Forum

Notifications
Clear all

தீ 17

3 Posts
2 Users
2 Reactions
171 Views
rajianbu
(@rajianbu)
Admin Admin
Joined: 8 months ago
Posts: 33
Topic starter  

அத்தியாயம்‌ 17

 

கரண் நவ்யாவுடன் கண்டெய்னருக்கு அருகே சென்றான். ஓட்டுநர் இருக்கையில் இருந்தவன், தனது தலையை மட்டும் நீட்டி “நாங்கள் தற்பொழுது இரஷ்யாவிற்கு செல்கிறோம். நீங்களும் அங்கே வருகிறீர்களா!” என்றுக் கேட்டான்.

 

கரண் கார்கிவ் நகரத்தில் நிலவும் நிலைமையை பற்றிக் கேட்டான். அதற்கு.. அவன் “அங்கு முதலில் இரஷ்யப்படைகள் சுற்றி வளைத்துவிட்டது. பின்னர் உக்ரைன் நாட்டு படையினர்.. சிறிது சிறிதாக.. இரஷ்ய படையை துரத்தி வருகிறார்கள். அவர்களும் சிறிது சிறிதாக பின் வாங்குகிறார்கள். அதனால் எல்லை மற்றும் நகரத்தில் பயங்கரமான நிலை நிலவுகிறது. இரஷ்ய படைகள் ஆங்காங்கு தங்கி.. துரத்தி வரும் உக்ரைன் படையுடன் சண்டையிட்டு கொண்டிருக்கிறார்கள். நீங்கள் தற்பொழுது அங்கு செல்வது ஆபத்து!” என்றுக் கூறினான்.

 

அதைக் கேட்டு கரணின் முகத்தில் திரை விழுந்தது. தற்பொழுது.. பாதுகாப்பாக தப்பிப்பது தான் முக்கியம் என்றுத் தோன்றவும், தாங்களும் அவர்களுடன் வருவதாக கூறினான். அவனும் அவர்களை ஏறிக் கொள்ள சொன்னான்.

 

முதலில்.. ஒரு பெரிய கண்டெய்னர் இருந்தது. கரண் நவ்யாவின் கரத்தை பற்றியவாறு அதைத் தாண்டி வேகமாக நடந்தான். அடுத்து ஒரு பெரிய பஸ் இருந்தது. அதில் ஆட்கள் சரியாக இருப்பதால்.. அடுத்து இருந்த மினி பஸ்ஸில் வரக் கூறினார்கள். 

 

ஆனால் அவர்களுக்கு இருவரின் மீதும்.. சிறு சந்தேகம்.. உண்டு. அதனால் அவர்களுடன் அமர அனுமதிக்கவில்லை என்று கரணுக்கு தெரிந்தது. இந்த மாதிரி சூழ்நிலையில்.. அவர்கள் கவனமாக இருப்பதும் சரிதான்.. எனவே அவர்கள் கூறியபடி.. அடுத்து இருந்த மினி பஸ்ஸில் ஏறினார்கள். அந்த மினி பஸ்ஸிற்கு பின்.. ஒரு பெரிய கண்டெய்ன்னர் வந்தது. 

 

அந்த மினி பஸ்ஸில் சில உடைமைகளோடு நான்கு ஆண்களும்.. இரு பெண்களும் இருந்தார்கள். கரண் அவர்களுக்கு நன்றி.. கூறிவிட்டு ஓரத்தில் சென்று முதலில் நவ்யாவை அமர வைத்துவிட்டு அவனும் அமர்ந்துக் கொண்டான்.

 

பின் மெல்ல அவர்கள் பேச்சு கொடுத்தார்கள். அவர்களிடம் தங்களை கணவன் மனைவி என்று அறிமுகப்படுத்திக் கொண்டான். சுற்றுலாவிற்கு வந்த இடத்தில்.. மாட்டிக் கொண்டதாக பொய்யுரைத்தான். தான் பேசுவது புரியாது பார்த்துக் கொண்டிருந்த நவ்யாவிடமும்.. மொழிப்பெயர்த்து கூறினான்.

 

அதைக் கேட்டு குதுகலமான நவ்யா “ஹாய் ஹஸ்பென்ட்..” என்று அவனது தோளைத் தன் தோளால் இடித்தாள். அவளது முகத்தில் இருந்த சிரிப்பு அவனையும் தொற்றிக் கொள்ள.. அவளது தோளில் உரிமையுடன் கையைப் போட்டுக் கொண்டு.. அவளைத் தன்னுடன் இறுக்கிக் கொண்டான்.

 

அவர்கள் இருவரையும் பார்த்த மற்றவர்களின் முகத்திலும்.. புன்னகை மலர்ந்தது. அதன்பின் இலகுவாக அவர்கள் பேசியவாறு வந்தார்கள். 

 

செல்ஃபோன் யுகமாகி விட்ட இந்த காலத்தில் இவர்களது சர்க்கஸை யாரும் பார்ப்பதில்லை.. என்றும் ஆனாலும் விரும்பி பார்ப்பவர்களுக்காக.. கிராமம் கிராமமாக சென்று.. அங்கு பத்து நாட்கள் கூடாரம் போட்டு.. சாகசம் செய்து வருகிறோம். முதலில் போன்று விலங்குகள் அனுமதிக்கப்படாததால்.. அவர்கள் தான் தங்களது உயிரை பணயம் வைத்து சாகசம் செய்கிறார்கள் என்றனர். அதைப் பார்க்க வந்த மக்களிடம் பணம் வசூலித்து.. நாங்கள்.. இருபது பேரும் வீட்டில் காத்திருக்கும் அவர்களது குடும்பத்தினருடன் வாழ்க்கையை ஓட்டி வருவதாக கூறினர். அவர்களது வாழ்க்கை பயணத்தை ஓட்ட.. நாடு விட்டு நாடு தாண்டி வந்த.. இந்த நேரத்தில் இங்கு வந்து சிக்கிக் கொண்டதாக கூறினர்.

 

அதற்கு கரண் இரஷ்யன் மொழியில் “உங்க பேமலி மெம்பர்ஸை கூட்டிட்டு வர பர்மிஷன் இல்லையா!” என்றுக் கேட்டான். 

 

அதில் ஒருவன் “எங்களுடைய பயணச்செலவு சாப்பாட்டு செலவிற்கே கட்டுப்படி ஆவது இல்லை. பயணச்செலவு.. இதர செலவு போக மீதியை தான் பகிர்ந்து சம்பளமாக கொடுப்பவர்கள்.. இதில் எப்படி அவர்களையும் எங்களோடு கூட்டிக் கொண்டு வருவது. ஆனால் அவர்களும் இந்த சர்க்கஸில் ஒரு அங்கமாக இருந்தால்.. கூட்டிக் கொண்டு வரலாம்.” என்றவன், தொடர்ந்து “என் வைஃப்பை பிரிந்திருக்க மனசில்லாம.. அவ நல்லா கூடாரம் கட்டுவா.. என்று அவளுக்கு நான் பிராக்டீஸ் கொடுத்து கூட்டிட்டு வந்துட்டேன்.” என்று தன் மனைவியை பார்த்து கண்ணடிக்கவும், அங்கு சிரிப்பலை பரவியது.

 

அவர்களில் இருந்த முதியவர் ஒருவர் அவரது சர்க்கஸ் அனுபவங்களைப் பற்றிக் கூறிக் கொண்டு வந்தார். அப்பொழுது திடுமென.. சென்றுக் கொண்டிருந்த வண்டி நின்றது. இரவு வேளை என்பதால்.. சன்னல் திரைகளை இழுத்து விட்டிருந்தனர். தற்பொழுது வண்டி நிற்கவும், அனைவரும் திடுக்கிட்டனர். அவர்களின் ஒருவன் திரை விலக்க முற்படுகையில்.. கரண் விரைந்து அவனைத் தடுத்தான். அவனுக்கும் நிலைமையின் விபரீதம் புரியவும், அமைதியாக இருந்தான். 

 

அவர்கள் பயந்தது போல்.. பஸ்ஸை சுற்றிலும் ஷுக்களின் சத்தம் கேட்டது. பின்னர்.. பஸ்ஸின் கதவு தட்டப்படவும், இதற்கு அமைதியாக இருக்க முடியாது என்றுப் பயத்துடன் ஒருவன் சென்று திறந்தான். உடனே மூன்று இராணுவ வீரர்கள் அதிரடியாக துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்தார்கள். 

 

அனைவரும் பயந்து எழுந்து நின்றார்கள். நவ்யா பயத்துடன் கரணின் பின் ஒடுங்கி நின்றாள். அவளை ஆதரவாக அணைத்து நின்றான். எதற்கும் கை மறைவாக வைத்திருந்த.. கத்தியை இறுக பிடித்தவன், முன்னால் இருந்த இருவரின் பின்னால் தங்களை மறைத்தவாறு நின்றான். அப்பொழுது தான் அவர்கள் அணிந்திருந்த உடையில் இரஷ்ய கொடி இருப்பதைப் பார்த்தான். சிறு திடம் கொண்டாலும்.. முழுமையாக அவர்களை நம்ப முடியாமல் நின்றான்.

 

இராணுவ வீரர்கள்.. அனைவரையும் பார்த்துவிட்டு வெளியே வாருங்கள் என்று கட்டளையிட்டார்கள். அனைவரும் மெதுவாக இறங்கினார்கள். இராணுவ வீரரை தாண்டி செல்லும் பொழுது.. நவ்யாவின் உடல் நன்றாகவே நடுங்கியது. கரணின் இறுகிய பிடியில் விழாமல் நடந்தாள். 

 

அவர்கள் மட்டுமில்லாது.. முன்னால் சென்றுக் கொண்டிருந்த பஸ்ஸில் இருந்தவர்களும்.. வரிசையாக நின்றிருந்தார்கள். அவர்களுடன் இராணுவ வீரர் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். நவ்யா அவர்கள் பேசுவது புரியாது அச்சத்துடன் கரணை நிமிர்ந்துப் பார்த்தாள். 

 

கரண் ஆதரவாக அவளது கரத்தை இறுக்கிவிட்டு “இந்த நேரத்தில் எதுக்கு ட்ரவல் செய்யறீங்கனு தான் விசாரிச்சுட்டு இருக்கிறாங்க! பயந்துக்காதே நவி! நான் எக்ஸ்பெக்ட் செய்த மாதிரி.. அவங்க நாட்டு.. குரூப் என்கிறதால்.. சுமூகமாக பேசிட்டு இருக்கிறாங்க! நாம் இப்போ செய்ய வேண்டியது அவர்களது கண்ணில் படாமல் இருப்பது தான்!” என்றான்.

 

அவன் பேசியது அவர்களுக்கு கேட்டதோ.. ஒரு இராணுவ வீரன்.. இவர்களது ஆசிய முகசாயலை பார்த்து… சந்தேகத்துடன் இவர்களை நோக்கி வந்தான். 

 

இவர்களிடம் கூறியது போல் தாங்கள் சுற்றுலாவிற்கு வந்த ஜோடிகள் என்றுக் கூற கரண் எதானிக்கும் முன்.. அவர்களுடன் இருந்த பெரியவர் “இவர்கள் இருவரும் இந்தியாவை சேர்ந்தவர்கள் தான்! ஆனால் தங்களுடன் நான்கு வருடங்களாக வேலை செய்கிறார்கள்.” என்றார். 

 

அப்பொழுதும் அவன் சந்தேகம் தீராமல்.. பார்க்கவும், மற்றவர்களும் ஆமாம் என்று அதை ஒத்துக் கொண்டனர். அந்த சர்க்கஸ் குழுவின் முதலாளி முன் வந்து இந்திய நடனம் ஆடுவார்கள் என்றுப் பொய்யுரைத்தார்.

 

இந்திய நடனம் என்றதும்.. அந்த இராணுவ வீரர்களின் முகம் பிரகாசமானது. 

 

 அதில் ஒருவன் இடுப்பை ஆட்டி “பாலிவுட் டான்ஸ்” என்றுவிட்டு இந்தி பாடல் ஒன்றை தவறாக ஆனால் சரியான இராகத்துடன் பாடினான். அதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் சிரித்தார்கள். 

 

 நவ்யா மெல்ல கரணின் பக்கம் சரிந்து “கரண் எனக்கு டான்ஸ் ஆட வராது.” என்றாள்.

 

 கரண் “ஷ்ஷ்! நாம் இந்தியர்களாக இருக்கவும், அவங்க ஏதோ சொல்லி சமாளிச்சு நம்மளைக் காப்பாற்ற பார்க்கிறாங்க! அதைக் கெடுத்துறாதே! அவங்க ஆட ஒண்ணும் சொல்ல மாட்டாங்க..” என்று கிசுகிசுத்தான்.

 

 பின் அந்த இராணுவ குழுவின் தலைவன் போன்று இருப்பவன் உக்ரைன் படைகளும் சுற்றும் இந்த நேரத்தில்.. பயணம் செய்ய வேண்டாம்.. என்று அங்கேயே இரவு தங்க கூறினான். அவர்களது நலனுக்காக சொல்வதால்.. அவர்களும் ஒத்துக் கொண்டார்கள். ஆனால் ஏசி மற்றும் டிவி கொண்ட பஸ்ஸில் அவர்கள் படுத்துக் கொள்வதாக கூறவும்.. சர்க்கஸ் ஊழியர்கள்.. அந்த மலைப் பள்ளதாக்கு பகுதியில் சிறு கூடாரம் அமைத்து படுத்துக் கொண்டனர்.

 

 கரண் மற்றும் நவ்யா திருமணம் செய்துக் கொண்ட தம்பதிகள் என்று அவர்களுக்கு.. ஒருவர் மட்டும் தங்கும் வசதி கொண்ட சிறு கூடாரத்தை கொடுத்தார்கள். கரண் முறுவலுடன் வாங்கிக் கொண்டு விரித்து வைத்தவன்.. சிறு சங்கடத்துடன் நவ்யாவை பார்த்தான். அதில் இருவர் படுத்தால்.. ஒருத்தரை ஒருத்தர் உரசி கொண்டு தான் படுக்க வேண்டும். கரண் நவ்யாவை பார்க்க.. அவளோ அவனது முகத்தை பார்க்க இயலாது எங்கோ பார்த்தாள்.

 

 கரண் சிறுச் சிரிப்புடன் “நைட்.. அதுவும் இந்த சிட்டிவேஷனில் ரொமென்ஸ் எல்லாம் வராது. நாம பாதுகாப்பா ஊர் போய் சேருவோமா.. என்ற பயம் தான் இருக்கும். அதுனால இதையெல்லாம் பெருசா எடுத்துக்காதே!” என்று அவனே சமாதானம் செய்தான்.

 

 அப்பொழுது அந்த சர்க்கஸின் முதலாளி கரணிடம் வந்து.. “என்னை மன்னிச்சுடுங்க! உங்களை எங்க கூட வேலை பார்க்கிறவங்க என்றுச் சொன்னாலும் அவங்க நம்பலை. அதுதான் டான்ஸ் ஆடுகிறவங்க என்றுச் சொல்லிட்டேன். ஆனா இப்போ..” என்றுவிட்டு அடுத்து சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் தயங்கினான்.

 

கரண் “சொல்லுங்க..” என்று ஊக்கவும், அவன் “அவங்களுக்கு கொஞ்சம் என்டர்டெயின்மென்ட் வேண்டுமாம். உங்களை வந்து கொஞ்ச நேரம் ஆடச் சொல்றாங்க!” என்றான்.

 

பின் தொடர்ந்து “ப்ளீஸ்! அவங்க நம்மளை சேஃப்பா இங்கிருந்து இரஷ்ய நாட்டிற்கு அனுப்ப தான் ஹெல்ப் செய்யறாங்க! இதோ.. இப்போ கூட சிலர் இங்கிருந்தாலும்.. பள்ளத்தாக்கை சுற்றி.. சில ஆர்மி மேன் காவல் காத்துட்டு இருக்காங்க! டான்ஸ் தானே ஆடச் சொல்றாங்க.. உங்களுக்கு பிரச்சினை இல்லையே!” என்றுக் கேட்டான்.

 

கரண் முறுவலுடன் “நோ நாட் அட் ஆல்! ஆக்சுவலி ஐ லவ் டு டூ இட்!” என்கவும், அவன் “தேங்க்ஸ்..” என்றுவிட்டு சென்றான்.

 

அவர்கள் பேசுவது புரியாது பார்த்துக் கொண்டிருந்த நவ்யா அவன் கடைசியாக ஆங்கிலத்தில் கூறியதைக் கேட்டு “என்ன செய்ய பிடிக்கும்?” என்று அவனிடம் கேட்டாள்.

 

அதற்கு கரண் மாறாத முறுவலுடன் “நாம் டான்ஸ் ஆடப் போகிறோம்.” என்றான்.

 

நவ்யா திகைப்புடன் “வாட்!” என்கவும், கரண் “வா..” என்று அவளது கரத்தைப் பற்றி அழைத்துச் சென்றான்.

 

அவன் இழுத்த இழுப்பிற்கு சென்றாலும்.. நவ்யா “கரண்! எனக்கு டான்ஸ் ஆட வராது. என் காலேஜ் டேஸில் டான்ஸ் ஆடுகிறேன் என்று பல பல்ப்ஸ் வாங்கி அசடு வழிஞ்சுருக்கேன். நான் வெர்ஸ்ட் டான்ஸர்! இவங்க கண்டுப்பிடிச்சுர போறாங்க..” என்று பயத்துடன் கூறினாள்.

 

அதற்கு கரண் “ஹெ நவி! டொன்ட் டென்ஸ்! நீ என்னை லவ் செய்கிற தானே?” என்றுக் கேட்டான்.

 

நவ்யா “நான் என்ன கேட்டுட்டு இருக்கேன்! நீ என்ன கேட்கிறே!” என்று அலுத்துக் கொண்டாள். 

 

அதற்கு கரண் “ப்ச்! நான் கேட்டதிற்கு பதில் சொல்லு! நீ என்னை லவ் செய்கிறாய் தானே!”

 

“ஆமாம்!”

 

“என்னைப் பார்த்தா.. தானா உன் முகத்துல சந்தோஷமும் சிரிப்பும் வரும் தானே?” 

 

“ஆமாம்!”

 

“நீ முதல்ல என் கூட கனவுல டூயட் ஆடியவ தானே! அப்போ லீரிக்ஸிற்கு ஏற்ற மாதிரி வாயசைச்சு.. எக்ஸ்ப்ரஷன்ஸ் கொண்டு வரவும் தெரியும் தானே?” 

 

நவ்யா குழப்பத்துடன் “ஆமாம்!” என்கவும், கரண் “அவ்வளவுத்தான்! இதுதான் பாலிவுட் டான்ஸ்! சில ஃபாரினர்ஸிற்கு.. இந்தியா என்றால்.. இந்தியும் பாலிவுட் டான்ஸும் தான் தெரியுது. அதை நார்த்இண்டியா சௌத்இண்டியாவை அடக்கி சாதித்த விசயம் பிப்டி பர்சென்டேஜ் என்றால்.. மீதி பிப்டி பர்சென்டேஜ்.. அவங்க உழைப்பில் தான் சாதித்தாங்க என்று ஒத்துக்கணும். அது இப்போ நமக்கு ஹெல்ப் செய்யுது. ரொம்ப அலட்டிக்காம.. உடம்பை ஆட்டி.. காதலாய் பார்த்த போதும்.. அதுதான்.. பாலிவுட் டான்ஸ்!” என்கவும், அந்த நிலைமையிலும் நவ்யாவிற்கு சிரிப்பு பொங்கியது.

 

ஜீப்பின் மேல் சிலர் அமர்ந்திருக்க.. அதன் முன் விளக்கு எரிந்துக் கொண்டிருக்க.. அதன் வெளிச்சத்தில்.. சர்க்கஸை சேர்ந்த சிலர் நின்றிருந்தார்கள். கரண் மற்றும் நவ்யாவை பார்த்ததும்.. இராணுவ வீரன் ஒருவன்.. சர்க்கஸ் முதலாளியிடம் செல்ஃபோனை வாங்கி.. அதில்.. பாலிவுட் இந்தி பாடல் ஒன்றை ஒளிப்பரப்பினான்.

 

‘Bhole chudiyan

Bhole kangana..

Haaye main ho gayi teri saajna

Tere bin jiyo naiyo lag da.. Mein te margaiya

Le jaa le jaa..

Dil le jaa le jaa

La jaa le jaa oh..’

 

சிறு வயதில் இந்தி பாடலுக்கு ஆடியிருந்த கரணுக்கு.. ஷாருக்கான் போன்று முகப்பாவனையுடன் ஆடுவது சிரமாக இருக்கவில்லை. கரணையே பார்த்துக் கொண்டிருந்த நவ்யாவிற்கு.. அவனது கண்களில் வழியும் காதலை பார்த்து.. அவனது நடன அசைவிற்கு ஏற்ப.. அசைவது பெரிதாக படவில்லை. இருவரும் கைக்கோர்த்துக் கொண்டு.. முகத்தில் சிரிப்பும்.. கண்களில் காதலுமாக ஒருவரை ஒருவர் பார்த்தப்படி ஆடினர்.

 

பாடலின் இசை மற்றும்.. இவர்கள் ஆடியதைப் பார்த்து.. மற்றவர்களும் உற்சாகத்துடன் ஆட ஆரம்பித்தார்கள். மற்றவர்கள்.. பாடலில் லயித்திருக்க.. உடலுடன் உடல் ஓட்டியவாறு ஒருவரை ஒருவர் அணைத்தவாறு இருந்த கரணும்.. நவ்யாவும்.. வேறு உலகத்தில் இருந்தார்கள்.

 

பின் இராணுவத்தினரே போதும்.. அனைவரும் சென்றுப் படுங்கள் என்று உத்தரவிடவும், அனைவரும் அவரவருக்கு கொடுத்த தற்காலி கூடாரத்திற்குள் சென்றுப் படுத்துக் கொண்டார்கள்.

 

முதலில் நவ்யாவை உள்ளே போக சொன்ன.. கரண். பின் தானும் நுழைந்தான். ஜீப்பை இழுத்து மூடியவன்.. நவ்யாவிடம் “நவி திரும்பி படுத்துக்கோ.. நானும் திரும்பிப் படுத்துக்கிறேன். கொஞ்ச நேரம் ஆவது தூங்க ட்ரை செய்!” என்றுவிட்டு திரும்பிப் படுத்தான். 

 

நவ்யாவும்.. அவன் சொன்னபடி படுத்தாள். ஆனால் சிறிது நேரத்திலேயே அவள் படுத்திருந்த பக்கம்.. ஷுவின் சத்தம் கேட்கவும், பயந்தவளாய்.. கரணிடம் “நான் உன் பக்கம் திரும்பிப் படுத்துக்கவா..” என்றுக் கேட்டாள்.

 

கரணுக்கும் ஷுவின் சத்தம் கேட்டது. எனவே “ஒகேடா!” என்றான்.

 

அவனது பரந்த முதுகை பார்த்தவாறு படுத்திருந்த நவ்யாவிற்கு சற்றுமுன்.. நடனம் என்ற பெயரில் அவனை அவன் முதுகில் சுமந்து சுற்றியது நினைவிற்கு வந்தது. 

 

நவ்யா மெல்ல “கரண்!” என்கவும், அவன் “ம்ம்!” கொட்டினான்.

 

நவ்யா “நாம் ஆடின பாட்டோட அர்த்தம் தெரியும் தானே..” என்றுக் கேட்டாள்.

 

அதற்கும் அவன் ம்ம் என்றுப் பதிலளித்தான்.

 

நவ்யா மெல்லிய குரலில் பாடினாள்.

 

“தெரே பின் ஜிய்யா நய்யொ லக் தா.. மென் தோ மர்கயா! அதாவது.. நீயில்லாமல் என்னால் வாழ முடியாது.. நான் செத்துருவேன்.”

 

அவனிடம் பதிலில்லை.

 

எனவே நவ்யா “ஏன் கரண் அமைதியா இருக்கே?” என்றுக் கேட்டவள், அவளே பதில் அளித்தாள்.

 

“தெரியும் என்ன சொல்லப் போறேன்னு! எந்த ஹோப்பும் வச்சுக்காதே.. என்றுச் சொல்லப் போறே! அதுதானே!” என்றுக் கேட்டாள்.

 

கரணிடம் இருந்து பெருமூச்சு வெளிப்பட்டதிற்கு அறிகுறியாக.. அவனது பரந்த முதுகு விரிந்து சுருங்கியது. அதைப் பார்த்து நவ்யாவும்.. பெருமூச்சை இழுத்துவிட்டாள்.

 

பின் அவனது முதுகில் தனது ஆட்காட்டி விரலால் கோலமிட்டவாறு “சரி ஹோப் வச்சுக்கலை. ஆனா நடக்கிறதை என்சாய் செய்ய சொல்லியிருக்கே தானே! நீ என்னை லவ் மட்டும் தான் செய்ய சொன்னே! ஆனா அவங்க கிட்ட என்னை வைஃப் என்று இன்டர்டூயூஸ் செய்திருக்கே! இப்போ நான் உன் பொண்டாட்டி! இப்படியே இவங்க கூடவே இருக்க வேண்டியது வந்துட்டா.. குழந்தையும் பெத்துக்கலாமா!” என்று புன்னகையுடன் கேட்டுக் கொண்டே போனவளுக்கு எப்படி என்றுத் தெரியவில்லை. ஒருகழித்து படுத்திருந்தவள், தரையில் மல்லாந்து படுத்திருக்க.. அவளின் மேல் கரண் படர்ந்திருந்தான்.  

 

அவளது இதழை நோக்கி குனிந்தவன், அவளது இதழை தீண்டாமல் நிமிர்ந்து மூச்சு வாங்கினான். அவளது முகத்தை பார்த்தவாறு இருந்தவன், சிறு துயரத்துடன் விலகி படுத்தான்.

 

 நவ்யா இன்னும் திகைப்பு விலகாமல் படுத்திருந்தாள்.

 

 கரண் கூடாரத்தின் மேற்கூரையை பார்த்தவாறு “நீ டாக்டர் தானே! என்னமோ குழந்தை பெத்துக்கலாம் என்று ஈஸியா சொல்லிட்டே! குழந்தையை கடையில் வாங்க முடியாது என்று உனக்கு தெரியும் தானே!” என்றவனின் குரல் கரகரத்தது.

 

 அதைக் கேட்டு.. நவ்யாவின் முகம் வெட்கத்தில் சிவந்தது.

 

 அவளது சிவந்த முகத்தை பார்த்த கரணின் முகம் கசங்கியது. 

 

“நாம் பிரிவதாக இருந்தால்.. அதை ரொம்பவும்.. கடினமாக்கிராதே நவ்யா!” என்றான்.

 

 அதைக் கேட்டவளின் முகத்தில் வேதனை பரவியது. முகம் சுருங்கியவளாய் அவனுக்கு முதுகை காட்டிப் படுத்துக் கொண்டாள்.

 

 கண்களில் கண்ணீர் பெருக அதை அதன் போக்கில் விட்டு.. “எல்லாத்திலும் பாஸிட்டிவ்வா பேசற நீ.. இதுல மட்டும் ஏன்.. இப்படிப் பேசறே! உன் உயிரை காப்பாத்தி.. இந்தியாவிற்கு அனுப்புவேன்னு உறுதியா சொல்ற நீ! இந்த விசயத்தில் ஏன் அப்படி இருக்க மாட்டிங்கிறே! நான் உன்னை லவ் செய்துட்டேன். அதை நீ ஏத்துக்கலைன்னா நான் வருத்தப்படுவேன்னு.. சரி.. நான் இங்கிருந்து போகிற வரை.. லவ் செய்யலாம் என்று லவ் செய்யறீயா!” என்றுக் கேட்டாள்.

 

 அதைக் கேட்ட கரண் “டு யு வான்ட் டு சீ மை ஹர்ட்டிங்! தென் யு சக்ஸீடு! ஆனா அதுக்கு உன்னை குற்றம் சொல்ல மாட்டேன். பிகாஸ் ஐ டிசர்வ்டு!” என்றுக் கூறியதைக் கேட்டதும்.. நவ்யாவையும் மீறி விசும்பல் ஒலி எழுந்தது.

 

 அதைக் கேட்டு திடுக்கிட்டு அவள் புறம் திரும்பிய கரண் அவளது பின்னால் இருந்து அவளை இறுக கட்டிக் கொண்டு.. தன் புறம் மேலும் இழுத்து இறுக அணைத்தான்.

 

 பின் நவ்யாவின் பின்னால் இருந்து அவளது தோள்வளைவில் முகவாயை வைத்துக் கொண்டு கரண் “நீ எத்தனைத் தரம் கேட்டாலும் சொல்கிறேன் நவி! நானும் ஒவ்வொரு தரமும்.. சொல்லும் போது எதாவது வழியிருக்கா என்றுத் தேடிப் பார்த்துட்டு தான் இருக்கேன்.” என்றவன், தொடர்ந்து “ஆனா வழி கிடைக்கலை நவி!” என்றான்.

 

 பின் “நான் ஒரு கிரிமினல்! என்னைத் தேடி போலீஸ் என் வீட்டிற்கு போயிருக்கு! அந்த நீயுஸ்.. அன்னைக்கு எல்லா நீயுஸ் சேனலிலும் வந்திருக்கு! போலி பாஸ்போர்ட் யுஸ் செய்து வீட்டிற்கு போனாலும்.. சுற்றியிருக்கிறவங்க என்னை விட்டு வைப்பாங்களா! இங்கே எப்படி சுற்றித் திரிகிற மாதிரி.. இந்தியாவில் வேற ஐடியில் வாழ்ந்தாலும்.. ஒண்ணு தான் நவி! இது எல்லாத்திற்கும் மேல.. என்னை எப்படி உன் வீட்டில் உன் லவ்வர் என்று இன்டர்டுயுஸ் செய்வே! அப்படி எனக்காக நீ வீட்டை விட்டு ஓடி எல்லாம் வர வேண்டாம். அவ்வளவு வொர்த் இல்லை நான்! நீ படித்த படிப்பிற்கு நியாயம் செய்யணும் நவி! புனிதமான தொழில் உன்னுடையது. ஒரு உயிரை காப்பாத்தறது. மனுஷனோட உடம்பில் எதாவது சரியில்லைன்னா.. அதைச் சரிச் செய்து அனுப்பறது என்பது எல்லாம் எவ்வளவு பெரிய விசயம் தெரியுமா! இங்கே கன்னை வச்சுட்டு ஈஸியா அழிச்சுறாங்க! எதாவது மிராக்கிள் நடந்தால்.. நல்லாயிருப்போம் நவி!” என்றான்.

 

 திரும்பிப் படுத்திருந்த நவ்யா தற்பொழுது.. அவனைப் பார்த்தவாறு படுத்து.. அவனது மார்பில் சரண் புகுந்தாள். அவனும் அவளை அணைத்துக் கொண்டான். 

 

 பின் அன்றிரவு முழுவதும்.. ஒருவரின் அணைப்பில் ஒருவர் தான் இருந்தார்கள். ஆறுதல் கூறினார்கள், முத்தமிட்டு கொண்டார்கள். ஒருவர் சிறிது நேரம் கண்ணயற.. மற்றவர் அவரது முகத்தைப் பார்த்தவாறு படுத்திருந்தார்கள்.

 

 காலை இருள் பிரிய தொடங்குவதற்குள்.. இராணுவ வீரர்கள்.. அவர்களை எழுப்பி விட்டு.. சீக்கிரம் இங்கிருந்து கிளம்ப கூறினார்கள். அப்பொழுது துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டது. உடனே அனைவரும் விபரீதம் புரிந்து துரிதமாக கிளம்பினார்கள்.

 

 செல்லும் முன்.. சர்க்கஸ் முதலாளியிடம் அந்த இராணுவ குழுவின் தலைவன் “எங்களைப் போன்று.. மற்ற குழுக்களும் உங்களை நல்லவிதமாக நடத்த மாட்டார்கள். நான் நம்ம நாட்டு படையினரையும் சேர்த்து தான் சொல்கிறேன். யார் கண்ணிலும் படாமல் நாட்டிற்கு பத்திரமாக போய் சேர வேண்டும் என்று ஜீசஸிடம் வேண்டிக் கொள்ளுங்கள்..” என்று அனுப்பி வைத்தார். 

 

 அதைக் கேட்டதில் இருந்து கரணின் முகத்தில் யேசனை படர்ந்தது. அந்த சர்க்கஸ் முதலாளியிடம் பேசியவாறு பஸ்ஸில் ஏறினான். 

 

 அந்

த இராணுவத்தினர் எச்சரித்தது போல்.. அவர்கள் பயந்து போல்.. அவர்களது பயணம் தொடங்கிய அரைமணி நேரத்தில்.. அவர்களது வாகனங்கள்.. உக்ரைன் இராணுவ படையினரால் நிறுத்தப்பட்டது.

 

 



   
Quote
(@sumathi-mathi)
Active Member
Joined: 8 months ago
Posts: 13
 

Wow awesome 



   
rajianbu reacted
ReplyQuote
rajianbu
(@rajianbu)
Admin Admin
Joined: 8 months ago
Posts: 33
Topic starter  

@sumathi-mathi thanks ☺️



   
ReplyQuote
Share: