Forum

Notifications
Clear all

தீ 18

3 Posts
2 Users
2 Reactions
219 Views
rajianbu
(@rajianbu)
Admin Admin
Joined: 8 months ago
Posts: 33
Topic starter  

அத்தியாயம் 18

 

 

விடியற்காலை பொழுதில் அமைதியாக சீரற்ற சாலையில் வாகனங்கள் பயணித்து கொண்டிருந்த பொழுது திடுமென.. பெரும் குலுக்கலுடன் நின்றன. அனைவரும் அச்சத்துடன் இருக்கையில் இருந்து இறங்கி கீழே உட்கார்ந்து கொண்டார்கள். அவர்கள் பயந்தது போலவே அடுத்து‌‌.. அவர்களது வாகனங்களை நோக்கி துப்பாக்கி சூடு நடந்தது. 

 

அனைவரும் பயத்தில் அலறினார்கள். கரண் நவ்யாவின் தலையை தனது நெஞ்சோடு அழுத்தி.. குனிந்திருந்தான்.

 

பின் துப்பாக்கி சூடு நின்றுவிட.. சில கணங்கள் மாயன அமைதி ஏற்பட்டது. அடுத்து கேட்ட ஷூக்களின் சத்தம் என்ன நடக்க போகிறது என்றுத் தெரிந்து விட.. அனைவரும் அச்சத்துடன் காத்திருந்தனர். 

 

துப்பாக்கி ஏந்திய உக்ரைன் நாட்டு இராணுவ வீரர்கள் உள்ளே நுழைந்தனர். அனைவரும் இருக்கையில் இருந்து கீழே இருப்பதைப் பார்த்து.. தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியினால் குனிந்திருந்தவர்களின் பின்னந்தலையில் அடித்தான். வலியினால் நிமிர்ந்தவர்கள் முகத்தில் அடி வாங்கினார்கள். அதைப் பார்த்து சிலர் தலை நிமிராமல் அமர்ந்திருந்தனர். வரிசையாக அடித்து கொண்டு வந்தவன், குனிந்திருந்த கரணின் தலையிலும் அடித்தான்.

 

அடித்ததில் ஏற்பட்ட வலியை பொறுத்துக் கொண்ட கரண்.. அவனது மார்பில் வைத்து அடைக்காத்திருந்த நவ்யாவிற்கு சிறு உரசல் கூட விழாது காத்தான்.

 

பின் அனைவரையும் கையை உயர்த்தியவாறு பேருந்தில் இருந்து இறங்க கூறினான். அனைவரும் நடுங்கியவாறு இறங்கினார்கள்.. வெளியே நின்றிருந்தவன், இறங்கியவர்களை இழுத்து போட்டான். அதனால் தடுமாறியவர்களை.. அடுத்து நின்றிருந்தவன், கரங்களை பின்னந்தலையில் கட்டியவாறு வரிசையாக நிற்க வைத்தான். 

 

நவ்யாவை இழுத்து அதுபோல் நிற்க வைத்தத்தை தடுக்க வழியில்லாது.. கரண் நின்றிருந்தான். முடிந்தவரை அவளுடன் உரசி நின்று தான் இருக்கிறேன்.. என்று அவளுக்கு உணர்த்தினான்.

 

பின்னந்தலையில் கரங்களைக் கட்டிக் கொண்டு.. வரிசையாக நின்றிருந்தவர்களை ஒருவன் நோட்டம் விட்டவாறு வந்தான். அவனிடம் சர்க்கஸின் முதலாளி “நாங்கள் சர்க்கஸ் அமைத்து மக்களை மகிழ்ப்பவர்கள்.. உங்க நாட்டுக்கு.. உங்களை சந்தோஷப்படுத்த தான் வந்தோம். நாங்க அப்பாவிகள் எங்களை விட்டுருங்க! உங்க நாட்டு மேலே தாக்குதல் செய்தது.. இராணுவத்தினர் தானே நாங்க என்ன செய்தோம்.” என்று கதறினான்.

 

உடனே ஆத்திரம் கொண்ட அவன் “நீங்க அப்பாவிகள் என்றால்.. இவங்க யார்..” என்று அவனை சட்டையை பற்றி தரதரவென்று அங்கிருந்த குன்றின் மேல் ஏறிக் காட்டினான். அங்கு கண்ட காட்சியை கண்டு “ஜீசஸ்!” என்று கதறியவாறு மண்டியிட்டு அமர்ந்துவிட்டான். அவனின் கதறல் கேட்டு நிமிர்ந்தவர்களை.. அவர்களுக்கு பின்னால் நின்றிருந்தவர்கள்.. துப்பாக்கி கொண்டு தாக்கினார்கள்.

 

அந்த குன்றுக்கு அடுத்து இருந்த பள்ளத்தாக்கில் பல உயிரற்ற உடல்கள் ஆடைகளின்றி.. உடல்களில் காயத்துடன் தாறுமாறாக கிடந்தன. அதற்கு அடுத்து ஒரு பேருந்து ஒன்று இருந்தது. அதில் கார்கீவ் நகரத்தின் பிரபலமான கல்லூரி பெயர் இரஷ்யன் மொழியில் எழுதப்பட்ட பேனர் ஒன்று இருந்தது.

 

அந்த இராணுவ வீரன் அதைச் சுட்டிக்காட்டி “அவங்களும் அப்பாவி மாணவர்கள் தான்! உங்க நாட்டுக்கு.. சுற்றுலா படிப்பிற்காக வந்துட்டு்.. சொந்த நாட்டிற்கு திரும்பிட்டு இருந்திருக்காங்க.. அவங்களை உங்க நாட்டு ஆட்கள் என்ன செய்திருக்காங்க என்றுப் பார்த்தியா! அதோட வலி அவங்களுக்கு தெரிய வேண்டாமா!” என்றுக் கத்தியவன், சட்டென்று அவனது நெற்றியில் துப்பாக்கியால் சுட்டான். அவன் சுருண்டு விழுந்தான்.

 

துப்பாக்கி சத்தத்தில் அனைவரும் நிமிர்ந்து பார்த்த பொழுது.. அவனது உயிர் அவனது உடலை விட்டுப் பிரிந்திருந்தது. அதைப் பார்த்து அனைவரும் அதிர்ந்து நின்றார்கள்.

 

அந்த இராணுவ வீரன் மற்றவர்களையும் அங்கே அழைத்துக் கொண்டு வரக் கூறினான். பின்னால் இருந்த துப்பாக்கியால் உந்தி தள்ளவும், அனைவரும் திகிலுடன் மெல்ல அந்த குன்றில் ஏறினார்கள். அங்கு கண்டதைக் காண முடியாமல் கண்களை மூடிக் கொண்டார்கள். சிலர் அழுதவாறு அமர்ந்துவிட்டார்கள். அதிர்ச்சியுடன் நின்ற கரண்.. ஓக்கரிக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான். அங்கு நவ்யா ஓக்கரித்தவாறு அமர்ந்துவிட.. அவளைத் தாங்கினான். ஆனால்.. அவனது தோளில் துப்பாக்கியால் அடிக்கவும், தரையில் விழுந்தான்.

 

தரையில் விழுந்தவனை இறுகி அணைத்த நவ்யா.. “என்னை இப்படியே கொன்றுடு கரண்! இவங்க கையில் சிக்க வேண்டாம்.” என்று கதறினாள். தன்னைக் கட்டிக் கொண்டவளை இறுக அணைத்த கரணின் மனமும் கதறியது.

 

அனைவரின் கவனமும்.. அவர்களின் இருவர் மீது திரும்பியது. அவர்களுக்கு அருகில் இருந்த இராணுவ வீரன்.. அவர்களை எட்டி உதைத்தான். அந்த உதையை வாங்கிக் கொண்ட கரண் “ப்ளீஸ்! அவங்க செய்த கொடூரத்தை நீங்களும் செய்யாதீங்க! எங்க எல்லாரையும் விட்டுருங்க..” என்றுக் கெஞ்சினான்.

 

அதற்கு அவர்கள் பலமாக சிரித்தார்கள், கரண் மீண்டும் பலத்த அடி வாங்கினான்.

 

பின் அவர்களை தலையை நிமிராமல் குனிந்தவாறு.. வரிசையாக அழைத்துக் கொண்டு.. அடுத்து இருந்த பள்ளத்தாக்கிற்கு அழைத்து சென்றார்கள்.

 

“கரண்” என்று நவ்யா கேவினாள்.

 

அவளுக்கு பின்னால் நெருங்கி வந்துக் கொண்டிருந்த கரண் “நவி! இப்போதைக்கு அவங்க அட்டென்ஷனை உன் பக்கம் திருப்பற மாதிரி எதையும் செய்திராதே! முகத்துல எந்த ரியாக்ஷனும் காட்டாதே! ப்ளீஸ் அழுகையை நிறுத்து..” என்றுக் கிசுகிசுத்தான்.

 

அழுகையை அடக்க முயற்சி செய்த நவ்யாவினால்.. அதைச் செயலாற்ற முடியவில்லை. அவளது நிலைமை கரணுக்கு நன்கு புரிந்தது. 

 

துப்பாக்கி முனையில் வரிசையாக கொண்டு செல்லப்பட்டவர்கள்.. ஒரிடத்தில் மண்டியிட்டு அமர வைத்தார்கள். பின் அவர்களில் இருந்த பெண்களை மட்டும் தனியாக நிற்க கூறினார்கள். அனைவரும் திடுக்கிட்டார்கள். 

 

அப்பொழுது.. திடுமென நின்றுக் கொண்டிருந்த.. இராணுவ வீரர் ஒருவர் சுருண்டு விழுந்தான். அதைத் தொடர்ந்து அங்கு இருந்த சிலரும்.. துப்பாக்கி குண்டு பாய்ந்து சிலரும் உயிரற்ற உடலாய் தரையில் விழுந்தார்கள்.

 

இரஷ்யன் படையினர்.. உக்ரைன் படையினரை தாக்குவது புரிந்து.. கரண் அனைவரையும் தரையோடு படுக்க கூறினான். 

 

இரு படையினரும் துப்பாக்கி சூடு நடத்திக் கொண்டார்கள். அருகில் காதுகளை இறுக்க மூடிப் படுத்திருந்த.. நவ்யாவை கரண் தன்னுடன் இழுத்து அவளை முடிந்தவரை.. முழுவதும் மறைத்தவாறு படுத்தான். அவனது பயம் சரி என்பது போல்.. அருகில் படுத்து இருந்தவரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர் அலறினார்.

 

சிறிது நேரத்தில்.. துப்பாக்கி குண்டுகளுக்கு அங்கிருந்த உக்ரைன் இராணுவ வீரர்கள் பலியானார்கள். ஆனால் பள்ளத்தாக்கை தாண்டியிருந்த பகுதியில் இருந்த உக்ரைன் வீரர்களுக்கும்.. இரஷ்ய வீரர்களும் தொடர்ந்து சண்டை நடந்துக் கொண்டிருந்ததால்.. துப்பாக்கி குண்டின் சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. ஆனாலும் இவர்கள் அசைய பயந்தவர்களாய் அப்படியே படுத்திருந்தார்கள். அருகில் ஷுக்களின் சத்தம் கேட்டதும்.. மெல்ல தலையை நிமிர்த்தி பார்த்தப் பொழுது.. இரஷ்ய இராணுவ படை வீரர்கள்.. நான்கு பேர்.. துப்பாக்கியுடன் அவர்களை நோக்கி ஓடி வந்தவர்கள்.. படுத்திருந்தவர்களை பார்த்து துப்பாக்கியை நீட்டி குறி வைத்தவாறு நின்றார்கள்.

 

உடனே ஒருவன் பயத்துடன் இரு கைகளையும் உயர்த்தியவாறு எழுந்த.. “எங்களை சுட்டு விடாதீர்கள்! நாங்களும் இரஷ்யர்கள் தான்!” என்றான்.

 

அதைக் கேட்ட அவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் சிரித்துவிட்டு “அதனால் என்ன! உங்களை உக்ரைன் படை வீரர்கள் தான் கொன்றாங்க! என்றுச் சொல்லி விடுவோம். இந்த பெண்களை அவங்க தான் கேங் ரேப் செய்தாங்க என்றும் சொல்லி விடுவோம்.” என்றுச் சிரித்தவன், இறந்து கிடந்த இராணுவ வீரனின் துப்பாக்கியை எடுக்க குனிந்தான்.

 

அவன் கூறியதைக் கேட்டு ஆத்திரம் கொண்ட கரண் சட்டென்று தனக்கு அருகே குனிந்தான் கையில் இருந்த துப்பாக்கியை பறித்து.. ரீவ்விலை அழுத்தினான். அவன் குண்டு அவனது கழுத்துப் பகுதியில் பாய்ந்து சுருண்டு விழுந்தான். கரணின் ஆத்திரம் அடங்காது, தொடர்ந்து தன்போக்கில் சுட்டான். அதில் பின்னால் இருந்தவர்களின் ஒருவனின் தலையில் சரியாக குண்டு பாய்ந்து.. அவனும் இறந்து விழுந்தான். அடுத்து இருந்தவனின் தோளில் குண்டு பாய அவன் தடுமாறி விழுந்தான். நான்காவதாக இருந்த இராணுவ வீரன் கரணை சுட எதானிக்கையில்.. அவன் மீது சர்க்கஸ் ஊழியர்கள் இருவர் பிடித்து அழுத்தி.. அவனை வீழ்த்தி அசையாமல் இருக்க செய்தார்கள். இன்னொரு சர்க்கஸ் ஆள் எழுந்து வந்து அந்த இராணுவ வீரனிடம் இருந்த துப்பாக்கியை பறித்து அதைக் கொண்டு அவனைச் சுட்டான். 

 

இரஷ்யன் மற்றும் உக்ரைன் இராணுவ வீரர்களின் உயிரற்ற உடல் தாறுமாறாக சுற்றிலும் கிடக்க.. அவர்களுக்கு நடுவே இன்னும் அச்சத்துடன் அவர்கள் அமர்ந்திருந்தார்கள்.

 

காலில் குண்டு பாய்ந்தவனின் குருதியை நவ்யாவுடன் சேர்ந்து இருவர் நிறுத்த முயன்றுக் கொண்டிருக்க.. கையில் இருந்த துப்பாக்கியை வெறித்த பார்த்தபடி ஒருவனும்.. மற்றவர்கள் பேயறைந்தவர்கள் போன்று அமர்ந்திருந்தார்கள். 

 

மெல்ல எழுந்து சுற்றிலும் பார்த்த கரண் அங்கிருந்தவர்களிடம் “கய்ஸ்! நாம எஸ்கேப் ஆக.. இதுதான் சரியான நேரம்! அங்கே இரு நாட்டு ஆர்மிஸும் சண்டை போட்டுட்டு இருக்கிறாங்க! நாம இந்த வழியா தப்பிச்சு போயிரலாம்.” என்றான்.

 

அப்பொழுது அந்த பெரியவர் “இங்கிருந்து தப்பிச்சு.. போகும் போது.. இன்னொருத்தங்க கிட்ட மாட்டிக்கிட்ட என்ன செய்ய?” என்றுக் கேட்டார். அதற்கு கரண் “இப்போ காப்பாற்றிய அதிர்ஷ்டமும்.. நாம் தைரியமும் அப்பவும் காப்பாற்றும்! அந்த நம்பிக்கையோட எழுந்து வாங்க..” என்றான்.

 

துப்பாக்கியை கையில் வைத்திருந்தவன் “இதுவும் நம்மை காப்பாற்றும்..” என்றான்.

 

தலையை குனிந்தவாறு அமர்ந்திருந்த நவ்யாவின் கரத்தை பற்றிய எழுப்பிய கரண் “நவி கமான்! நாம இப்போ நல்லாயிருக்கோம். புஸ் யுவர்செல்ஃப்! மற்ற ஆர்மிஸ் வரதுக்குள்ள நாம் இப்போ இங்கிருந்து போகணும்.” என்றான்.

 

நவ்யா “கரண்” என்று மெல்லிய குரலில் அழைத்து “நீ இன்னொரு கொலையும் செய்துட்டே..” என்றாள்.

 

அதற்கு ஆம் என்று தலையை ஆட்டிய கரண் “ஆமாம் நவி! நான் இரண்டு பேரோட உயிரை எடுத்துட்டேன். இதுவும் கொலை லிஸ்ட்டில் தான் சேரும். நியாயத்தின் கணக்கில் சேராது. அதுவும் உன்னை மாதிரி உயிரை காக்கிற டாக்டர் கிட்ட அது நடக்காது!” என்று கசந்த குரலில் கூறியவன், அவளது கரம் பற்றி அழைத்துச் சென்றான்.

 

துப்பாக்கி சத்தம் கேட்ட எதிர் திசையில் அனைவரும் நான்கு நான்கு பேராக சுற்றிலும் பார்த்தவாறு சென்றார்கள். குண்டின் சத்தம் கேட்காத தொலைவிற்கு வந்த பின்பே.. அவர்களுக்கு சிறு நிம்மதி ஏற்பட்டது. ஆனால் இது தற்காலிக நிம்மதி என்று அவர்களுக்கு தெரியும். ஆனால் உயிர் பிழைக்க இருக்கும்.. சிறு வழியை விடக் கூடாது.. முயன்று பார்த்து விடலாம்.. என்று கரண் அவர்களுக்கு ஊக்கமளித்தான். அனைவரையும் புதர்கள் மண்டி கிடந்த இடத்தின் வழியாக பதுங்கி வருமாறு கரண் கூறினான். அதன்படியே அவர்களது பயணம் தொடர்ந்தது. 

 

நடுவில் காலில் குண்டு பாய்ந்தவரின் காலை ஆராய்ந்த நவ்யா “தற்பொழுது.. இவரது காலில் இருந்த குண்டை அகற்றினால் தான் குருதி அதிகமாக வெளியேற உயிருக்கு ஆபத்து ஏற்படும்..” என்றவள், தற்போதைக்கு காலில் பாய்ந்த குண்டு.. ஆழமாக செல்லாதவாறு இருபக்கமும் துணி கொண்டு இறுக்க கட்டினாள். நடக்க இயலாதவரை.. இருவர் தூக்கிக் கொண்டு வந்தார்கள். இரு நாட்களாக சரியாக உண்ணாமல் வெறும் நீரை மட்டும் பருகி வந்தவர்கள்.. அதுவும் இன்று காலையில் இருந்து அந்த நீரை கூடப் பருகவில்லை. மதிய வெயிலும் சேர்ந்துக் கொள்ளவும், மிகவும் சோர்ந்தவர்களாய் நடையை தொடர்ந்தார்கள். நவ்யாவை உடல் முழுவதையும் தன் மேல் சாய்த்துக் கொண்டு கரண் கிட்டத்தட்ட அவளைத் தூக்கி கொண்டு சென்றான்.

 

அவர்களது உள்ளத்தை விட.. மனம் தான் அதிகம் சோர்ந்து போயிருந்தது. உக்ரைன் இராணுவத்திடம் மாட்டிக் கொண்டது.. அங்கு அவர்கள் கண்ட கோரக் காட்சி.. அவர்களின் முதலாளியின் உயிர் நொடி பொழுதில் போனது.. அவர்களையும்.. அதைப் போல் கொடுமைப்படுத்தி கொல்வதாக மிரட்டியது, அப்பொழுது நடந்த இரஷ்ய படையினரின் தாக்குதல், அவர்களும் அவர்களை கொன்று அந்த பழியை உக்ரைன் படையின் மேல் போடுவோம் என்றுச் சிரித்தது.. அவர்களை கொன்று தப்பித்து வந்துக் கொண்டிருப்பது என்று நடந்த பல்வேறு நிகழ்வுகளால்.. உணர்வுகள் மரத்தும்.. நம்ப முடியாமல்.. மனம் சோர்ந்தும் காணப்பட்டார்கள். இன்னும்.. அவர்கள்.. இந்த யுத்தத்தின் நடுவே உயிர் பிழைப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை. எந்த திசையில் இருந்து யார் எமனாக வருவார்கள்.. என்ற அச்சத்துடன் நடந்தார்கள். இந்த யுத்த களத்தில் இருந்து தப்பிக்க எதாவது வழி கிட்டாத என்ற ஏக்கத்துடனும் நடந்தார்கள்.

 

சத்தம் எழுப்பாமல் மெதுவாக நடந்துக் கொண்டிருந்த பொழுது ஜீப் டயரின் சத்தத்தில் அனைவரும் உறைந்து நின்றார்கள். நின்ற இடத்திலேயே அவர்களை அமருமாறு சைகை செய்த கரண் மெல்ல புதரை விலக்கி எட்டிப் பார்த்தான்.

 

அங்கு இரஷ்ய படையின் நான்கு வாகனங்கள் வந்து கொண்டிருந்தன. மூச்சு விடும் சத்தத்தை கூட அடக்கி கொண்டு அவர்கள் அந்த சாலையை கடந்து போவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஜீப்பில் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்ததும்.. அவனது புருவங்கள் மேலேறின. கண்கள் பளபளத்தன. ஆனால் இச்சமயத்தில் அந்த வாகனங்களில் இருப்பவர்களை எதிர்கொள்வது தற்கொலைக்கு சமம்! ஆனால் கிடைத்த வழியை அவன் தவறவிட மனமில்லை. 

 

எனவே அனைவரையும் அங்கேயே அமர்ந்திருக்க கூறியவன்.. தனது துப்பாக்கியையும் அருகில் இருந்தவனிடம் கொடுத்தான். பின் அருகில் இருந்த நவ்யாவின் நெற்றியில் பட்டும் படாமல்.. சிறு முத்தமிட்டவன்.. சாலையை நோக்கி ஓடினான். அதைப் பார்த்து அனைவரும் திடுக்கிட்டார்கள்.‌ ஆனால் எவரும் எழுந்து அவனைத் தடுக்கவில்லை.

 

வேகமாக சாலைக்கு நடுவில் சென்றவன்.. வந்துக் கொண்டிருந்த வாகனங்களை நோக்கி இரு கரங்களையும் உயர்த்தி “ஸ்டாப்” என்றுக் கத்தியவாறு குதித்தான்.

 

ஆனால் அடுத்த நிமிடம் அவனது முன் வந்த நவ்யா அவனது கையை பிடித்து இழுத்து “வா கரண்..” என்றாள்.

 

நவ்யா தன் பின்னாலேயே ஓடி வருவாள் எ

ன்று‌ எதிர்பாராத கரண் அதிர்ந்தான். வாகனங்கள் வேறு அவர்களைப் பார்த்தும் வேகத்தை குறைத்தது.

 

 


This topic was modified 5 days ago by rajianbu

   
Quote
(@sumathi-mathi)
Active Member
Joined: 8 months ago
Posts: 13
 

Wow awesome 



   
rajianbu reacted
ReplyQuote
rajianbu
(@rajianbu)
Admin Admin
Joined: 8 months ago
Posts: 33
Topic starter  

@sumathi-mathi thanks



   
ReplyQuote
Share: