Forum

Notifications
Clear all

குடை 13

2 Posts
2 Users
3 Reactions
255 Views
rajianbu
(@rajianbu)
Admin Admin
Joined: 5 months ago
Posts: 28
Topic starter  

அத்தியாயம் 13

அதிராவின் இதழ்களில் மூழ்கியிருந்த அர்ஜுன் மெல்ல அவ்விதழ்களுக்கு விடுதலை அளித்துவிட்டு அவளது கழுத்தடியில் தஞ்சம் புகுந்தான்.

 

அர்ஜுன் இதழ்களை‌ விடுவித்ததும்.. அதுவரை அடைத்து வைத்திருந்த மூச்சை இழுத்துவிட்டாள். ஆனால் மறுநொடியே அவன் அவளது கழுத்து வளைவில்.. புதையவும், அவசரமாக அவனைத் தன்னிடம் இருந்து பிரிக்க முயன்றாள். ஆனால் ஒரு இன்ச் கூட அவளால் அவனை அசைக்க முடியவில்லை. ஆனால் அவளது உணர்வுகள் எங்கோ ஆழமாக விழுவது போன்று இருக்கவும், அது தந்த தாக்கம் அழுகையாக வெளிப்பட “என்கிட்ட இப்படி நடந்துக்குவீங்கனு நான் எதிர்பார்க்கலை அர்ஜுன்..” என்று நா தழுதழுக்க கூறினாள். 

 

உடனே நிமிர்ந்து அவளது முகம் பார்த்த அர்ஜுன் அவளது கரங்களை சிறை செய்து அவளது இரு பக்கமும் அழுத்தி வைத்துப் பிடித்தவன் “உன்கிட்ட தான் இப்படி நடந்துக்கணும் அதி!” என்று கரகரத்த குரலில் கூறிவிட்டு அவளது நெற்றியில் அழுத்த முத்தமிட்டான். பின் அவனது உதடுகள்.. நெற்றியில் இருந்து இறங்கி கன்னங்கள் கழுத்து என்று பயணித்தவாறு கீழிறங்கியது. அப்பொழுது “அர்ஜுன்” என்று மாலதியின் குரல் கோபத்துடன் கேட்டது.

 

அவரை எதிர்பார்த்திருந்தவன் போன்று.. முறுவலுடன் மெல்ல நிமிர்ந்து அவளுக்கு விடுதலை அளித்தான். உடனே எழுந்து கதவிடம் சென்று கதவை திறக்க முயன்ற அதிரா.. திடுமென அதிர்ச்சியுடன் தன்னை குனிந்து பார்த்து நிம்மதி கொண்டாள்.

 

அவளது செய்கை பார்த்து.. அர்ஜுனுக்கு சிரிப்பும் தாபமும் ஒருங்கே தோன்றியது. நிதானமாக எழுந்து வந்தான். அவன் வருவதைப் பார்த்த அதிரா அவசரமாக லாக்கை திருகியவளின் கரம்.. நழுவியது. அதற்குள் மாலதி பலமுறை அர்ஜுனை அழைத்துவிட்டார். 

 

பதட்டத்துடன் அதிரா மீண்டும் முயல்வதை அமைதியாக பார்த்தவன், அவள் கதவை திறந்ததும்.. சட்டென்று கரத்தை நீட்டி அவளது முழங்கையை பற்றி தன் புறம் இழுத்துக் கொண்டான்.

 

கதவை திறந்ததும் பதட்டமாக உள்ளே பார்த்த மாலதி அர்ஜுன் அதிராவை பற்றியவாறு நின்றிருப்பதைப் பார்த்து.. அதிர்ச்சியும் கோபமுமாக.. “கெஸ்ட் வந்திருக்கும் நேரத்தில் என்ன நியுசன்ஸ் இது! அர்ஜு உன்கிட்ட இதை நான் எதிர்பார்க்கலை.” என்றவர், அதிராவை பார்த்து.. “நான் அத்தனை சொல்லியும்.. உன் புத்தியை காட்டிட்ட இல்ல!” என்று ஆக்ரோஷத்துடன் கூறினார்.

 

உடனே அர்ஜுன் “சோ நீங்க தானா! அவ கிட்ட தேவையில்லாததை பேசி.. இன்னும் பயமுறுத்தி வைத்தது.” என்றான்.

 

மாலதி “அர்ஜுன்! அவளை விடு!” என்று அதட்டியவர், பின் அர்ஜுனை அதட்டினால் அவன் மிஞ்சுவானே தவிர அடங்க மாட்டான் என்பது நினைவிற்கு வரவும்.. “எல்லாரும் வந்திருக்காங்க அர்ஜு! எல்லாரும் உன்னை அங்கே கேட்டுட்டு இருக்காங்க! நீ.. இங்கே அதுவும்.. நாங்க இருக்கும் போதே.. இவ கூட! ச்சே.. சேம் ஆன் யு அர்ஜு..” என்று முகத்தை திருப்பிக் கொண்டார்.

 

அதிரா அவமானத்தால் கூனி குறுகி போனாள்.

 

ஆனால் அர்ஜுன் அவ்வாறு உணரவில்லை போல.. “நான் என் லவ்வர் கூட இருக்கும் போது.. டிஸ்டர்ப் செய்யறீங்களே! உங்களுக்கு மேனர்ஸ் தெரியுமா!” என்றுக் கேட்டான்.

 

அதைக் கேட்டு அதிராவே அதிர்ந்தாள்.. என்றால் மாலதியை பற்றிக் கேட்கவே வேண்டாம்.

 

மாலதி “உனக்கு எங்க கிட்ட மரியாதை என்பது இருக்கா அர்ஜுன்!” என்றவரின் கண்கள்‌ கலங்கியது. 

 

அர்ஜுன் அவரைப் பார்க்காது முகத்தை திருப்பிக் கொண்டு “மரியாதை இல்லை தான்! ஆனா மதிப்பு இருக்கு! அந்த மதிப்பு எப்போதும்‌ மாறாது. நான் உங்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை கொடுத்தால்.. என்னை அடக்கிருவீங்க! என் விருப்பப்படி என் முடிவுகளை எடுக்க முடியாது. என் விருப்பமான முடிவு இவள்! அதை உங்களுக்கு உணர்த்த தான்! இப்போ மரியாதை இல்லாமல் பேசிட்டேன் ஒத்துக்கிறேன். ஆனா என் விருப்பத்தில் இருந்து மாற மாட்டேன்.” என்று முகத்தில் பிடிவாதத்துடன் கூறினான்.

 

இன்னும் அதட்டினால்.. பிடிவாதம் கொண்டவனை மாற்ற முடியாது.. என்று.. பேச்சை மாற்ற எண்ணியவராய்.. திமிறிக் கொண்டிருந்த அதிராவை பார்த்து “இப்போ அவளை விடு அர்ஜு!” என்றான்.

 

அதற்கு அர்ஜுன் பேரம் பேசினான்.

 

“இப்போ நான் அதிராவை விடணுமா! இல்லை பார்ட்டிக்கு வந்து நல்ல பிள்ளையாக கலந்துக்கணுமா!” என்றுக் கேட்டான்.

 

விருந்தில் கலந்துக் கொண்டால்.. தற்போதைக்கு இங்கிருந்து வருவான் என்றுக் கணக்கிட்ட மாலதி “பார்ட்டிக்கு வா அர்ஜு!” என்றார்.

 

அதைக் கேட்டு அதிராவும், ரிஷிதாவும் அதிர்ந்தார்கள்.

 

ரிஷிதா “என்ன ஆன்ட்டி! அவன் கூடப் பேசிட்டு நிற்கறீங்க! அவளை இழுத்து அறைந்துவிட்டு.. அர்ஜுவை கூட்டிட்டு வாங்க..” என்று கிறீச்சிட்டாள்.

 

அர்ஜுன் ரிஷிதாவை பார்த்து “இங்கே அம்மாவை கூட்டிட்டு வந்ததோட உன்னோட வேலை முடிந்தது நீ போகலாம் ரிஷிதா! அப்பறம் இன்னொன்னு கொஞ்ச நாளா சொல்லணும் என்று நினைச்சேன். இப்போ சொல்லிறேன். நமக்கு செட் ஆகுன்னு தோணுலை. சோ ஸாரி! நீ போகலாம்.” என்றான்.

 

பின் மாலதியிடம் திரும்பி “ஒகேமா! இன்னும் டென் மினிட்ஸில் பார்ட்டியில் இருப்பேன்.” என்று நிறுத்திவிட்டு மாலதியை அழுத்தமாக பார்த்தவன், “நான் உங்க மகன் தான் என்றாலும்.. உங்களுக்கு மேனர்ஸ் இருக்கும் என்று நினைக்கிறேன். இது புருஷன் பொண்டாட்டி வீம்பு சண்டை மாதிரி தான்! நான் அதிரா கூடத் தனியா பேசிட்டு ஃபிப்டின் மினிட்ஸில் வரேன். இன்னும் நீங்க இங்கே நின்னுட்டு இருந்தா.. ஃபிப்டின் மினிட்ஸ் அரைமணி நேரம் ஆகலாம்.” என்றான்.

 

மாலதி “வாட்!” என்றாலும்.. தனது மகனை பற்றி தெரிந்திருந்தால்.. “நீயும் நல்ல பையனா இரு அர்ஜு!” என்று நாசுக்காக கூறினார்.

 

அதற்கு அர்ஜுன் “நான் நல்ல பையன் தான்! அது உங்களுக்கு தெரியாதது தான் என் பேட் லக்!” என்றவன், “ஒகே ஒரு ஆஃப் அன் ஹவர் கழித்து வரேன்.” என்கவும், மாலதி அவசரமாக “இல்லை நான் போகிறேன்.” என்றுத் திணறியவாறு கூறிவிட்டு திரும்பி திரும்பிப் பார்த்தவாறு சென்றார்.

 

ரிஷிதா இருவரையும் கோபமாக பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டு சென்றாள். தடுமாற்றத்துடன் படியிறங்கிக் கொண்டிருந்த மாலதியிடம் சென்றவள்.. “என்ன அம்மா நீங்க! உங்க பையன் ஒரு பெண் கூடத் தனியா இருக்கிறதைப் பார்த்துட்டு கண்டிக்காம.. அவளை மறுபடியும் அவன் கூட விட்டுட்டு வரீங்க! அவன்தான் நான் அவளை விடணுமா.. இல்லை பார்ட்டிக்கு வரணுமானு கேட்டானே! நீங்க பார்ட்டிக்கு வா என்றே சொல்லிட்டு வந்திருக்கீங்க! அப்போ மறைமுகமா அந்த பொண்ணு கூட இருக்கிறதுக்கு சம்மதம் சொல்லிட்டு வந்திருக்கீங்க தெரியுமா!” என்றுப் பொரிந்தாள்.

 

அப்பொழுது அர்ஜுனின் குரல் இடையிட்டது.

 

“நேத்து நான் உன் கூடத் தான் வெளியே சுற்றுவேன் என்று அம்மாக்கு தெரியும் ரிஷிதா! அதுக்கு மட்டும் ஒகே.. தப்பில்ல. இப்போ மட்டும் தப்பா! அது என்ன லாஜீக்.. என்று அவங்க கிட்டவே கேள்! ஆனா என்கிட்ட கேட்டா.. இவ நான் லவ் செய்கிற பெண் என்பதால்.. இதுதான் சரின்னு சொல்வேன்.” என்றான்.

 

அர்ஜுனின் பேச்சை கேட்டு அயர்ந்து நின்றவளை.. மாலதி தான் அழைத்துச் சென்றாள்.

 

ரிஷிதா “ஆன்ட்டி!” என்று அழுக்குரலில் அழைக்கவும், மாலதி “அர்ஜுவை அங்கிருந்து இப்போ கூட்டிட்டு வருவது தான் முக்கியம் ரிஷிதா! அவனை‌ப் பற்றி‌ எனக்கு நல்லா தெரியும். சொன்னா பத்து நிமிஷத்தில் வந்திருவான். அப்பறம் மற்றதை பற்றி யோசிக்கலாம். இப்போதைக்கு அந்த பெண் விசயத்தில் டீப்பா போகாம பார்த்துட்டாலே போதும். நாம் மறுத்தால் தான் அதிகமா அவ விசயத்தில் டீப்பா போவான். அதனால அவன் போக்குல விடு! சீக்கிரமே என் பையன் எனக்கும் கிடைப்பான், உனக்கும் கிடைப்பான்.” என்றார்.

 

படியிறங்கி கொண்டிருந்த ரிஷிதா கவலையுடன் மேல் தளத்தை பார்த்துவிட்டு “ஆனா ஆன்ட்டி அவங்க தனியா..” என்றுக் கூற வருவதை முழுவதுமாக கூறாமல் நிறுத்தினாள்.

 

புரிந்துக் கொண்ட மாலதி சங்கடத்துடன் “அதைச் சொல்லிக் காட்டியதுக்கு தானே.. நானும் நீயும் வாங்கிக் கட்டிக்கிட்டோம். நீ கவலைப்படாதே.. அந்த பொண்ணை யாரும் அவன் உளறிய மாதிரி லவ்வர் என்று நினைக்க மாட்டாங்க! இந்த பெண் அவன் பின்னாடி சுத்தி வளைச்சு போட பார்க்கிறாள்னு தான் நினைச்சுப்பாங்க! அதைப் பயன்படுத்தி அவளை விரட்டிரலாம். நான்தான் தப்பு செய்துட்டேன். மதியம் அந்த பொண்ணை மீட் செய்த போதே.. கையோடு கூட்டிட்டு வந்து என் கண் பார்வையில் வைத்திருக்கணும்.” என்று அவரும் மேல் தளத்தை பார்த்து சிறு பெருமூச்சை இழுத்துவிட்டு, ரிஷிதாவை போகச் சொன்னவர், ஹாலில் அர்ஜுனின் வருகைக்காக காத்திருந்தார்.

 

மாலதி அவளை அர்ஜுனிடம் இருந்து விடுவிக்காமல் அமைதியாக செல்லவும், திகைத்த அதிரா தனது முழுபலத்தையும் உபயோகித்து திமிறினாள்‌. அர்ஜுனால் இன்னும் அழுத்தமாக பற்றி அவளது திமிறலையும் அடக்க முடியும். ஆனால் அவளுக்கு தான் வலிக்கும் என்று தனது கரத்தை விலகிக் கொண்டான்.

 

கன்றி போயிருந்த தனது முழங்கையை தடவியவள், ஆத்திரமும் அழுகையுமாக “ஏன் அர்ஜுன்! நீங்க ரொம்ப தப்பு செய்யறீங்க!” என்றாள்.

 

அதற்கு அர்ஜுன் “நான் உன்னை ரொம்ப லவ் செய்யறேன் அதி! ரிஷிதா எப்படியும் யாரையாவது கூட்டிட்டு வருவானு தெரியும். அவங்க கிட்ட நம்ம லவ்வை ஊர்ஜிதம் செய்ய நினைச்சேன்.. செய்தேன். இனி என்னைத் தாண்டித் தான் உன்கிட்ட வரணும். இனி நேரடியா யாரும் உன்னை குத்தம் சொல்ல மாட்டாங்க..” என்றான்.

 

அவன் கூறியதைக் கேட்டு.. திகைத்த அதிரா “ஆனா என் மனசை பற்றி உங்களுக்கு அக்கறை இல்லையா!” என்றுக் கேட்டாள்.

 

ஆனால் அர்ஜுனோ “அதைப் புரிந்துக் கொள்ள தான் என் பக்கத்திலேயே இரு.. என்றுச் சொல்கிறேன்.” என்றான்.

 

அதிரா “இப்படி என்னை வற்புறுத்தி.. உங்க காதலாய் என்னை தக்க வச்சுக்க நினைச்சா.. அப்பறம் உங்க அம்மா என் மேலே சுமத்தின குற்றத்தை செய்திருவேன்.” என்று மூச்சு வாங்க கூறினாள்.

 

அர்ஜுன் கண்களில் கூர்மை பெற “என்ன செய்வே?” என்றுக் கேட்டான்.

 

அதிரா இதைச் சொன்னால் தன்னை விட்டு விடுவான் என்று எண்ணி “நீங்க என்கிட்ட தப்பா பிஹேவ் செய்தீங்க தானே.. அதை மீடியாவிடம் சொல்லி உங்க மானத்தை வாங்குவேன்.” என்றாள்.

 

உடனே அர்ஜுனின் முகத்தில் பலத்த யோசனை பரவியது. அதிராவை பயமுறுத்தவும், மிரட்டவும்.. அவனது அன்னை அவ்வாறு கூறியிருப்பது புரிந்தது. மேலும் அவர் அதிராவிடம் கூறியதையே மாற்றிக் கூறலாம் என்று எண்ணியவனுக்கு.. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றுத் தெரிந்து விட்டது.

 

எனவே அதிராவிடம் “ஒகே! நம்ம விசயம் அப்பறம் பேசலாம். இப்போ சீக்கிரம் வேற ட்ரஸ் சேன்ஜ் செய்துட்டு.. சின்ன டச்சப் செய்துட்டு வா! உனக்கு டென் மினிட்ஸ் தான் டைம்!” என்றான்.

 

அதிரா திகைப்புடன் “பா.. பார்ட்டிக்கா! நா.. நான் வரலை.” என்றாள்.

 

அதற்கு அர்ஜுன் “நான் உன்கிட்ட பர்மிஷன் கேட்கலை அதி! நான் சொன்னதைச் செய்ய சொன்னேன்.” என்றான்.

 

அவனிடம் கேட்ட அந்த நிதானமான குரல் அவளுக்கு கிலியை கிளப்பியது. அந்த குரலில் பேசினால்.. அதில் அவனது பிடிவாதம் மட்டுமின்றி கோபமும் மறைந்திருக்கு என்று.. அனுபவத்தினால் அறிந்ததால்.. அதிரா “அர்ஜுன்!” என்றுத் தயக்கத்துடன் தனது மறுப்பை தெரிவிக்க முயன்றாள்.

 

ஆனால் அர்ஜுன் தனது கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்தவாறு “டைமாகிருச்சு அதி! நாம் பேசறதுக்கு நிறையா டைம் இருக்கு! கண்டிப்பா நாம் பேசலாம். இப்போ அம்மா கிட்ட சீக்கிரம் வரேன்னு சொல்லியிருக்கேன். சீக்கிரம் ரெடியாகு! இல்லைன்னா.. நானே..” என்றவாறு முன்னே வந்தான். உடனே அவசரமாக பெட்டியை திறந்து கையில் கிடைத்த துணியை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்தாள்.

 

குளியலறையிற்குள் புகுந்தவளுக்கு தனக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. மதியம் காதலை கூறியவன், அவள் காதலை மறுக்கவும்.. காமுகனாக மாறிவிட்டான். அவன் கூறியதைச் செய்யும்படி அவளை ஆட்டுவிக்கிறான். 

 

அப்பொழுது குளியலறை பலமாக தட்டப்படவும், அவசரமாக ஆடைகளை மாற்றிவிட்டு மெதுவாக கதவை திறந்தாள்.

 

அவனும் கழற்றி வீசி எறிந்த கோர்ட் மட்டும் டையை கட்டிக் கொண்டு தயாராக இருந்தான். அதிராவை மேலும் கீழும் பார்த்தவன் “சிம்பிள் ட்ரஸிலும் செமையா இருக்கே! உனக்கு மேக்கப் எல்லாம் வேண்டாம்.” என்று தனது கைக்குட்டை கொண்டு அவளது முகத்தை அழுத்த துடைக்கவும், திமிறி விலகினாள். ஆனால் அர்ஜுன் அதைப் பற்றிக் கவலைப்படாது.. அவளது கூந்தலை கைகளால் வாரி சரிச் செய்தான்.

 

தனது சிகையை சரிச் செய்துக் கொண்டிருந்தவனை பார்த்த அதிரா “எல்லாரும் வந்திருக்கிற அந்த பார்ட்டியில் நான் கத்தி கூப்பாடு போட்ட என்ன செய்வீங்க..” என்றுக் கேட்டாள்.

 

அதற்கு அர்ஜுன் “கத்தின வாயில் கிஸ்ஸடிப்பேன்.” என்றான்.

 

அதிரா “எல்லாத்துக்கும் முன்னாடியா..” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள்.

 

அதற்கு அர்ஜுன் “ஆமாம்! வெட்டிங் கிஸ் என்று நினைச்சுக்கோ.. சங்கடமா தெரியாது.” என்று  அசட்டையாக கூறினான்.

 

பின் அவளது இடுப்பை கரத்தால் வளைத்துக் கொண்டு தன்னோடு நடத்தி சென்றான்.

 

அவனை தடுக்க இயலாது அவனோடு நடந்தவாறு “இப்போ உங்க கூட வந்தா.. என்னைப் பற்றி தப்பா பேசுவாங்க! அதுக்கு தான் கூட்டிட்டு போறீங்களா!” என்றாள்.

 

அதற்கு அர்ஜுன் மறுப்பாக தலையசைத்து “அப்படித் தப்பா பேசக் கூடாது என்கிறதுக்காக தான் கூட அழைச்சுட்டு‌ போறேன். உன்னை அங்கே என் லவ்வரா இன்டர்டுயூஸ் செய்யப் போறேன்.” என்றான்.

 

அதைக் கேட்டு நிற்க முயன்றாள். ஆனால் சாதாரணமாக அவளை நடத்தி செல்பவன் போல் இருந்தாலும்.. அவளது இடுப்பை அவனது கரம் வளைத்திருந்தால்.. அது அவளது நடையை நிறுத்தாது இழுத்து சென்றது.

 

அதிரா “உங்க லவ்வரா எல்லாரும் என்னைப் பார்க்கிறது எனக்கு அவமானமா இருக்கு..” என்று அழுகையுடன் கூறிப் பார்த்தாள்.

 

ஆனால் அர்ஜுன் அசராது முறுவலுடன் “நான் உன்னை பெருமையா இன்டர்டுயூஸ் செய்யப் போகிறேன்.” என்றான்.

 

என்னிடம் பேசி ஜெயிக்க முடியாது நீ தோற்று‌ போவாய் என்றுக் கூறியதை.. நடத்திக் காட்டினான்.

 

படிக்கட்டிடம் வந்தவள், அங்கிருந்த மர வளைவை பிடித்து தன்னை அழைத்து செல்வதை தடுக்க முயன்றாள். ஆனால் அவனோ குனிந்து அவளை கரங்களில் ஏந்தியவாறு படியிறங்கினான்.

 

இருவரும் வரும் நிலையை பார்த்து மாலதி திகைத்து நின்றார்.

 

மாலதி “அர்ஜு! என்னதிது” என்கவும், கீழே இறங்கி வந்து அதிராவை இறக்கி விட்டவன், “எனக்காக வெயிட் செய்துட்டு இருந்தீங்களா! ஒகே லெட்ஸ் கோ..” என்றான்.

 

மாலதி “அர்ஜு! நீ என்ன செய்யறே! இவளை அங்கே கூட்டிட்டு வந்தா.. எல்லாரும்..” என்று அவர் முடிப்பதற்குள் “என்னோட லவ்வர்‌ என்று இன்டர்டுயுஸ் செய்யலாம் என்று இருக்கிறேன். அதனால் தப்பா பேச மாட்டாங்க..” என்றவாறு.. அதிராவோடு முன்னால் நடந்தான். மாலதிக்கு.. மயக்கம் போடாத குறை தான்! அவர் நினைத்தது என்ன நடப்பது என்ன! 

 

எனவே கிட்டத்தட்ட அவனது பின்னோடு ஓடி.. அர்ஜுன் முன் நின்றவர், “அர்ஜு! உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சுருச்சா! இது நம்ம பேமலி கொடுக்கிற பார்ட்டி.. இதில் நீ இப்படிச் செய்தால்.. எல்லாரும் என்ன நினைப்பாங்க! இவ தான் உன்னோட பியான்ஸி என்று நினைக்க மாட்டாங்களா!” என்றாள்.

 

அதற்கு அர்ஜுன் “அப்படித்தான் மரியாதையா அதிராவை பற்றி‌ப்‌ பேசணும். அவளைப்‌ பற்றி தப்பா பேச இடம் கொடுக்க மாட்டேன்.” என்றான்.

 

மாலதி “உன்னோட பெரெண்ட்ஸ்.. நாங்க! எங்களுக்கு அவ்வளவுத்தான் மரியாதையா!” என்றுக் கேட்டார்.

 

அர்ஜுன் “என் அம்மாவா.. அதிரா கிட்ட பேசியிருந்தா.. உங்களை ஃபோர்ஸ் செய்திருக்க மாட்டேன். ஆனா அவ கிட்ட ஏதோ சீரியல் வில்லி மாதிரி பேசி.. அவளைக் குழப்பி வச்சுருக்கீங்க! அதுக்கு.. நீ என் மகனை உண்மையா காதலிக்கறீயானு திட்டியிருந்தா கூட மரியாதையா.. அதிராவை லவ் செய்கிற விசயத்தை சொல்லியிருப்பேன். இவளை என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது என்று வாதடியிருப்பேன். இப்படி.. ஒரு ரூமிற்குள்.. நாங்க இருக்கிறதைக் காட்டி என் விருப்பத்தை சொல்லியிருக்க மாட்டேன். என்னோட விருப்பத்தை நீங்க ஏற்றுத் தான் ஆகணும்.. என்ற சங்கடத்தையும் கொடுத்திருக்க மாட்டேன்.” என்றான்.

 

அர்ஜுன் பேசுவதைக் கேட்டு அங்கிருந்த மற்ற இருவரும் சங்கடத்திற்கு உள்ளானார்கள். அதிரா கூனி குறுகிப் போனாள்.. என்றால்.. மாலதி அர்ஜுனின் முகம் பார்க்க முடியாமல் திணறினார். அவரின் தவறு மகனை இந்தளவிற்கு தவறாக நடக்க வைத்திருக்கிறது என்றுப் புரிந்தது.

 

அவரது முகத்தை சிறுக் கசந்த சிரிப்புடன் பார்த்த அர்ஜுன் “அம்மா! அதிரா ரொம்ப லக்கியான பொண்ணுன்னு நினைக்கிறேன். அவளை விட்டுவிடக் கூடாததிற்கு இன்னொரு ரிஷன் கிடைச்சுருச்சு! அவ வந்த இராசி.. நீங்க என்னைப் பற்றி புரிஞ்சுக்கிட்ட மாதிரி தெரியுது. நீங்க செய்த தவறைப் பற்றி யோசிக்க ஆரம்பிக்கறீங்க..” என்றுச் சிரித்தவன், பின் உணர்ச்சியற்ற கண்களுடன் “இப்படியே யோசிச்சு பாரும்மா! நான் இப்படியானதிற்கு ரிஷனும் தெரியும்.” என்றுவிட்டு அதிராவுடன் அகன்றான்.

 

ஆசிரியர் பேசுகிறேன்.

 

‘முதல்ல அடைமழைல நனையர போது.. திணறலாக தான் தெரியும். ஆனா அதை இரசிக்க ஆரம்பித்தால்‌.. அந்த திணறல் இருக்காது. 

 

அதிரா.. அர்ஜுனின் காதலை இரசிக்க ஆரம்பிப்பாளா!


   
Quote
(@vidhushini)
Active Member
Joined: 5 months ago
Posts: 10
 

'திணறிட்டேதான் இருப்பேன் போலயே' என்று நினைத்துக்கொண்டே அடைமழையை இரசிக்க மறுக்கிறாள்; அடைமழை ஓயும் காலத்தில் 'இன்னும் இரசித்திருக்கலாமோ' என்று வருந்துவாளோ, அதிரா?


   
rajianbu reacted
ReplyQuote
Share: