Forum

Notifications
Clear all

தீ 15

3 Posts
2 Users
1 Reactions
233 Views
rajianbu
(@rajianbu)
Admin Admin
Joined: 8 months ago
Posts: 33
Topic starter  

அத்தியாயம் 15

அமைதியாக நடந்து வந்துக் கொண்டிருந்தவளை‌‌ ஓரக்கண்ணால் பார்த்த கரண் மெதுவாக "ஸாரி.." என்றான்.

நவ்யா திரும்பி அவனைப் பார்த்தாள். கரண் அமைதியாக நேராக பார்த்தபடி நடந்து வரவும்.. தன் காதில் தவறாக விழுந்திருக்கிறது.. என்று காதை தேய்த்தவாறு நடந்தாள்.

கரண் மீண்டும் கூறினான்.

"ஐயம் ரியலி ஸாரி!"

தற்பொழுது நவ்யா திகைப்புடன் பார்க்கவும், அவன் அவளைக் கவனியாதவாறு "நான் இப்படி எதற்கு எடுத்தாலும் கோபப்பட்டு.. திட்டுகிற ஆள் இல்லை. உன்கிட்ட தான் இவ்வளவு கோபமா பேசியிருக்கேன்." என்றான்.

ஏன் என்றுத் தெரிந்த நவ்யா அமைதியாக தலை குனிந்தவாறு நடந்து வந்தாள்.

அவளைத் திரும்பிப் பார்த்தவன், "உனக்கு ஏன் என்று ரிஷன் தெரியும். அதே தான்.. ஆனா என் பொஸிஷனில் இருந்து பார்த்தால்.. கொஞ்சம் வேற மாதிரி தெரியும்." என்றான்.

நவ்யா 'என்ன' என்று ஆர்வத்துடன் பார்க்கவும், கரண் தனது வழக்கமான முறுவலுடன் "அது என்னவென்று நீ தெரிஞ்சுக்க தேவையில்லை." என்றுவிட்டு முன்னே நடந்தான்.

கரணின் பழைய முறுவல் திரும்பி வந்ததில் நவ்யா சந்தோஷப்பட்டாலும்.. மீண்டும் அவனது குதர்க்கமான பேச்சில் சிறு கோபமும் வந்தது.

எனவே நவ்யா "நான் ஒண்ணும் அவ்வளவு ரோஷமில்லாதவ இல்லை. நான்தான் உங்களை டிஸ்டர்ப் செய்ய மாட்டேன்னு.. ப்ராமிஸ் செய்துட்டேனே! அப்பறம் என்ன! நீங்க கோபப்பட்டு.. நான் உங்களை‌ வெறுக்கிற மாதிரி செய்ய வேண்டாம்." என்றாள்.

அதைக் கேட்ட கரண் "இதைத்தான் சொன்னேன். முதல்ல எப்படியோ.. ஆனா இப்போ நீ நினைப்பது வேற மாதிரி.. நான் நினைப்பது வேற மாதிரி.." என்றுச் சிரித்தான்.

அதற்கு நவ்யா "அதைத்தான் நான் தெரிஞ்சுக்க தேவையில்லனு சொல்லிட்டிங்களே.." என்று முறைத்தாலும்.. கரணின் முன்னுக்கு பின் முரணான நடவடிக்கையின் காரணமாக குழப்பமுற்றாள்.

நவ்யாவின் குழப்பம் அவளது முகத்தில் தெட்ட தெளிவாக தெரிந்தாலும்.. அதைக் கண்டுக் கொள்ளாத பாவனையுடன் கரண் "ரைட்.." என்றுவிட்டு தொடர்ந்து நடந்தான்.

சிறு குன்று போல் இருந்த பகுதியில் அடர்ந்து புதர்கள் வளர்ந்திருக்க.. அதன் மறைவில் மறைந்தவாறு ஏறிக் கொண்டிருந்தார்கள். அதன் உச்சிக்கு வந்ததும்.. தார்சாலை அவர்களது கண்ணில் பட்டது. அதைக் கண்டு மகிழ்ந்தார்கள். இருவரும் அதே மகிழ்வுடன்.. சாலையை நோக்கி சென்றார்கள்.

ஆனால் சாலையில் இறங்க முற்பட்ட நவ்யாவை கரண் தடுத்தான்.

"வேண்டாம் நவ்யா! இங்கேயே புதர் கிட்டவே மறைஞ்சு இருப்போம். யார் வராங்கனு பார்த்துட்டு‌ வெளிப்படலாம்." என்று எச்சரித்தான்.

அவன் கூறுவது சரியாக பட.. நம்பிக்கையும், பதட்டமுமாக அவனுடன் காத்திருந்தாள்.

சிறிது நேரத்தில் கை மறைவில் கொட்டாவி விட்டவளை கரண் திரும்பிப் பார்க்கவும், நவ்யா அசட்டு சிரிப்புடன் "ரொம்ப நேரம் நடந்துட்டு இருந்தோமே.. அதனால வந்த டையர்ட் அவ்வளவு தான்!" என்று தலையை ஆட்டவும், அவனும் தலையாட்டி விட்டு சாலையை பார்த்தான்.

நவ்யா மெல்ல "அப்போ.. நீ" என்றுவிட்டு தயங்கவும், கரண் "என்ன கேட்கணுமோ கேள் நவ்யா.." என்றான்.

நவ்யா "அப்போ.. என்னை எதாவது வண்டியில ஏத்திட்டுட்டு நீ போயிருவேன்னு சொன்னியே! முதல்ல கூட.. எம்பஸில என்னை ஒப்படைப்பேனு சொன்னே! அப்பறம்.. இரஷ்யன் ஆர்மீஸ் ஊடுருவிட்டாங்கனு தெரிஞ்ச போதும்.. சேஃப்பான இடத்துல ஒப்படைக்கணுன்னு சொன்னே! அப்போ நீ எங்கே போக போறே?" என்றுக் கேட்டாள்.

அதற்கு கரண் "நான் பெரலஸ் போகலாம்னு இருக்கேன். இதை சொல்ல கஷ்டமா தான் இருக்கு.. ஆனா டோனிக்கு செய்த ஏற்பாட்டை நான் யூஸ் செய்துட்டு.. அங்கே போக போறேன். அங்கிருந்து‌ அவருக்கு ஏற்பாடு செய்து வைத்திருந்த அரேன்ஜ்மென்ட்ஸ் மூலம்.. என்னால் வெளியேற‌ முடியாதான்னு பார்க்கணும். ஆனா அவரோட ஐடியை யூஸ் செய்ய முடியாது. அதுனால நான் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்தி வச்சுருக்கிற பணத்தை வச்சு வேற ஐடி ஓப்பன் செய்யலானு இருக்கேன். லெட்ஸ் சீ.." என்றுச் சிறு பெருமூச்சுடன் கூறினான்.

அதற்கு நவ்யா "ஹோப் ஆல் குட்.." என்றாள்.

கரண் சிறு முறுவலுடன் "தேங்க்ஸ்" என்றான்.

மாலை நெருங்கிய வேளையே வந்துவிட.. எவரும் வரவில்லை. சோர்ந்தமர்ந்தவளுக்கு தூக்கம் கண்களை சுழற்றியது.

அவளையே பார்த்துக் கொண்டிருந்திருப்பான் போல.. "அந்த துணியை விரித்து படு நவ்யா!" என்றான். சரி என்றுப் படுத்தவளுக்கு உறக்கம் வரவில்லை. சிறிது நேரம் இமைகளை மூடிப் படுத்து பார்த்தவள்.. எழுந்து அமர்ந்துவிட்டாள். கரண் கேள்வியாக பார்க்கவும் "தூக்கம் வரல.." என்றாள்.

ஆனால் சிறிது நேரத்தில் சில்லென்று வீசிய காற்றில் பெரிதாக கொட்டாவி விட்டவளின் கண்கள் மீண்டும் சொருகியது. அதைப் பார்த்தவன் "வேணுன்னா என்‌ மடியில படுத்துக்கோ.." என்றான்.

திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தவளைப்‌ பார்த்து சிரித்தவன், "அதுதான் உன் மனசுல தோன்றின லவ்விற்கு மூடுவிழா செய்திட்டியே! அதுனால எனக்கு எந்த தயக்கமும் இல்லை. தப்பாகவும் தெரியல." என்றான்.

ஆனால் நவ்யா மறுப்பாக தலையசைத்து விட்டு.. கரத்தில் கன்னத்தை தாங்கியவாறு வேடிக்கை பார்க்க ஆரம்பிக்கவும், கரண் அதற்கு மேல் வற்புறுத்தவில்லை.

சிறிது நேரம் சென்றிருக்கையில்.. வாகனம் வரும் சத்தம் கேட்கவும், கரண் பரபரப்பும் உன் மெல்ல புதரில் இருந்து எழுந்து பார்த்தான். சற்று தூரத்தில் பைக் ஒன்று வேகமாக வந்துக் கொண்டிருந்தது.

உடனே கரண்.. அவளை அங்கேயே இருக்க கூறிவிட்டு.. புதரில் இருந்து வெளிப்பட்டு இரஷ்யன் மொழியில் ஏதோ கத்தியவாறு சாலையின் நடுவில் நின்றான்.

அந்த பைக்கும் அவனருகே வந்து வேகத்தை குறைத்து நின்றது. அவனிடம் எதோ கேட்டான். அதற்கு அவனும் ஏதோ கூறினான். பின் அவளைச் சுட்டிக்காட்டி கரண் ஏதோ கூறவும், அவன் சம்மதமாக தலையை ஆட்டினான்.

அவர்கள் பேசியது புரியவில்லை என்றாலும்.. கரண் அவனிடம் என்ன கேட்டிருப்பான் என்று நவ்யாவிற்கு புரிந்தது. அவனுடன் தன்னை அனுப்புகிறான். அவனுக்கு அவள் பாதுகாப்பாக இந்தியாவிற்கு போய் சேர வேண்டும்.. அவ்வளவுத்தான்! அவள் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே.. அவளருகே வந்தவன், "நவ்யா! பார்டர் புல்லா இரஷ்யன் ஆர்மீஸ் ஆக்கிரமிச்சுட்டாங்க! அவங்களைத் தாண்டி சிட்டிக்குள்ள போவது டேன்ஞ்ர்! அதுனால இவர்.. இரஷ்ய எல்லைக்குள்ள புகுந்து.. வேற வழியாக கார்கீவ் சிட்டிக்குள்ள போக போகிறாராம். அவரோட வைஃப் மற்றும் இரண்டு பசங்க வீட்டில் இருப்பதால்.. அங்கே தான் போக போகிறார். நீ அவரை நம்பலாம்.. நீ அவங்க கூடப் போ..” என்றான்.

உடனே நவ்யா “நீ சொன்னபடியே அவர் கூடப் போறேன் கரண்..” என்றாள்.

அதைக் கேட்டு ஒரு நொடி திடுக்கிட்ட கரண்.. பின் அவளிடம் “அவரை நம்பலாம். அவரோட பேமலியை அவர் பார்த்தாகணும். அதுனால கண்டிப்பாக கார்கீவ் சிட்டிக்கு போவார். உன்னையும் பாதுகாப்பாக கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டார்.” என்றான்.

நவ்யா “உன்னை நம்பறேன் கரண்! நீ சொன்னதால் அவர் கூடப் போறேன்.” என்றாள்.

அவளை கண்ணிமைக்காமல் பார்த்த கரண் “லிசன் நவ்யா! அவரை நம்பலாம். டூவிலர் வச்சுருக்கார். அதில் அவர் வைத்திருக்கிற லக்கேஜ் போக.. ஒருவர் தான் கூடப் போக முடியும். இந்த வழியாக நிறையா தரம் போய் வந்திருக்கிறார். அதனால் அவருக்கு எக்ஸ்பீரியன்ஸ் அதிகம்.” என்றான்.

அதற்கு நவ்யா “அதுதான் சொன்னேனே கரண்! நீ சொன்னதால் அவரை நம்பறேன். அவர் கூடப் போக நான் ரெடி! பட் எனக்கு ஒரு பிராமிஸ் செய்! நீ எப்படியாவது சேஃப்பா பெரலாக்ஸ் நாட்டிற்கு போய் சேரணும்.” என்றாள்.

மீண்டும் அவளைப் பார்த்தவனின் பார்வையில் இருந்ததை.. நவ்யாவினால்.. உணர முடியவில்லை.

அதற்குள் பைக்கில் அமர்ந்திருந்தவர் நேரமாகிவிட்டது என்று அவசரப்படுத்தினர். அவரையும் நவ்யாவையும் மாறி மாறி பார்த்த கரண்.. அவரிடம் ஓடிச் சென்று ஏதோ கூறவும், அவர் இருவரையும் பார்த்து சிரித்துவிட்டு.. ஏதோ இரஷ்ய மொழியில் கூறிவிட்டு பைக்கை கிளப்பிக் கொண்டு சென்றார். நவ்யா தான் நடப்பது புரியாமல் குழப்பத்துடன் நின்றாள்.

அவளைப் பார்த்தவாறு மெதுவாக நடந்து வந்த கரண் “அவர் சொன்ன ரூட்டில் நடந்து போவது ரொம்ப கஷ்டம்! அதுனால பெரலாக்ஸுற்கு என் கூட வறீயா?” என்றுக் கேட்டான்.

அதற்கு நவ்யா “அங்கே போனதும்.. அங்கிருந்து என்னை இந்தியாவிற்கு அனுப்பிருவியா?” என்றுக் கேட்டாள்.

கரண் “ம்ம்! அனுப்பிறேன்..” என்றவன், தொடர்ந்து “அப்பறம்?” என்றான்.

நவ்யா புரியாமல் அவன் கூறியதையே திருப்பிக் கூறினாள்.

“அப்பறம்?”

கரண் “உன்னைத் தேடி நான் இந்தியாவிற்கு பின்னாடியே வரணுமா?” என்றுக் கேட்டான்.

அவள் அன்று கூறிய வார்த்தைகளை அவன் கூறவும்.. என்ன ஏன் என்றுப் புரியாமல்.. எதையும் அனுமானிக்க முடியாமல் கேள்வியாய் அவனையே பார்த்தாள்.

கரண் “ஏன் அப்படிச் சொன்னே?” என்றுக் கேட்டான்.

நவ்யா “என்ன?” என்றுக் குழப்பத்துடன் கேட்கவும், கரண் “நீ போறது அவர் கூட.. அவரை நம்பிப் போகலாமினு நான் லைன்னா ரிஷன் அடுக்கிட்டு இருக்கேன். ஆனா நீ திரும்பி திரும்பி.. கீறல் விழுந்த ரிக்கார்ட் மாதிரி.. நான் சொன்னதால் போகிறேனு சொல்றே! அந்த வார்த்தைக்கு என்னை எப்படி ஹர்ட் செய்ததுனு தெரியுமா?” என்றுக் கேட்டான்.

நவ்யா “ஓ! என்னை சேஃப்பா இந்தியாவிற்கு அனுப்பறேன்னு பிராமிஸ் செய்திருக்கே இல்ல! அதுனால அப்படிச் சொன்னேன். இங்கே எனக்கு நீ மட்டும் தான்! அதை மீன் செய்து தான் அப்படிச் சொன்னேன். நீ என்ன சொன்னாலும் செய்வேன்.” என்றாள்.

கரண் “அதுக்கு அர்த்தம் என்னென்னு தெரியுமா..” என்று அவளைப் பார்த்தவாறு கேட்டான்.

அவனது பார்வை அவளை ஏதோ செய்ய.. நவ்யா தலையை குனிந்தவாறு “எனக்கு தெரியும். நீ கேட்டதால் தான் சொன்னேன். நானும் என் மனசை மறைக்கவும், உன்னை மறக்கவும், வெறுக்கவும்.. ட்ரை செய்யறேன். நீ எனக்கு ஒன்றும் இல்லை.. சாதாரண பாஸிங் க்ளோவுட் மாதிரினு எவ்வளவோ என் மனசுக்கு சொல்லிப் பார்த்துக்கிறேன். ஆனா சில சமயம் இப்படி வெளி வந்திருது.” என்றாள்.

அவளது வதனத்தை ஒரு விரலால் தொட்டு நிமிர்த்தியவன் “நானும்.. உன் ரூட் வேற என் ரூட் வேறனு.. மனசை திருப்பி விட ட்ரை செய்யறேன். இப்போ.. வேற ரூட் வழியா உன்னை அனுப்பி விடவே ட்ரை செய்தேன். ஆனா நீ என்னை விட மாட்டேன்கிறே! நானும் எவ்வளவு தரம் தான் என்னை கன்ட்ரோல் செய்வது! கோபத்திற்கு பின்னாடியும்.. கிண்டலுக்கு பின்னாடியும் ஒளிஞ்சுகிறது.” என்றான்.

தற்பொழுது நவ்யா புரிந்தும் புரியாமலும் அவனைப் பார்க்கவும், “என்னைப் பற்றி என்ன, எது என்றுத் தெரியாமல் ஒரு பெண்.. லவ் செய்து.. அந்த லவ்விற்கு நியாயம் செய்ய.. பல காரணங்களை அடுக்குவதும்.. என்னை மறக்க முடியாம திணறவதைப் பார்த்துட்டு.. எனக்கு அந்த பெண் மேலே லவ் வரலைன்னா.. எனக்கு மனசு என்று ஒன்று இருந்து ப்ரோஜனம் இல்லை நவ்யா..” என்றவன், அடுத்த கணம் குனிந்து அவளது இதழை ஆக்ரமித்தான்.



   
Quote
(@sumathi-mathi)
Active Member
Joined: 8 months ago
Posts: 13
 

Wow awesome 



   
rajianbu reacted
ReplyQuote
rajianbu
(@rajianbu)
Admin Admin
Joined: 8 months ago
Posts: 33
Topic starter  

@sumathi-mathi நன்றி ☺️



   
ReplyQuote
Share: