குடை 12
அத்தியாயம் 12
இரு நாட்களுக்கு முன் பார்த்து.. இன்று மதியம் தான் காதலை பரிமாறிக் கொண்டார்கள். ஆனால் கண்ணீர் பெருகும் அளவிற்கு இத்தனை துயரம் ஏன்? அர்ஜுன் அவளை இந்தளவிற்கு பாதித்திருக்கிறானா என்று அவளுக்கு திகைப்பாக இருந்தது.
அப்பொழுது அவளது அறையின் கதவு தட்டப்படவும், திடுக்கிட்டவள், மெல்ல எழுந்து கதவருகே வந்தாள்.
அப்பொழுது அர்ஜுனின் குரல் கேட்டது.
“ஹெ அதி.. நான்தான்! டொன்ட் வெர்ரி கதவை திற..” என்றான்.
ஆனால் அதிரா “இங்கே ஏன் வந்தீங்க?” என்றுக் கவலையுடன் கேட்டாள்.
அவளது குரலில் இருந்த கவலைக் கண்டு சிரித்த அர்ஜுன் “சொல்றேன் கதவை திற..” என்றான்.
அதிரா மெல்ல கதவை திறக்கவும், “ஐயம் டையர்ட் ஆஃப் திஸ் ஆர்டிபிஷியல் லாஃபிங் பார்ட்டிஸ்..” என்றவாறு டையை தளர்த்தியவன், அதிராவின் படுக்கையில் மல்லாந்து படுத்தான்.
விட்டத்தை பார்த்தவாறு “எனக்கு மதியத்தில் இருந்து உன் ஞாபகமாவே இருந்துச்சு! ஆனா உன்னைப் பார்க்க வரக் கூடாதுனு கன்ட்ரோல்லா இருந்தேன். பார்ட்டில கூட கொஞ்சம் நேரம் பேருக்கு உட்காரலானு நினைச்சேன். ஆனா ஒருத்தர் கிட்ட மனைவி மகன் அப்படினு பேசின போது.. மனைவி என்றதும் உன் ஞாபகம் தான் வந்துச்சு! அதுக்கு மேலே அங்கே உட்கார முடியலை. உன்னைப் பார்க்க வந்துட்டேன்.” என்றவன், தலையை மட்டும் நிமிர்த்தி “உனக்கும் என் ஞாபகமா இருந்துச்சா அதி..” என்றுக் கேட்டான்.
அவனது பேச்சை கேட்டு அதிரா இனிமையாக அதிர்ந்தவளாய் அவனைப் பார்த்தாள். அவனது காதல் நிரந்தரமற்றது. அவள் சலித்து போனால்.. கை விட்டு விடுவான்.. என்று அவள் நினைத்துக் கொண்டிருக்க.. அவன் கூறியது அவளது மனதை அசைத்தது உண்மை!
மெல்ல எழுந்தமர்ந்தவன் தனது கரத்தை நீட்டி வா என்பது போல் தலையசைத்தான்.
அதைக் கண்டு அதிராவின் மனம் சுயவுணர்வு பெற்றது. அகிலா கூறியது, மாலதி கூறியது, அவள் அனுபவித்த.. அவனது அதிரடி நடவடிக்கைகள், அதைப் புரிந்து கொள்ள முடியாது அவளது மனம் திண்டாடியது என்று அனைத்தும் நினைவிற்கு.. வந்தது.
இது எதுவும் பொய்யில்லை.
இது எதுவும் மாறாது.
வேண்டாம்.. இந்த காதல் வேண்டாம். காதல் சொன்ன நொடியில் இருந்து.. மனதை இவ்வாறு அல்லோலப்படுத்தும் இந்த காதல் வேண்டாம்.. என்ற முடிவில் இருந்து மாற கூடாது.. என்று தனது மனதிற்கு மீண்டும் கூறி சமாதானப்படுத்தினாள்.
இன்னும் கையை ஏந்தினால் போல் அர்ஜுன் வைத்திருக்கவும், மெல்ல மறுப்பாக தலையசைத்தாள்.
அர்ஜுன் “ஓ! பெட்டில் உட்கார்ந்துட்டு கூப்பிடரதாலே பயந்துட்டியா!” என்றுச் சிரித்தவன், எழுந்து நின்று.. மீண்டும் கையை நீட்டினான்.
அதிரா மெல்ல தனது கரங்களை பின்னால் கட்டிக் கொண்டு “வேண்டாங்க! போதும் இந்த காதலை விட்டுரலாம்.” என்று திக்கி திணறிக் கூறினாள்.
அர்ஜுன் “அதுசரி! மறுபடியும் கண்டதை நினைச்சு மனசை போட்டு குழப்பிட்டியா! இதுக்கு தான் என் பக்கத்திலேயே இருக்கணும் என்றுச் சொல்வது! உன்னோட குழப்பத்திற்கு சரியான ட்ரீட்மெண்ட் சொல்லட்டுமா! மூன்று ஸ்டெப் முன்னே எடுத்து வை! உன்னோட ரைட் ஹென்ட்டை எடுத்து என் கையில் வை! மீதியை நான் பார்த்துக்கிறேன்.” என்றுச் சிரித்தான்.
அதற்கு மறுப்பாக தலையசைத்த அதிரா “நான் முதல்ல எடுத்த முடிவில் இருந்து மாறியிருக்க கூடாது. ஆனா இந்த மனசுக்கு கேட்கலை. ஆசையை அடக்க முடியலை. அதனால் உங்களுக்கு ஒகே சொல்லிட்டேன்னு நினைக்கிறேன். இந்த லவ் வேண்டாங்க! அதுக்கு உங்க லவ்வை நான் குத்தம் சொல்லுலை. நீங்க என்னை ரொம்ப லவ் செய்யறீங்க! அதற்கு இப்போ நீங்க என்னைப் பார்க்க வந்ததே சாட்சி! ஆனா பெயிலியரான லவ் மட்டும் இல்லை.. சில உண்மையான லவ்வும் சேராது. அது மாதிரி நினைச்சுக்கலாம். ப்ளீஸ் இத்தோட விட்டுரலாம்.” என்றாள்.
அர்ஜுன் நிதானமாக “ஜஸ்ட் ரிலேக்ஸ் அதி! இதுக்கு தான் நாம் கொஞ்ச நாள் பிரிஞ்சுருக்கலாம் என்றுச் சொன்னேன். இப்போ இன்னும் உனக்கு தெளிவு கிடைக்கும். நீ இந்தியாவிற்கு போ.. டென் டேஸ் கழிச்சு வந்து நான் உன்னை மீட் செய்யறேன்.” என்றான்.
அதிரா “நான் ஒண்ணும் சின்ன பிள்ளை இல்லைங்க! உங்க கூட எதிர்காலம் எப்படியிருக்கும்.. என்று யோசிச்சு.. எனக்கு சரிப்பட்டு வராது என்றுத் தான் இந்த முடிவை எடுத்திருக்கேன்.” என்றாள்.
அர்ஜுன் அவளைக் கூர்மையாக பார்த்து.. “யார் கிட்ட பேசினே?” என்றுக் கேட்டான்.
அதிரா “யார் கிட்ட பேசினா என்ன! அவங்க சொல்வது உண்மைத் தானே!” என்றாள்.
அதற்கு அர்ஜுன் “என்ன உண்மையை சொன்னாங்க..” என்றுச் சிறுச் சிரிப்புடன் கேட்டான்.
அதிரா “எதுக்கு இந்த விசாரணை! இத்தனை நாள் உங்க கூட இருந்த ரிஷிதா கிட்ட என்ன சொல்லப் போறீங்க? ரிஷிதாக்கு முன்னாடி இருந்த கேர்ள்பிரெண்ட்டிற்கு சொன்ன அதே ரிஷனா.. நமக்குள்ள ஒத்து வரலை என்றா..” என்றுக் கேட்டாள்.
அர்ஜுன் “என் கூட சண்டை போட இதுதான் ரிஷனா! இதுக்கு பேர் பொஸஸிவ்னஸ் அதி! உனக்கு என் மேலே லவ் வந்த போதே.. நான் இதுவரை நாலு கேர்ள்பிரெண்ட் மாத்தின விசயம் தெரிந்திருக்கும். அதுதான் பிராப்ளம் என்றால்.. இதோ சோல்யூசன் சொல்றேன். அவங்க கிட்ட என்னால் ஈஸியா நோ சொல்ல முடியும். பிகாஸ் எங்களுக்குள்ள காதல் என்று ஒன்று இல்லை. ஆனா உன் கூட அப்படியில்லை அது உனக்கே தெரியும். விசயம் அவ்வளவு தானா.. இன்னும் இருக்கா!” என்று இடுப்பில் இரு கரங்களையும் வைத்துக் கொண்டு கேட்டான்.
பின் அர்ஜுன் “ஷ்ஷ் ஷப்பா! இந்த லவ் ஜாலியான விசயம் என்று நினைச்சுட்டேன். நமக்கான பெண் மேலே தானா தோன்றுகிற அன்பு என்று மட்டும் தான் நினைச்சுட்டேன். ஆனா இதுல இத்தனை ஆர்குயுமென்ட்ஸ்! இத்தனை அலசல்! பிராமிஸ்! எனக்கு கண்ணை கட்டுது. ஆனா இதுவும் எனக்கு பிடிச்சுருக்கு! சும்மா.. பிடிச்சு போய் லவ் என்று கமிட்மென்ட் செய்யாம.. அதுல நல்லது கெட்டதை ஆராய்வது பிடிச்சுருக்கு! நீ க்யுட் மட்டுமில்ல. கொஞ்சம் மெஞ்சூர், கொஞ்சம் இன்டலிஜென்ட், கொஞ்சம் செல்ஃப் ஸ்டேன்டிங் கேர்ள்! அதுதான் எனக்கு இன்னும் உன்னை ரொம்ப பிடிக்க காரணம்! நீ இப்படி பிடிவாதம் பிடிக்கவும் காரணம்! சும்மா பொம்மைக்கு ஆசைப்பட்ட மாதிரி என் மேலே ஆசை வைக்கல. அப்பறம் கொஞ்சம் புத்திசாலினு சொன்னேன் தானே! நீ கொஞ்சம் முட்டாள், கொஞ்சம் இன்னசன்ஸ், கொஞ்சம் அடம்ட்! கொஞ்சம் பயந்தாங்கொள்ளி! இதுவும் பிடிச்சுருக்கு!” என்று முறுவலித்தான்.
இன்னும் தனது மனதின் நிலை புரியாது.. அவன் இன்னும் அவர்களது காதல் நிலையில் இருந்து பேசுவது.. அதிராவிற்கு ஐய்யோ என்று இருந்தது.
அர்ஜுன் தொடர்ந்து “எதுவாக இருந்தாலும்.. இந்த கையை பிடிச்சுட்டே சொல்லலாமே!” என்று ஒரு கரத்தை நீட்டியவாறு ஒரு எட்டு எடுத்து வைத்தான்.
உடனே அதிரா பின்னால் ஒரு எட்டு எடுத்து வைத்து பின் சென்றாள்.
அதிரா “என்னை புத்திசாலி சொல்றீங்க! என்னோட சீரியஸ்னஸ் புரியாத மாதிரி நடிக்கறீங்க பார்த்தீங்களா! நீங்க அதை விட புத்திசாலி!” என்றாள்.
அதைக் கேட்டு உதட்டை கடித்துக் கொண்டு சிரித்த அர்ஜுன் “புரிந்தால் சரி! நீ முதல்ல சொன்ன அந்தஸ்து, கேரக்ட்டர்ஸ் டிப்ரென்ஸ், என்னோட சில கெட்ட பழக்க வழக்கங்கள்.. எல்லாம் எப்படியும் இஷ்ஷு ஆகும் என்றுத் தெரியும். ஆனா அதை பெரிய இஷ்ஷு ஆக்காதேனு சொல்றேன். வாட்எவர் மேட்டர் இஸ்! டொன்ட் பிரஸ் இட் ஹர்டர் யுவர்செல்ஃப் என்றுத் தான் சொல்றேன். எல்லாம் சரி செய்திரலாம். முதல்ல என்னை விட்டு போகாதேனு சொன்னேன். அப்பறம் உன் மனநிலையை பார்த்து.. என் மேலே நம்பிக்கை வரட்டும் என்று இந்தியாவிற்கு அனுப்பறேன்னு சொன்னேன் தானே! அந்த மாதிரி என்கிட்ட உனக்கு பிடிக்காத விசயங்களையும் மாத்திக்கிறேன். இதுக்கு மேலே என்ன சொல்ல..” என்றான்.
அதிரா மெல்ல “உங்களை மாதிரி ஒரு லவ்வர் கிடைக்க நான் லக்கி தான்! ஆனா பெரிய இஷ்ஷு ஆக்காதேனு சொன்னது எல்லாம் என்னைப் பொறுத்தவரை பெரிய விசயம்! பொதுவாகவே நான் கொஞ்சம் சென்ஸ்டிவ் டைப்! அதுனால நான் அன்லக்கியாவே இருந்துட்டு போறேனே! நான் உங்களை மறுக்கிறதுக்கு இது மட்டும் ரிஷன் இல்லைங்க! எனக்கு ஏற்கனவே மேரேஜ் பிக்ஸ் ஆகி அது நின்றுச்சு! எனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆனவரை நான் லவ் செய்யலைன்னாலும்.. என் கணவரா பிக்ஸ் செய்து கொஞ்ச நாள் வாழ்ந்துட்டேன். ஆனா அந்த மேரேஜ் நின்றதும்.. வருத்தம் எல்லாம் இல்லை என்றாலும்.. கணவனாக நினைச்சதுக்கே ஏதோ கல்யாணம் ஆகி.. அவர் என்னை ஏமாத்திட்டு விட்டுட்டு போன மாதிரி ஃபீல் ஆச்சு! இதை யார் கிட்டவும் சொல்லுலை. சொல்றதுக்கும் சங்கடமா இருந்துச்சு! அம்மா அப்பா கவலைப்படுவாங்கனு சொல்லுலை. பிரெண்ட்ஸ் கிட்ட சொன்ன.. புரியாம கிண்டல் செய்வாங்கனு சொல்லுலை. அதுனால எனக்குள்ளவே வச்சுட்டேன். மறுபடியும் அந்த மாதிரி ஒரு ஏமாற்றத்தை பேஸ் செய்ய எனக்கு பயமா இருக்கு!” என்றவளின் பேச்சில் இடைப்புகுந்தான்.
அர்ஜுன் “அந்த வகையில் உனக்கு பயமே வேண்டாம் அதி! உன்னை விடற ஐடியா எனக்கு சுத்தமா இல்லை. நீ இப்படி மறுக்க மறுக்க.. ரொம்பவும் டீப்பா லவ் செய்து.. நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லை பார்.. என்று காட்ட தோணுது. உன்னை விட நான் அடம்ட் அதி! சோ இந்த விசயத்தில் ஆர்குயூமென்ட்ஸை விட்டுரு! நீ தோத்து போவே!” என்றுச் சிரித்தான்.
அதிரா “நீங்க கண்டிப்பா என்னை விட மாட்டிங்க! ஆனா குழந்தை குட்டி என்று ஆனதும்.. இன்னொரு பெண் மேலேயும் உங்களுக்கு விருப்பம் வந்துட்டா?” என்றாள்.
புருவங்கள் சுருங்க அவளைத் தீர்க்கமாக பார்த்தான்.
அந்த பார்வையின் வீச்சு தாங்காது தலைகுனிந்த அதிரா “உங்க சோஷைட்டில இது நடப்பது தான்! நான் எத்தனை பேரை பார்த்துக்கிறேன். நீங்களும் அந்த மாதிரி ஆகலாம்.” என்றவளை அர்ஜுன் இடைமறிக்கும் முன்.. அதிரா அதைக் கவனியாத பாவனையில்.. “வேண்டாங்க என்னை விட்டுருங்க ப்ளீஸ்! உங்களை மறுக்கிறதுக்காக ஏதேதோ காரணம் சொல்லிட்டு இருக்கேன். நான் உங்களை மறுக்கிறது இரண்டு காரணம் தான்! ஒன்று.. உங்க கேரக்ட்டர் எனக்கு ஒத்து வராது. அடுத்து.. எனக்கு உங்க மேலே நம்பிக்கை இல்லை.. என்கிறதை விட.. இந்த காதல் மேலே நம்பிக்கை இல்லை. இப்போ கூடப் பாருங்க.. நீங்க இந்த காதலை தக்க வச்சுக்க.. உங்களால் எவ்வளவு இறங்கி வர முடியுமோ.. அவ்வளவு இறங்கி பேசறீங்க! ஆனா நான் இந்த காதலில் இருந்து விலக.. பேரா பேராவா பேசிட்டு இருக்கேன். அதுனால் எனக்கு நீங்க வேண்டாம் என்கிறதை விட.. உங்களுக்கு நான் வேண்டாம். இத்தோட விட்டுரலாம்.” என்று கையெடுத்து கும்பிட்டாள்.
அர்ஜுனோ நிதானமாக மார்பிற்கு குறுக்கே கரங்களைக் கட்டிக் கொண்டு.. அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தான். பின் “ரீஜெக்ட்டர்டு! அன்ட் நாட் அஃசெப்ட்டபிள்!” என்று இரு வார்த்தைகளை கூறியவன், பென்ட் பாக்கெட்டில் இரு கரங்களையும் நுழைத்துக் கொண்டு “எதை ஒதுக்கிட்டேன். எதை ஏற்றுக்கலைன்னு தெரியணுமா!” என்றுக் கேட்டான்.
பின் நிதானமாக ஒரு எட்டு அவளை நோக்கி எடுத்து வைத்து “நீ இத்தனை நேரம் பேசினது தான்..” என்று முறுவலித்தான். அதிரா சலித்துப் போனவளாய் திரும்பினாள். ஆனால் எப்படி என்றுத் தெரியவில்லை. தான் இழுக்கப்பட்டது தான் அவளுக்கு.. தெரிந்தது. ஆனால் தற்பொழுது அவள் அவனது கைவளைத்திற்குள் இருந்தாள்.
அர்ஜுன் “என் பெரெண்ட்ஸ் பண்ணின தப்பை நீயும் செய்துட்டியே அதி! நீ இதைச் செய்திருக்க கூடாது.” என்று மூக்கை சுருக்கிக் கொண்டு தலையசைத்தான்.
அதிராவிற்கு திக்கென்று இருந்தது.
அவளது முகத்தை பார்த்து சிரித்த அர்ஜுன் “உனக்காக உனக்கு பிடித்த மாதிரி காதலிக்க ஆசைப்பட்டேன். ஆனா உனக்கு பிடிக்கலை. சரி எனக்கு பிடித்த மாதிரி உன்னை காதலிச்சுட்டு போறேன்.” என்றான்.
அதிரா அவனது கைவளையில் இருந்து விடுபட முயன்றாள். ஆனால் அவளை வாகுவாக இன்னும் இறுக்கியணைத்த அர்ஜுன் “இதுனால இன்னும் எனக்கு ப்ரீ ஃபீல் ஆகும். நாளைக்கு ரெடியா இரு..! நாம் பீச்சிற்கு போக போகிறோம்.” என்றான்.
அவனிடம் இருந்து விடுபட அதிரா திமிறவும், அவனே விடுவித்தான்.
அர்ஜுன் முதலில் கூறியதிற்கு தற்பொழுது கூறியதிற்கு முரணாக இருக்கவும், அதிரா சிறு சந்தேகத்துடன் “நாளைக்கு.. நான் அகிலா கூட.. இந்தியாவிற்கு..” என்றுத் திணறினாள்.
அவள் கூறி முடிப்பதற்குள்.. அர்ஜுன் “கேன்சல்!” என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தான்.
உடனே சட்டென்ற மூண்ட கோபத்தில்.. “என் வாழ்க்கையில் நடக்கிறதுக்கு நான்தான் முடிவு எடுக்கணும். நீங்க இல்லை. அந்த உரிமையை நான் உங்களுக்கு நான் இன்னும் தரலை.” என்றாள்.
கோபத்தில் மூக்கு சிவக்க நின்றிருந்தவளைப் பார்த்தவன், சட்டென்று குனிந்து அவளது மூக்கின் நுனியில் முத்தமிட்டு நிமிர்ந்து “நான் எப்போ உன்னை லவ் செய்ய ஆரம்பித்தேனோ.. அப்பவே.. அந்த ரைட்ஸ் எனக்கு வந்திருச்சு..” என்றான்.
‘அர்ஜுன் கொஞ்சம் டேன்ஞ்சரஸ்’ என்றுக் கூறியது தற்பொழுது வேறுவிதமாக அதிராவிற்கு புரிந்தது.
தனது மூக்கை அழுத்த துடைத்துவிட்டு அதிரா “ஒகே! நீீங்க வருத்தப்படுவீங்க.. ஏமாற்றமா உணர்வீங்கனு உங்களைச் சாமாதனப்படுத்த இத்தனை நேரம்.. உங்க கிட்ட விளக்கம் கொடுத்துட்டு இருந்தேன். அது தப்பா போச்சுனு நினைக்கிறேன். நான் கொஞ்சம் ஸ்ட்ரிட்டா பேசியிருக்கணும். சின்ன பீரியட் தான் நம்ம லவ்! அதில் உண்மை இருந்துச்சு! ஆனா ஆயுள் இல்லாம போச்சு! பை மிஸ்டர் அர்ஜுன்! இது உங்க வீடு தான் என்றாலும்.. இது எனக்காக ஒதுக்கப்பட்ட ரூம்! நீங்க கொஞ்சம் வெளியே போறீங்களா..” என்று மாறாத கோபத்துடன் கூறினாள்.
அர்ஜுன் “ஓ மை காட்!” என்று தலையில் கையை வைத்துக் கொண்டான்.
பின் அர்ஜுன் “நீ என்னை கோபமா திட்டிட்டு இருக்கே! ஆனா நான் உன்னை இரசிச்சுட்டு இருக்கேன். எனக்கு என்னாச்சு! என்னை பைத்தியம் பண்ணிட்டே நீ!” என்றுச் சிரித்தான்.
அதைக் கேட்டு அதிராவிற்கு ஆத்திரம் வந்தாலும்.. மாலதியும் அகிலாவும் எச்சரித்து.. மனதில் சிறு கிலியை ஏற்படுத்தியது. அவள் அங்கிருந்து சென்றுவிடுவது நல்லது என்று அவளது உள்ளுணர்வு அறிவித்தது. எதுவும் கூறாமல் அமைதியாக அந்த அறையில் இருந்து வெளியேற திரும்பினாள்.
ஆனால் பின்னால் இருந்து அணைத்தவனின் இறுக்கமான பிடியில்.. அதிரா பயத்தையும்.. மயக்கத்தையும் ஒருங்கே உணர்ந்தாள். அவனது கரங்களை அகற்ற முயன்ற அவளது முயற்சி தோல்வியே தழுவியது.
“அதி..” என்று கிறக்கமான குரலில் அவளது காதில் அழுத்த முத்தமிட்டவனின்.. உதடுகள் கீழே இறங்கி அவளது கழுத்து வளைவில் பதிந்தது.
அதிராவின் நாடிகளில் மின்சாரம் பாய்ந்தது.. இந்நிலை அனுபவித்த மற்ற இரண்டு நிகழ்வுகள் அவளது நினைவிற்கு வந்தது. அடுத்து என்ன நடக்கும் என்று எச்சரிக்கை அவளை தட்டியெழுப்பவும்.. “அர்ஜுன் இது சரியில்லை விடுங்க..” என்று திமிறினாள். ஆனால் அவளது குரல் அவனது காதில் விழவில்லை.
அப்பொழுது அந்த கதவு திறந்தது.
திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்த அதிரா அங்கு அர்ஜுனின் தோழி ரிஷிதா திகைப்புடன் நிற்பதை கண்டு மேலும் அதிர்ந்தாள். அர்ஜுனும் சங்கடப்பட்டு விட்டு விடுவான்.. என்று நினைத்தாள். ஆனால் அவனோ அவளை விடாது மட்டுமின்றி.. ரிஷிதாவிடம் “ஒகே தெரியாம கதவை திறந்திட்டே! கதவை சாத்திட்டு போயிடு..” என்று அசட்டையாக கூறினான்.
அதைக் கேட்டு ரிஷிதா அதிர்ச்சியுடன் அறைக்குள் நுழைய முற்படவும், சட்டென்று ஒரு கரத்தால் அதிராவை பற்றிக் கொண்டு இரண்டு எட்டுக்கள் வைத்து கதவை அடைந்த அர்ஜுன் “டு வாட் ஐ சே!” என்ற உறுமலுடன் கதவை சாத்தியவன், அந்த கதவில் அதிராவை சாய்த்தவாறு நிற்க வைத்து.. அவளது இரு பக்கமும் கரங்களை ஊன்றி நின்றவன், சற்றுமுன் உறுமியதிற்கு சற்றும் பொருந்தாமல் மென்மையுடன் அவளது முகத்தைப் பார்த்தான்.
அதிராவின் பார்வை அவனது முகத்தில் இருந்து அகற்ற முடியவில்லை. திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது அவள் சாய்ந்திருந்த கதவு “அர்ஜுன்” என்ற கத்தலுடன் பலமாக தட்டப்படவும், அதிரா சாய்ந்திருந்த கதவில் இருந்து அகல முயன்றாள். ஆனால் அவளால் ஒரு இன்ச் கூட நகர முடியவில்லை. அவள் அகல முற்படவும், அர்ஜுன் மேலும் நெருங்கினான்.
முன்னால் இருவரின் மூச்சும் ஒன்றுடன் ஒன்று கலக்கும் நெருக்கத்தில் அவன் நின்றிருக்க.. பின்னால் கதவு பலமாக தட்டப்பட்டு கொண்டிருக்க.. அந்த நிலை மலையுச்சியின் விளிம்பில் நிற்பது போல் அதிராவிற்கு இருந்தது.
அர்ஜுன் “உன்னை யோசிக்க விட்டிருக்க கூடாது அதி! காதல்ல உனக்கு சுதந்திரமும் கொடுத்திருக்க கூடாது.” என்ற அழுத்தமான குரலில் கூறினான்.
தற்பொழுது பின்னால் கேட்ட கதவு தட்டல் சத்தமும் கதவின் ஆட்டமும் நின்றது.
அதை அதிரா உணர்ந்த அடுத்த கணம்.. அவள் அவனது கரத்தில் இருந்தாள். அவளை இலகுவாக தூக்கி கொண்டு போனவன், அங்கிருந்த படுக்கையில் போட்டவன், சற்றும் தாமதியாது.. அவளை எழ விடாமல் செய்து.. அவளது இதழ்களில் முற்றுகையிட்டான்.
ஆசிரியர் பேசுகிறேன்:
“ஹெ மழையே நீ பெயாதே! நான் நனைஞ்சுருவேன்னு..” மழை கிட்ட வாக்குவாதம் செய்ய முடியுமா.. ஹா! ஹா! அதுவரை தூறலா தூளிட்டு இருந்த அந்த திமிர் பிடிச்ச மழை.. அடைமழையாக மாறி.. அவளை முழுவதுமாக ஒரு நொடியில் நனைக்க தான் தோன்றும்.. நனைத்து அவள் மீது தனது ஆதிக்கத்தையும் காட்டும்.”
@vidhushini ஐய் ஹிரித்திக் 🙂
அவள் உணரும் போது.. அந்த அடைமழை ஓயாமல் இருந்தால் சரி
- 1 Forums
- 18 Topics
- 36 Posts
- 0 Online
- 28 Members