரிப்பது போல.. காட்டிட்டே.. அந்த மறைவிடத்திற்கு பின்னாடி போயிரு! நான் கொஞ்ச நேரத்தில் வரேன்.” என்றுவிட்டு அகன்றான்.

 

அர்ஜுன் கூறியவாறு அவளைத் தோளோடு அணைத்தபடி.. மலர்களால் அலங்கரிப்பட்ட பெரிய புதருக்கு பின்னால் அழைத்துக் கொண்டு சென்றாள். யாரும் பார்க்காத இடத்திற்கு சென்றதும்.. “அதிரா ஏன் அழுகிறே?” என்றுக் கேட்டாள்.

 

அதிரா விசும்பியவாறு “வாடி! நாம் போயிடலாம்.” என்றாள்.

 

அகிலா “நாம்தான் நாளைக்கு போக போறோமே! அதுக்கா அழுகிறே! அம்மா திட்டினாங்களா! டொன்ட் வெர்ரி.. அர்ஜு பார்த்துப்பான்.” என்றாள்.

 

அதற்கு அதிரா “உன்‌ அண்ணா..‌ என்னை‌ விட மாட்டார். நாம் அவருக்கு தெரியாம‌‌ போயிடலாம்.” என்று‌ப் பதட்டத்துடன் கூறினாள்.

 

அதைக் கேட்ட அகிலாவிற்கு சிரிப்பு தான் வந்தது.

 

அகிலா “என்னது.. உன்னை‌ விட மாட்டாரா! சரிதான்! ஏய் நான் பிரெண்ட்‌ மட்டுமில்ல.. உன் லவ்வரோட சிஸ்டர்டி! ஒரு சிஸ்டர் இன் லா பொஷீசன்ல இருந்து பார்த்தா எனக்கு கொஞ்சம் பொறாமை வருது.” என்று கிண்டலடித்தாள்.

 

அதிரா “அச்சோ அகிலா.. நிலைமை தெரியாம பேசறே!” என்றவள்.. பின் சற்று குரலை தணிந்துக் கொண்டு அவளது முகத்தை பாராது “எனக்கு உன் அண்ணன் லவ் வேண்டாம். நான் போறேன்.” என்றாள்.

 

அப்பொழுதும் அகிலாவிற்கு சிரிப்பு தான் வந்தது.

 

“அர்ஜு.. உன்னை விட மாட்டானே! வேற வழியே இல்லை. நீ அவனை லவ் செய்து தான் ஆகணும்.” என்று அதிராவை கிண்டலடிக்கும் பொருட்டு விளையாட்டாய் உண்மையையே கூறினாள்.

 

அதைக் கேட்ட அதிராவிற்கு திக்கென்று இருந்தது. 

 

அவனது பிடிவாதத்தை மற்றவர்களின் வாயில் இருந்து கேட்கும் போது இப்படி பயத்தை கொடுக்குமா என்று இருந்தது.

 

எனவே அகிலாவிடம் “என்ன அகிலா! நீயே தான்.. அவர் கிட்ட இருந்து விலகி இரு.. அவர் எதாவது வம்பு செய்தால் திருப்பி திட்டு.. அவர் டேன்ஞ்சரஸ்னு சொன்னே.. இப்போ நீயே இப்படி சொல்றே?” என்றுக் கேட்டாள்.

 

அதற்கு அகிலா “அது வம்பு செய்யும் அர்ஜுனை! இது லவ் செய்கிற அர்ஜுன்! ஏன் என் அண்ணனுக்கு என்ன குறைச்சல்!” என்று சண்டைக்கு நின்றவள், “சும்மா‌ பிகு செய்யாதே..‌ நீயும் அவனை லவ் செய்வது எனக்கு தெரியும்.” என்றாள்.

 

அதிரா “அச்சோ அகிலா! இப்போ என்ன நடந்தது என்று உனக்கு தெரியாது.” என்றுவிட்டு மேம்போக்காக என்றாலும் அனைத்து விசயங்களையும்‌ கூறினாள்.

 

முழுவதையும் கேட்ட அகிலா “என் அம்மா சொன்னதை வச்சு என் அண்ணன் மேலே ஏன் சந்தேகப்பட்டே?” என்றுத் தவிப்புடன் கேட்டாள்.

 

அதற்கு அதிரா “உன் அம்மா‌ சொன்னது எல்லாம் பொய் என்று‌ச் சொல்றீயா!” என்றுக் கேட்டவளின் குரலில் சிறு ஆவல் எட்டிப்‌ பார்த்தது.

 

ஆனால் அகிலா குரலில் சுருதி இறங்க “முழுவதும் பொய்யில்லை.‌ ஆனா நீ அர்ஜு கிட்டவே இதை நேரடியாக கேட்டிருக்கலாமே! அதை விட்டுட்டு.. ஒத்து வரலைனு‌ யார் உன்னைச் சொல்ல சொன்னது! எனக்கு உன் கூட ஒத்து போகுது தானே.. அப்பறம் என்ன என்று கேட்டிருப்பானே!” என்றுக் கேட்டாள்.

 

ஆம்.. அகிலா கூறிய‌‌ வார்த்தைகளோடு ஒத்த வார்த்தையை கூறியிருக்கிறான்.

 

‘நான் உன்னை காதலித்தால் போதுமே!’ என்றுக் கூறியது மீண்டும் அவளது செவிப்பறையில் ஒலித்தது‌.

 

அதிரா “அதுமட்டுமா.. அவர் என்கிட்ட நடந்துட்ட முறை! நான் இங்கே வர மாட்டேன்னு சொன்னதுக்கு.. லவ்வரா‌ இன்டர்டூயூஸ் செய்யறேன்னு பலவந்தமா கூட்டிட்டு வந்த முறை சரியினு சொல்லியா!” என்றுக் கேட்டாள்.

 

அதற்கு உதட்டை கடித்து கொண்டு குனிந்த அகிலா.. அதிரா.. அர்ஜுன் மாலதியிடம் பேசியதை கூறியது நினைவிற்கு வந்தது.

 

பின் அகிலா “அர்ஜு பேசினதை கேட்டே தானே.. எல்லாமே பிளன்! உன் கூட அப்படி‌ பிஹேவ் செய்ததும் அப்படித்தான்!” என்றாள்.

 

அதிரா புருவத்தை சுருக்கி கொண்டு பார்க்கவும் “பின்னே! அம்மா கிட்ட பெரிய‌ வாக்குவாதத்தை தவிர்த்திருக்கிறான். இங்கே கூட்டிட்டு வந்து நீதான் அவனோட லவ்வர் என்று எல்லாருக்கும் சொல்ல போறான். இதனால என் அப்பா அம்மானால உன்னை மறுக்கவும் முடியாது. திட்டவும் முடியாது. வாட் எ பிளன்! ஆனா இதை உன் பொஷிஷன்ல இருந்து பார்க்காம மற்றவங்க பொஷிஷன்ல இருந்து பார்த்தா.. சரியா தான் தோணுது.” என்றாள்.

 

அதிரா முறைக்கவும், அகிலா “முறைக்காதேடி! நான்தான் மற்றவங்க பொஷிஷன்ல இருந்து பார்த்தா தப்பில்லைனு சொன்னேன். ஆனா உன்னை‌‌ப் பொருத்தவரை தப்பு தான்!” என்றாள்.

 

அதிரா “இப்போ என் நிலைமை புரியுது தானே! என்னை காப்பாற்றுடி! வா‌ இப்படியே‌ ஓடிரலாம்.” என்றாள்.

 

அகிலா “என்ன சொல்றே! இன்னும் அர்ஜுனோடு கோபத்தை கிளப்பறதுக்கா!” என்றவளுக்கும் தோழியின் தவிப்பு பார்த்து பாவமாக தான் இருந்தது.

 

எனவே அதிராவின் தோளைப்‌ பற்றி திருப்பி தன்னைப் பார்க்க வைத்தவள்‌ “அதிரா! என்னைப்‌ பார் நிஜமா உனக்கு அர்ஜுவை பிடிக்கலையா! அவன் உன்னை ரொம்ப லவ் செய்யற மாதிரி இருக்கு! இந்த மாதிரி அவனை இதுவரை பார்த்தது இல்லை. எனக்கு சந்தோஷமாகவும், ஆச்சரியமாகவும் இருக்கு! அவன் ஒண்ணும் ஒரு பொண்ணை பப்ளீக்கா தொல்லை கொடுக்கிறவன் இல்லை. உன் மேலே ரொம்ப தீவிரமாக இருக்கிறான் போல.‌. அதுதான்.. பெரெண்ட்ஸ் அரேன்ஜ் செய்திருக்கிற பார்ட்டிக்கு கூட்டி வந்து எல்லாருக்கும் இன்டர்டூயூஸ் செய்கிற அளவிற்கு வந்திருக்கிறான். என்னைக் கேட்டா.. அவனைக் கொஞ்சம் புரிஞ்சுட்டா போதும்.. அவன் கூட நீ ரொம்ப சந்தோஷமா இருப்பேன்னு தோணுது.” என்று வயதில் சிறியவளான அகிலா.. தானாக தோன்றிய மனமுதிர்ச்சியின் காரணமாக அறிவுரை கூறினாள்.

 

அதிரா “என்னால் தான் உன் அண்ணனை புரிஞ்சுக்க கஷ்டமா இருக்குனு சொல்றேனே! எனக்கு இந்த காதல் வேண்டாம் அகிலா! இதோட வேகத்தை என்னால தாங்கிக்க முடியலை. உங்க அம்மா சொன்னதை விடு.. நீ சொன்னதையும் விடு.. உன் அண்ணனை மறுக்கிறதுக்கு காரணங்கள் கூடிட்டே போகுது. அதை அவர் தான் ஏற்படுத்தியிருக்கிறார். இன்னும் ஓப்பனா சொல்லவா! உங்க அம்மா வந்ததும்.. இவளைத் தான் லவ் செய்கிறேன்னு சண்டை போட்டிருந்தால்.. கூட பரவாலை. ஆனா அதற்கு அவர் என்கிட்ட நடந்துட்ட முறை‌ சரியா!” என்றுக் கேட்டாள்.

 

அதற்கு அகிலாவிடம் பதிலில்லை.

 

“எனக்கு விருப்பமில்லாதது போது.. இத்தனை பேர் கிட்ட.. அவரோட லவ்வரா இன்டர்டூயூஸ் செய்தால்.. என்னை அந்த ரிலேஷனுக்கு நிர்பந்திப்பது போல தானே! அது சரியா!” என்றுக் கேட்டாள்.

 

அதற்கும் அகிலாவிடம் பதிலில்லை.

 

அதிரா கேட்கும் கேள்விகளுக்கு பதிலாக வேறு‌ ஒன்றை சொல்ல நினைத்தாள். அது அர்ஜுனின் பிடிவாதம்! அர்ஜுனின் காதல்!

 

அகிலா அமைதியாக இருக்கவும், முகத்தை அழுத்த துடைத்தவள் “நாளைக்கு வரைக்கும்.. என்னால் இங்கே இருக்க முடியாது அகிலா! இப்பவே இந்தியா போகலாம். நீ வரலைன்னா.. என்னை எப்படியாவது இங்கிருந்து அனுப்பி வை!” என்றுக் கெஞ்சினாள்.

 

தோழிக்கு உதவ முடியாமல் அகிலா கையை பிசைந்து கொண்டு நிற்கையில் “உன் பிரெண்ட் கிட்ட பேசியாச்சா! போகலாமா” என்று கம்பீர குரலில் கூறியவாறு‌ அர்ஜுன் அங்கு வந்து நின்றான்.

 

அவனைப் பார்த்ததும் அதிரா அச்சத்துடன் அகிலாவின் பின் ஒதுங்கினாள்.

 

அர்ஜுன் அகிலாவை பார்த்து “நீ நடுவில் புகாமல் இருந்திருந்தால்.. இன்னேரத்திற்கு.. எல்லார் கிட்டயும்.. என்னோட லவ்வரை இன்டர்டுயுஸ் செய்திருப்பேன். நான்தான் ஆல்ரெடி.. இப்படித்தான் விசயம் என்றுச் சொல்லிட்டேனே! உன்னை யார்.. உன் பிரெண்ட்டை பத்து நாள் கழித்து பார்க்கிற மாதிரி வரச் சொன்னது?” என்று அவளை அதட்டினான்.

 

தன்னை அதட்டியதும் கோபம் கொண்ட அகிலா “நான் ஒண்ணும் உங்களைப் பார்த்துட்டு வரலை! நான் பிஸியாக தான் இருந்தேன். நீங்க வருவதை நான் கவனிக்கலை. ஷியாமிளா ஆன்ட்டி இரம்பம் மாதிரி அறுத்துட்டு இருந்ததைக் கேட்டுட்டு இருந்தேன். அப்பா தான் நீங்க வருவதைக் காட்டின பிறகு தான்.. வந்தேன்.” என்றாள்.

 

அதைக் கேட்ட அர்ஜுனின் முகத்தில் யோசனை பரவியது.

 

அர்ஜுன் தனக்கு தானே பேசுபவன் போல் சத்தமாக பேசினான்.

 

“சோ! அப்பாவிற்கு.. அதிராவை நான் கூட்டிட்டு வந்ததைப் பார்த்திருப்பார். ஆனா அப்படிப் பார்த்த மாதிரி காட்டிக்கலை! ஐ மீன்.. என்னைத் திட்டலையே! அப்போ வேணுன்னே என்னைத் தடுக்க தான் உன்னை அனுப்பியிருக்கிறார்! கூடவே.. கெஸ்ட் எல்லாரையும் வேகமாக சாப்பிடவும் அனுப்பியிருக்கிறார். அதாவது எதோ கெஸ் செய்திருக்கிறார். அதனால் முன்னெச்சரிக்கையா இதைச் செய்திருக்கிறார். இன்னேரம் அம்மா மூலம் எல்லாம் தெரிந்திருக்கும்.. கெஸ்ட் எல்லாரையும் ஒரு ரவுண்ட் பார்த்துட்டு என்னைப் பார்க்க வருவார், அதுக்குள்ள நான் அங்கே போகணும்.” என்று அவன் அப்பனுக்கே பாடம் எடுப்பவன்.. என்பதைக் காட்டினான்.

 

அதிராவிடம் “வா அதி!” என்று‌ கையை நீட்டினான். ஆனால் அதிரா மேலும் அகிலாவின் பின்னால் ஒடுங்கியவளாய்.. அகிலாவின் தோளைப்‌‌ பிடித்து ஆட்டி.. “வா அகி போயிடலாம்.” என்றாள்.

 

அகிலாவிற்கு பின் மறைந்து நின்றிருந்த அதிராவை தலை சரித்து பார்த்த அர்ஜுன் “என்னை விட்டுப் போக முடியாது அதி!” என்றுச் சிரித்தான்.

 

ஆனால் அதிரா “நான் வரலை.” என்று அர்ஜுனிடம் கூறியவள் அகிலாவிடம் “நீ சொல்லு அகிலா! என்னை‌ விட்டுர சொல்லு அகிலா!” என்றாள்.

 

அர்ஜுன் மேலும் சிரித்து “இவ உனக்கு பாதுகாப்பா.. இவளை மீறி உன்னை நெருங்க முடியாதா..” என்று கிண்டலுடன் சிரித்தான்.

 

தனக்கு அருகே அகிலா நிற்கும் தைரியத்திலும்.. மேலும் அழைத்தால் வரக் கூடிய தூரத்திலும் சிலர் இருக்கிற தைரியத்திலும் இவர்களை மீறி அர்ஜுனால் என்ன செய்ய முடியும் என்று அதிரா “இப்படி என்னை ஃபோர்ஸ் செய்தால்.. அப்பறம் நான் போலீஸிடம் போயிருவேன்.” என்று கழுத்து நரம்பு புடைக்க கூறினாள்.

 

அகிலா “ஷ்ஷ்‌‌.. பேசாமல் இரு அதிரா!” என்று அவளை அடக்க முயன்றாள்.

 

ஆனால் அகிலாவை கவனிக்கும் நிலையில் அதிரா தற்பொழுது இல்லை. ஏனெனில் அதிரா அர்ஜுனின் அழுத்தமான பார்வையில் உறைந்து நின்றிருந்தாள். 

 

அர்ஜுன் மாறாத பார்வையுடன் “அப்போ நான் என்ன செய்வேன்னு சொல்லியிருக்கேன் இல்ல..” என்று‌ உதட்டை ஒரு பக்கமாக வளைத்து சிரித்தான்.

 

அதிராவிற்கு திக்கென்று இருந்தது. அச்சத்தில் அகிலாவின் எலும்பு உடைந்து விடுமளவிற்கு அழுத்தமாக பிடித்துக் கொண்டு “உங்க மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன். என் பக்கத்தில் வந்தால் எல்லாரையும் கூப்பிட்டு.. உங்க மானத்தை வாங்குவேன். போலீஸை கூப்பிடுவேன்.” என்று நடுங்கும் குரலில் கூறினாள்.

 

உடனே அர்ஜுன் “அப்போ நானும் சொன்னதைக் செய்வேன்.” என்று அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கவும், அதிரா அலறியவாறு ஓடினாள்.

 

அர்ஜுன் விருந்து நடைப்பெறும் திசையில் நின்றுக் கொண்டிருந்ததால் “ஹெல்ப்! ஹெல்ப்!” என்றுக் கத்தியவாறு அவனுக்கு எதிர்திசையில் ஓடினாள்.

 

நேரே பார்த்தவாறு‌ ஓடியவளுக்கு.. பெரிய கேட் தென்படவும், அவள் இங்கிருந்து வெளியேறுவதற்கு அது ஒன்றே‌ வழி‌ என்று.. அதனை நோக்கி வேகமாக ஓடினாள். அவள்‌ ஓடி வருவதைப் பார்த்து அங்கிருந்த காவலாளி வரவும், அவனிடம் “என்னைக் காப்பாற்றுங்க..” என்றாள்.

 

ஆனால் அவன் புரியாது பார்க்கவும்.. வெறுத்தவளாய் கேட்டை தாண்டி ஓடினாள். அங்கு பெரிய வளைவு பாதை அமைக்கப்பட்டிருந்தது. அந்த வளைவு பாதை‌.. பிரதான சாலையை சென்றடைந்தது. சிறிதும் தாமதியாமல் வழி கிடைத்து விட்ட மகிழ்ச்சியிலும், அர்ஜுன் துரத்திக் கொண்டு வருகிறானோ.. என்ற பயத்திலும் வேகமாக சாலையை அடைந்த பொழுது எங்கிருந்தோ வந்த மினி லாரி ஒன்று இடித்து தூக்கி வீசப்பட்டாள்.

 

தரையில் கால் படாமல் காற்றில் மிதந்து டக்கென்று எங்கோ விழுந்தது மட்டும் தான் அதிராவிற்கு நினைவில் இருந்தது. அதன்பின் சுயநிலையை இழந்துவிட்டாள்.

 

—-------------------------

 

வேகமாக காட்டுக்குள் மூச்சு வாங்க ஓடிக் கொண்டிருந்தவளை நிறுத்தி யாரோ கையை பிடிக்கவும், வலிக்குது கையை விடுங்கள்‌ என்று அவளுக்கு கத்த வேண்டும் போன்று இருந்தது. ஆனால் கத்த முடியவில்லை.

 

பின் மீண்டும் தனது ஓட்டத்தை தொடர்ந்தாள். ஏதோ பேச்சு குரல் கேட்க ஓடியவாறு திரும்பிப் பார்த்தாள். அவளுக்கு மிகவும் பரிச்சயமான குரல்கள் மட்டும் அவளைப் பற்றிப் பேசியது கேட்டது. ஆனால் எங்கிருந்து பேசுகிறார்கள் என்றுத் தெரியவில்லை. நின்று தேடிப் பார்க்கலாம் என்று நினைத்தால் அவளால் நிற்க முடியவில்லை. தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தாள். இம்மாதிரி பலமுறை நடந்தது. 

 

வெகு நேரம் ஓடியதால் அவளுக்கு மூச்சு வாங்கியது. உடம்பு எல்லாம் வலித்து. மிகவும் சோர்வாக இருந்தது. ஓரிடத்தில் படுக்கலாம் என்று நினைக்கும்‌ போதே.. படுத்திருப்பதை உணர்ந்தாள்.

 

கண்கள் சொருக உறங்க முயன்ற போதே.. அவள் கண்டிப்பாக ஓட வேண்டும் என்று நினைவிற்கு வந்தது. ஆனால் எதற்கு என்று நினைவில்லை. உறங்குவதற்கு முன்.. இன்னொரு விசயமும் செய்ய வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அது என்ன என்றுத் தெரியவில்லை. 

 

அதிகம் யோசிக்காமல் தற்போது உறங்குவது தான் முக்கியம் என்றுத் தோன்ற.. சுகமாக உறங்கினாள்.

 

சுகமாக உறங்கிக் கொண்டிருக்கும் போது.. மேலும் சுகத்தை தருவது போல் அவளது உச்சந்தலையில் இருந்து புறப்பட்ட இன்ப அதிர்வு ஒன்று அவளது மேனி எங்கும் தந்தி மீட்டவும், முறுவல் மலர.. திரும்பிப் படுக்க முயன்ற போது.. கை வலி எடுத்தது.

 

“ஷ்ஷ்! அந்த பக்கம் திரும்பாதே” என்ற‌ கனிவான குரல் கேட்கவும், படக் என்று இமைகளைத் திறந்தாள்.

 

அங்கு அர்ஜுன் மகிழ்ச்சியுடன் அவளைப் பார்த்தவாறு நின்றிருந்தான்.

 

அவனைப் பார்த்து திகைத்த அதிரா.. இவனிடம் இருந்து தப்பிக்கவில்லையா.. மீண்டும் மாட்டிக் கொண்டோமா.. என்று உதவிக்கு யாரையாவது அழைக்கலாம் என்று சுற்றிலும் பார்த்தவள்.. மேலும் அதிர்ந்தாள்.

 

ஏனெனில் அது ஒரு அறை! அங்கு அர்ஜுன் மட்டும் அவளைப் பார்த்து குனிந்தவாறு நின்றிருந்தான். 

 

ஏன் குனிந்தவாறு நின்றிருக்கிறான் என்று யோசிக்கும்‌ போதே.. அவள் படுத்திருப்பதை உணர்ந்தாள்.

 

அச்சத்துடன் எழ முயலவும், சட்டென்று அர்ஜுன் அவளை இதமாக பிடித்து படுக்க வைத்தான்.

 

அர்ஜுன் “மூணு நாளா மயக்கத்திலும், அப்பறம் தூக்கமுமாக இருந்தே தானே.. அதுதான் லைட்டா தலை சுத்தும். எழுந்து உட்காரணுன்னா‌.. நான் உட்கார வைக்கிறேன். அந்த கையை ஊன்றி விடாதே! கை முழங்கை மூட்டு பிசங்கிச்சு. டொன்ட் வெர்ரி.. சரி செய்துட்டாங்க! ஆனா அதிகம் அசைக்காதே‌. கவனமாக இருக்கணும்.” என்றான்.

 

அதிராவோ முதலில் கூறிய வார்த்தையிலேயே உறைந்துப் போனாள்.

 

“மூ… மூ.. மூணு நாளா! அகிலா எங்கே?” என்றுக் கேட்டாள்.

 

அர்ஜுன் “அகிலா! இந்தியாக்கு போய் இரண்டு நாளாச்சு!” என்று சர்வ சாதாரணமாக கூறினான்.

 

‘அப்படியானால் நான் இங்கே!’ என்று சர்வமும் ஒடுங்கியவளாய் ஆனாள்.

 

ஆசிரியர் பேசுகிறேன்:

 

அடைமழையில நனைய விருப்பம் இல்லைன்னு சொன்னாள். அதுனால அது வெள்ளமா மாறி.. அவளை அடிச்சுட்டு வந்திருச்சோ!


   
Quote
(@vidhushini)
Active Member
Joined: 5 months ago
Posts: 10
 

அதிராவின் மிரட்சியினால் உண்டான அவசரம், நிரந்தரமாக அர்ஜூனுடனே பயணிக்க வைக்கப்போகிறதோ?


   
rajianbu reacted
ReplyQuote
rajianbu
(@rajianbu)
Admin Admin
Joined: 5 months ago
Posts: 28
Topic starter  

@vidhushini நன்றி..

 

முதலில்.. அவனை தன் பக்கம் கவர்ந்து விட்டதிற்கான பலனை அனுபவிப்பாள். அவனுடைய காதலை தான் சொல்றேன். ஹா ஹா..


   
Vidhushini reacted
ReplyQuote
Share: